அன்பு எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பை நாம் நம் வாழ்வில்

நிரந்தரமாக்கிக் கொண்டால்
உலகம் நம் வசம் தான்.

மேலும்

வேதனைகளைச் சாதனைகளாக்கவும்

பகைவரை வெற்றி கொள்ளவும் அன்பு அவசியம் தேவை.

மேலும்

உறவுகள் மேம்பட,

உரிமைகள் பலப்பட,
பிறரிடம் அன்பு காட்டிட வேண்டும்.

மேலும்

அன்பு என்று நினைக்கும் இதயமே
உன் இதயம் தேடும் அன்பு எங்கோ?

உயிரோடு கலக்கும் காற்றாக
இருப்பாயோ 
உறவாக வந்து தாலாட்டும்
இசையாக  இருப்பாயோ

கல்லும் மண்ணும் கலந்த
பொம்மையென இருப்பாயோ
கடலும் வானும் கலந்த நீல
நிறமாக இருப்பாயோ

மண்ணோடு விளையாடும் மலரோ
வானோடு விளையாடும் காற்றோ

பொன்னோடு உறவாடும் பெண்ணோ
பொழுதெல்லாம் நிலலாடும் கனவோ...!


எடுத்தவனுக்கும் எழுதியவனுக்கும் தெரியவில்லை அது உயிரென்று

மேலும்

*அம்மா....*
இயற்கையால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான உயிர் அம்மா...

மனிதனால் படைக்கப்பட்ட அற்புதமான அதிசயமான வார்த்தை அம்மா...

மூச்சுக்காற்றை கொடுத்து 
தன் மூச்சை பற்றி கவலைக்கொள்ளத தவம் நீ...

நிலத்தில் நீ அமர்ந்து
பிள்ளைக்கு மடியை மெத்தையாக்கும் சுகம் நீ...

உலகம் சுற்றி பார்க்க ஆசையிருந்தும்
தன் பிள்ளையே உலகம் என சுற்றித்திரியும் வரம் நீ...

உன் இமை விட்டு நீங்காமல் இருக்க
இரா பகல் வேறுபாடில்லா 
காலம் நீ...

ஸ்வரங்கள் ஏழும், ராகங்கள் பதினாறும் 
உன் பாட்டுக்கு கண்ணுறங்கும் சங்கீதம் நீ....

மரணம் எதிர்நின்றால் கூட நான் மரணத்தை வென்றவள் என்று மரணத்தையே அஞ்சவிடும் கட்டளை நீ...

நூல் சேலைக்கு சேவை செய்யும் ஆனால் என் சேலை என் பிள்ளைக்கு மட்டுமே சேவை செய்யும் என்ற உணர்வு நீ....

மிதிக்க தெரியாது எனக்கு
உன் மார்பகம் சுரந்த அமிர்தம் என்னில் குருதியாய் இருக்கையில் என்  அனைத்தும் நீ...

ஆயுள் துவக்கம் கொடுத்து
ஆயுள் முடிவுவரை கவனிக்க சொல்லி பொறுப்புகளை துணைவியிடம் தாரைவார்க்கும் குணம் நீ...

எல்லா உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும் என்றுமே உயர்வு நீ....

*அன்புடன் அம்மாவின் அடிமை 
                          நாகராஜ்....*

மேலும்

"அன்பு என்னும் மருந்து
எந்த துன்ப நோயையும்
குணப்படுத்தும்."

மேலும்

பூக்களை  பார்க்கும் போது எல்லாம் அவரை நினைக்க,
என் நினைவுகள் எல்லாம் அவர் இருக்க, விடியலின் பொழுது
மொட்டுகளின் மீது விழும் பனித்துளி போல், மெதுவாக மலர்கிறது என் மனம் அவரை நினைக்க,
ஏற்றி வைத்த மெழுகுவர்த்தி போல், மெதுவாக உருகினேன்  அவர் நினைவால்..!!!! 

மேலும்

கொஞ்சி காதல் கொண்டு

கரம் பிடித்து உனை சேர்ந்து

என்னை உன்னில் புகுத்தி

மழலை வரம் தந்து தகப்பனாய் மாற்றி விட்டாய் ..

ஒத்த மரமாய் நின்ற எனை தோப்பாய் செழிக்க செய்தாய் ....

நீ நரையில் துளிர்த்த தாரகையடி ...

மரணத்தில் விளிம்பிலும் உன் மார்பை தேடி உன் முந்தானையில் உயிர் நீபேனடி என் கிழட்டு தேவதையே ....

மேலும்

அன்பின்  புரிதல் இல்லாமல் இரு உறவுகள் நீண்ட நாள் பழகுவது கடினம்.......!



மேலும்

மேலும்...

மேலே