போட்டிகளை நடத்துகையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் (Pottigalai Nadathugayil Pinpatra Vendiya Valimuraigal)

(Instructions to Conduct Competitions in Eluthu)



உங்கள் போட்டிகளை எழுத்து தளத்தில் நடத்துகையில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:


1. எழுத்தில் போட்டிகள் நடத்த விரும்பும் உறுப்பினர், போட்டிகள் நடத்த தேவையான அனைத்தையும் தளம் உருவாக்கியுள்ளது.


2. போட்டி சமர்ப்பிக்கும் பகுதியில் நீங்கள் நடத்த விரும்பும் போட்டியின் தலைப்பை தரவும்.


3. நீங்கள் நடத்த விரும்பும் போட்டியின் விதிமுறைகளை எண் வரிசைப்படி சமர்ப்பிக்கவும்.


4. மேலும் நீங்கள் அளிக்கும் பரிசு தொடர்பான விவரங்களை தெளிவான முறையில் பதிவிடவும்.


5. போட்டி ஆரம்ப நாள் மற்றும் இறுதி நாள் ஆகியவற்றை அளிக்கவும்.


6. முடிவு அறிவிக்கப்படும் நாள், போட்டி இறுதி நாளிலிருந்து குறைந்தபட்சமாக ஒரு வாரத்திற்குள் இருப்பது நல்லது.


7. போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் படைப்புகள் நீங்கள் நடத்தும் போட்டியின் பக்கத்தில் உள்ள "இந்த போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட படைப்புகள்" பக்கத்தில் பதியப்படும்.


8. அங்கு நீங்கள், போட்டியாளர்கள் சமர்ப்பித்த படைப்புகளை படிக்கவும் பரிசுக்கு தேர்ந்தெடுக்கவும் இயலும்.


9. போட்டி தொடங்கும் நாளிலிருந்து இறுதிநாள் வரை வெற்றியாளரை தேர்வு செய்ய இயலாது. இறுதி நாளுக்குப் பிறகே போட்டி நடத்துபவரால் முடிவுகளை தேர்வு செய்ய இயலும்.


10. மேலும் விவரங்களுக்கு எழுத்து குழுமத்தை கேள்வி பதில் பகுதியில் தொடர்பு கொள்ளவும் .





மேலே