எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சமூக விரோதிகளின் அடையாளம் பணப்பட்டுவாடா.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


தேர்தலில் வென்று கொள்ளையடிக்க நினைப்பவனே வாக்கிற்குப் பணம் கொடுத்து நம்ம இழிவு செய்பவன். பணம் கொடுத்து நமது உரிமைக்கு விலை பேசுபவன் தேச  துரோகி. தேச துரோகிகளும் சமூக விரோதிகளும் ஈனப் பிறவிகள். இவர்கள் நம் பிரதிநிதிகள் ஆனால் நமக்குத்தான் கேவலம். வாக்கிற்கு பணம் கொடுப்பதும் பெறுவதும் சட்டவிரோதம். 

வாக்குப் பெற பணம் தர வரும் கயவர்களைக் காறி உமிழ்ந்து ஒதுக்குங்கள். அவர்களுக்கு சட்டமன்றம் செல்லும் தகுதி இல்லை. அத்தகுதியை அவர்களுக்கு வழங்கி நம்மை நாம் தரம் தாழ்த்திக்கொள்ளக் கூடாது.  

மேலும்

நியாயம் தவறி பிழை செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. மக்களைச் சிந்திக்கவிடாமல் மூளைச் சலவை செய்த ஊடகங்களும் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களுமே இன்று நிலவும் அவல நிலைக்கெல்லாம் காரணம். கற்றவர்களில் பெரும்பாலோரும் பொருளியப் பித்தர்களாக மாறிவிட்டார்கள். கல்லார்க்கும் ஏட்டுச் சுரைக்காய்ப் படிப்பாளிகளுக்கும் நாடு மொழி பற்றிய சிந்தனை இருக்க வாய்ப்பில்லை. மக்களில் பெரும்பாலோர் சுயமரியாதை பற்றிக் கவலைப்படுவதில்லை. உடனடி லாபமே அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. கற்றவர்க்கே தொலைநோக்கு சிந்தனை இல்லாதபோது பாமரர்களின் மனநிலை எப்படி இருக்கும்? தரமில்லாக் கல்வி சிந்திக்கும் திறனைச் சீரழித்துவிட்டது. மனப்பாடக் கல்வி, 100/100 எல்லாம் நல்ல மனிதர்களை உருவாக்குவதில்லை. 15-May-2016 12:41 pm
வாக்குப் பெற்று ஆட்சியில் அமர்ந்தபின் அரசு அளிக்கும் இலவசம் நியாயம்.இதை நீதியும் சட்டமும் அனுமதிக்கிறது . ஆட்சிக்கு வருவதற்கு முன் பிரசாரத்திற்காக சில நோட்டுகளை வழங்குகிறான் . இந்த இலவசத்தை சட்ட விரோதம் என்கிறீர்கள். எப்படி ? ஆணையம் தடை செய்கிறது . சட்டப்படி வழங்குவதும் வாங்குவதும் தவறு என்றே கொள்வோம் . இரண்டு இலவசத்தையும் அனுபவிக்கும் வாக்காளன் பாதி தவறு செய்த குடிமகன் பாதி பயனடைந்த குடிமகன் என்று கொள்ளலாமா ?தானம் கொடுத்த மாட்டை யாரும் பல் பிடித்து பார்ப்பதில்லை . நோட்டை வாங்கிக்கொண்டு நோட்டா வில் பதிவு செய்தால் மனசாட்சி அற்றவனா ? அல்லது மன சாட்சிப்படி யாருக்கும் வாக்களிக்காத நல்ல வாக்காளனா ? சொல்லுங்கள் பேராசிரியரே ! அன்புடன்,கவின் சாரலன் 15-May-2016 10:27 am

மேலே