எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

செழி்ப்பான பூக்கள்

விற்காமல் இருக்கிறது

விதவை வியாபாரி

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

கோவிலில் பூசை

வரிசையாக நிற்கின்றனர்

சுண்டல் வழங்குமிடத்தில்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

மரம் வெட்டியதும்

மரத்தோடு சேர்ந்து விழுந்தது

நிழல்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

நெடுஞ்சாலையில் இறநத நாய்

அடக்கம் செய்கின்றன

காக்கைகள்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

ஏழையின் வயிறு

நிறைந்திருக்கிறது

பசியால்


*கவிதை ரசிகன்*

🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

மேலும்

ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள் 

மேலும்

இமைகள் இமைக்க  மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென 

மேலும்

என் ரசனையின்                  தொடக்க புள்ளியும்,                முற்று புள்ளியும்                      அவள் தான் என்பது,   அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா              ரசிக்க போகின்றாள்!

மேலும்

இயந்திரபிப்  பணி

காலம் என்னை அழைத்தது 
கை அடக்க கைபேசியிலும்
மடி அணைக்கும் கணினியிலும் 
ஓடி போவதற்கும் முடியவில்லை 
தேடி செல்லவும் தெரியவில்லை 
அப்படி ஒரு பரிவு 
இந்த இயந்திரத்திடம்...!

மேலும்

தெவிட்டா காதல்...


எந்தன் ஆடையில் தவழ்வது உந்தன் விரல் தடங்களோ?
உந்தன் மார்பினில் எந்தன் கன்னங்களின் பதிவோ?
எந்தன் கூந்தல் காட்டினில் நுழைவது உந்தன் கள்ள விரல்களோ?
உந்தன் செவிகளைக் கூசுவது எந்தன் மூச்சுப்புயலோ?
எந்தன் இதழ் ரோஜாக்களைத் தைப்பது உந்தன் மீசை முற்களோ?
உந்தன் ஆடை நூலிழையில் பின்னிக்கிடப்பது எந்தன் கருப்புத் தோகைகளோ?
எந்தன் கழுத்தில் மருதாணி வைப்பது உந்தன் இதழின் அழுத்தமோ? 
உந்தன் இச்சைகளைத் தீர்ப்பது எந்தன் உடல் வனப்போ?
எந்தன் கொதிக்கும் உடலிற்கு வேட்கை தருவது உந்தன் தீரா காதலோ?
உந்தன் விரல்களின் இடைவெளி எந்தன் அடைக்கலம் நாடியோ?
எந்தன் வளைவுகளின் நிறுத்தங்கள் உந்தன் ஓய்வுக்குடைகளோ?
உந்தன் அணைப்பின் இறுக்கம் எந்தன் ஆசை வலிகளோ?
நீ பூக்கள் பறித்த பின்னும் மீதமுள்ளது எந்தன் சொல்லா ஏக்கங்களோ?

மேலும்

நிலாவே நீ ...
-----------------
அந்த வானத்தில்
நிலவாய்
இருப்பதை விட

இந்த இருளில்
விளக்காய்
இருப்பதையே

என் மனம்
எப்போதும்
விரும்புகிறது .
மாமுகி .

மேலும்

இறையும் செயலும்
-------------------------------
என்னைச் சுற்றியுள்ள
எல்லாரிடமும் ஓர்
இறைத் தன்மையைப்
பார்க்கிறேன் ...
எனவே
என் செயல்கள் யாவும்
எனக்கு
ஆன்மிகமாகவே தெரிகிறது.
மாமுகி .

மேலும்

அசலே ! உங்களுக்கு இந்த
நகல்களின் அன்பு வணக்கம் !
ஒப்பிலா சூரியன் நீங்கள் !
உங்களிடம் வெப்பம் வாங்கி
ஒளிரத் துடிக்கும் நிலவுகள்
நாங்கள் வாழ்த்தி அளிக்கும்
      வாழ்த்து மடல்
கொங்கு மண்ணிலே மங்கா புகழுடன்
தங்களுக்கென தனி வழி அமைத்திட்ட
தங்கம் நிகர் எங்கள் தலைவரே !
வார்ப்பட உலகின் வரலாறு எழுதினால்
திருப்பும் பக்கமெல்லாம் உங்களின்
திருநாமம் வீற்றிருக்கும் !
மறுசுழற்சிக் கலையாலே மணல் துகளின்
அற்ப ஆயுளையும் அதிசயமாய்
பன்மடங்கு உயர்த்தி விட்ட
மணலின் மருத்துவர் நீங்கள் !
உங்களின் கைகளில்தான்
விருதுகள் மதிப்புறுகின்றன !
உங்களின் தோள்களில்தான்
மாலைகள் மலைப்புறுகின்றன !
உங்களின் மீது மட்டும்தான்
பொன்னாடையும் பொலிவுறுகின்றது !
தோழமை விருதுபெறும் நீங்கள்
காலகாலமாய் வாழ்வாங்கு வாழ்வென
வாழ்த்தும் வயதில்லை எனினும்
வாழ்த்தி வணங்குகிறோம் !

மேலும்

கைபேசி

அலைபேசியில் தொடர்கிற 

ஊடல்கள், சிலர் வாழ்வின் 

மகிழ்வான வாழ்வையும் 

நிலையற்ற வாழ்வாக மாற்றிவிடுகிறது...


           சபீனா பகுருதீன்

மேலும்

மேலும்...

மேலே