எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் மொழியின் பெருமை :


தமிழில் கவி வடித்த புலவர்களுக்கு, தங்கள் கவித்திறன் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையை வரும் வரிகளில் காணலாம் ..

"இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும் 
 அம் என்றால் ஆயிரம் பாட்டு ஆகாதோ - சும்மா  
 இருந்தால் இருப்பேன் எழுந்தால் மேகம் 
 பொழிந்தால் கவிகாள மேகம் "

#வரதன் என்ற காளமேக புலவர்

இவர் மோகனாங்கி என்ற பெண்ணை மணம்முடிக்க,வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது .  

மேலும்

ரசித்தேன் 14-Apr-2016 2:51 pm

தமிழ் மொழியின் பெருமை :

இல்லறம் தொடாத ஒரு சமணத்துறவி,
எட்டு மனைவியரை மணமுடித்த சீவகனைப் பற்றி,
காதல் ததும்ப இயற்றிய காப்பியம் சீவகசிந்தாமணி என்பதை 
மறக்க முடியுமா ? 
இந்த ஆற்றல் தமிழ்ப் புலவனுக்கே உரித்தானது என்பதை,
மறுக்க முடியுமா ?  

#திருத்தக்கதேவர்  

மேலும்

சிலப்பதிகாரம் தந்த இளங்கோ சமண அடிகளா மணிமேகலை சாத்தனார் புத்த அனுதாபியா அல்லது சீவக சிந்தாமணியின் திருத் தக்க தேவர் சமண முனிவரா என்பதில் நமக்கு அக்கறை இல்லை . அவர்கள் மதம் அவர்களை வானுலகிற்கு இட்டுச் சென்றிருக்கக் கூடும். ஆனால் அவர்கள் இலக்கியம் என்றும் நம்மைத் தமிழ்த் தேனுலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கும் . இவர்கள் தமிழர் என்பதிலும் இவர்கள் தமிழிலும்தான் நமக்குப் பெருமை. அன்புடன்,கவின் சாரலன் 28-Apr-2016 5:40 pm
தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி நண்பரே ! 28-Apr-2016 11:13 am
உண்மை தான் சார் ! புலவர்கள், மதுரை தமிழ்ச் சங்கத்தில், திருத்தக்கதேவரை தூண்டிப் பார்க்க, கிடைத்தது ஒரு காப்பியம் ! தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி சார் ! 28-Apr-2016 11:13 am
உண்மை தான் நண்பரே ! சீவக சிந்தாமணி, கத்திய சிந்தாமணி, சந்திர புராணம், பதி புராணம் முதலிய வடமொழி நூல்களை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்ட காப்பியமே .. தங்கள் வாழ்த்துக்களில் மகிழ்ச்சி ! 28-Apr-2016 11:09 am

மேலே