எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் அப்படிதான் !!!

நடுஜாமத்தின் மீது அப்படி என்ன பிரியமோ! எந்நாளும் கூகைக்கு போட்டியாய் கண்விழித்துகொண்டு திக்கற்ற மனநிலையோடு உலாவுவாள் இந்த அமலா!!! பின்னர் என்ன சிதறிய மழைத்துளிகளோடு ஏகாந்த வாதமிடுவாள் - ஏற்பட்ட வெள்ளத்திற்கு காரணம் சிதறிய உன் மழைத்துளி மட்டும் அல்ல சிதறிய என் கண்ணீர் துளிகளும்தான் என்று !!  

- கௌசல்யா சேகர் 

மேலும்

நிலவு

நிலவே உன்றன் நீசமுகம் நீக்கேன் 

இலகாய் வரட்டும் இப்போதே நல்விடியல்

நாள்கிழமை யாவும் நகராமல் நிற்கட்டும்

நீள்பகலில் வையம் நனையட்டும் 

பாக்க ளெல்லாம் புத்துயிர் பெறவே!

மேலும்

"உதடுகளும், பற்களும், 👄💋
நாக்கின் அருகில்  
இருந்தாலும், 👅

ஒன்று பாதுகாக்கிறது! 😇 
மற்றொன்று கடிக்கிறது! 😠

இதுதான் இயற்கையோ? 🧐"

மேலும்

"மரணம் தழுவும் பொழுது, 
உணர்வுகள் நழுவும் பொழுது,
கொடும் தணல் உடல் குற்றங்களை
கழுவும்  பொழுது, 
உயிர் உண்மை துறவறத்தை 
வழுவுமோ?"

மேலும்

வீதியில் என்னுடைய ஆக்கிரமிப்பு இருந்த காலம் மாறி, 
வீட்டிற்கு ஒரு மரம் வளரப்போம் என்பது விதியா?? 
இல்லை 
மனிதன் தனக்கு தானே வகுத்த
 சதியோ????? 
-Annapssubbiah 

மேலும்

காற்றில் பறந்து வருகிறேன்
கவிதை மொழி கலந்துவிட்டேன்
காதோடு செல்ல என்னைதழுவிய ஓசைகள்
கற்பனையில் மிதந்து விட்டேன்
காற்றில் மண்டலதில் விரைந்தேன்
கனிவான செயல்களில் கைதனேன்
கலைஞானம் மனதில் புலர்ந்தது வர
கலித்தொகை ஏட்டிலே துவங்க கண்டேன்
காற்றின் தாக்கம் மானிட யிரானது
காற்றில் என்னை சுமந்து செல்லும்
கலவரம் காற்றின் சுமைத்தூக்கி
காணதாயிடத்தைத் உணர்ந்து
கவ்வி உறவை கண்டறிந்தேன்!
காற்றே! உன்னை கண்டதில்லை!
காலத்தால் பயனை மானிட வாழ்வன!
கணித்து செல்லாமல் சென்றார் நீ
காற்றின் உயிரும் நீயே! உணர்வும் நீ
கமுழம் மொழியும் நீயே!

மேலும்

"விளைநிலத்தில் விதைக்கத்தான் செய்வார்கள், 
களர்நிலத்தை ஒதுக்கதான் 
செய்வார்கள்,
ஆம்!   (ஏ)மாற்ற முடியாதது 'இயற்கை!". 

மேலும்

அறிவு பாதி உலகத்தை நிறப்பிவிடும் 

மீதியை அன்பும் இசையும் நிறப்பிவிடும்

மேலும்

ஆழி


ஆதிகாலம் முதல்

பெண்கள் வடித்த

கண்ணீரே ஆழி!


உப்புநீரை

உழைப்பாளிகள்

உதிர்த்ததால்

உருவானதோ?


கண்ணீருக்கும்

உப்பு.

கடல் நீருக்கும்

உப்பு.

காரணம் இருவரும்

கன்னியரோ?


