கீழடி தொன்மை
−−−−−−−−−−−−−−−−
பண்டையர் குலமாகப் பாரினில் தோன்றி//
பண்புள்ள குலமாகப் பாரினை உயர்த்தி//
எங்கெங்கும் எச்சத்தை மிச்சமாகத் தூவி//
எதிரிகள் இல்லாத நல்வழி புகுத்தி//
உலகின் முதலாய் மூலத்தின் வடிவாய்//
வாழ்ந்த குலமே எங்கள் குலம்//
எண்ணாயிர ஆண்டுக்கு முன்னேக் கல்வியிலுயர்ந்து//
சங்கங்கள் வைத்து தமிழைப் போற்றியகுடி//
செம்பினில் கலங்களைச் செய்து வாழ்ந்தகுடி//
பெண்ணுக்கு சரிநிகர் பகன்றப்பண் ணேற்றுக்குடி//
மட்கலத்துள் மக்காத்தன்மை அறிந்த மங்களக்குடி//
இறைவனால் ஆண்டு, இறைவனைச் சமைத்தகுடி//
நாகரீகத்தின் உண்மை எதுவெனச் சொன்னகுடி//
வைத்திய, தத்துவ, அறிவியலை அறிந்தகுடி//
சாட்சியாய் உலகுதரும் தொல்லியல் ஆய்வின்வழி//
கீழடிபோல் உலகம் முழுதும் வாழ்ந்தகுடி......
−−− ப.வீரக்குமார், திருச்சுழி.