ஆழியே உன்

அலைகள் சொல்வதென்ன

கரையேற தொடர் முயற்சி

என்பதையா?


ஆழியே உன்

அடிமடியில் கிடப்பது என்ன?

ஆணிமுத்தா?


ஆழியே உன்

ஓரங்களில் இறைச்சல் எதற்கு

சில அரைகுறைகள்

அலம்பலை உணர்த்தவா?


ஆழியே உன்

அந்தப்புரத்தில்

அமைதி எதற்கு?

அறிவுடையோர் எப்படி

என்பதை அறிவுறுத்தவா?


ஆழியே நீயோ

வெறும் உப்பு நீர்

உணவுபொருள் 

விளைகிறதே?


உயிரினங்கள்

உப்பில் போட்டால்

உயிர்விடும்-ஆனால்

உன்னில் உயிர்கள் எப்படி?


ஆழியே நீ

நெருப்பை அணைப்பாய்

என்று தெரியும்- ஆனால்

ஆதவன் மட்டும்

அணையாமல் எப்படி?


ஆழியே உன் 

ரகசியம் என்ன?

உயிர் உள்ளவரை

உள்ளே வைத்துக் கொள்கிறாய்

உயிரற்றவற்றை

உமிழ்ந்து விடுகிறாய்?


ஆழியே உன்னை

கடைந்தால்

அமிர்தம் கிடைக்குமாமே

எது அமிர்தம்?


ஆழியே உன்னை

கடைந்தால்

ஆலகாலம் கிடைக்குமாமே

எது ஆலகாலம்?


ஆழியே உன்

ஆடை என்ன வண்ணம்

நீல நிறமோ?


ஆழியே உன்

முகம் பார்க்கும் கண்ணாடி

வானமோ?


ஆழியே உன்

நீண்ட கால்களில்

நீர்முத்து சலங்கைபூட்டி

நிலத்தில் நடக்கும் ஓசையோ

அலையோசை?


ஆழியே உன்னை

ஒன்று கேட்பேன்

உண்மையைச் சொல்!

குமரிக்கண்டத்தை

எங்கே ஒளித்து வைத்துள்ளாய்?


ஆழியே உண்மையை

சொல்?

ஆதிமனிதன் தோன்றியது

எங்கு?


ஆழியே உண்மை

சொல்

எமக்கு வியர்த்தால்

உப்பு நீர் வருகிறது

உனக்கு வியர்த்தால்

நல்ல நீர்?


ஆழியே உப்பு

சாப்பிட்டால் சூடு சுரணை

வரும் என்கிறார்கள்!

உன்னில் கழிவுகள்

கலந்தும் உனக்கு வரவில்லையே

எப்படி?


உலை பொங்கினால்

சோறு வெந்து விட்டது

என்று அர்த்தம்.

நீ பொங்கினால்

சுனாமி வந்ததென்று

அர்த்தமோ?


ஆழியே உனக்கும்

காற்றுக்கும் என்ன

தொடர்பு

அவன் கோபப்பட்டால்

உன்னை அள்ளிவந்து

புயலாய் அடிக்கிறான்!


ஆழியே

கப்பலை விட்டுவிட்டு

கட்டுமரங்களையே

சிதைக்கிறாய்

உனக்கும் ஏழைகள்

என்றால் இளக்காரமா?


புஷ்பா குமார்.















மேலும்

புழுதி வாரித் தூற்றும்
சூரைக் காற்றில்
குப்பைகளின்
ஆக்ரோச அணிவகுப்பு
பேய் வருகிறதோ
அஞ்சும் மனமே
நஞ்சை விதைத்து யார்?
நீதானே
தன்னை சுத்தம் செய்ய
காற்றை
துணைதேடும் பூமி
காற்று மாசுபட்டால்
சுவாசம்
தொலைந்து போகும்
இயற்கையோடு பேசுவோம்.

மேலும்

மேலும்...

மேலே