எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

அதிகமாக கருத்து பதிந்த எண்ணங்கள்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய காலை வணக்கம்,  சீமை கருவேல மரங்கள் அதிக நீரை உறிஞ்சும் என்பதால், நீர் வளத்தை காக்க அந்த மரங்களை வேரோடு வெட்டிவிடலாமே - மு.ரா.

மேலும்

ஆம் நிச்சயம், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி - மு.ரா. 24-Feb-2017 9:20 pm
ஆம் நிச்சயம் நன்றியை காணிக்கை ஆக்குகிறோம் தங்களுக்கும் .... மு.ரா. 24-Feb-2017 9:19 pm
கருவேலம் வேறு, சீமை கருவேலம் வேறு என்று நினைக்கிறேன். சீமை கருவேல மரங்களை வெட்டுவதால் பலன் இல்லை, முழுவதும் தீயிட்டு எரித்தால் தான் அழியும் என்கிறார்கள். மண் வளத்தையும் நீர் வளத்தையும் மொத்தமாக நாசம் செய்தது இதுதான். தமிழகத்தில் நிறைய இடங்களில் மாணவர்கள் இளைஞர்கள் கருவேல மரங்களை அகற்றி வருகிறார்கள். நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 6:22 pm
அய்யா இது நச்சுமரம். கெடு தரும் அனைத்தையும் நசுக்கி எறியவேண்டும். பட்டாசு போன்ற வெடிப் பொருட்களை வெடித்தும் கொளுத்தியோம் ஆனந்தப்படுவோர் அனைவரும் இயற்கை அன்னையின் பகைவர். 24-Feb-2017 4:41 pm

வாழ வழியற்ற மாநிலமா?

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
நன்றி: "தி இந்து" 23-02-2017

மேலும்

உள்ளத்தில் வேதனை குடிகொள்கிறது ஐயா. மக்களின் போக்கு என்று மாறுமோ தெரியவில்லை. இளையவர்கள் மனதில் மிகப்பெரிய மாற்றம் சல்லிக்கட்டிலேயே தெரிந்தது. சீக்கிரத்தில் பெரும் மாற்றம் உண்டாகும் ஐயா நம்பிக்கையோடு இருக்கிறோம். கருத்திற்கு நன்றி, நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 6:10 pm
நன்றி தமிழ். தமிழரிடை நிலவும் ஒற்றுமையின்மை, தன்மானம் இல்லாமை, மொழிசார்ந்த இன உணர்வு இல்லாமை, மக்களைவிட மதத்திற்கும், கடவுள்களுக்காவும் வரிந்துகட்டிக் கொண்டு வெறியாட்டம் போடுவோரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பது, பிற மொழி பேசும் மக்களிடம் இழிவாகப் படம் பிடித்துக்காட்டும் ஈனப்பிறவிகளும் நம்மிடையே. என்ன செய்வது? இளம் வயதினர் சிந்திக்கவேண்டும். தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ். 24-Feb-2017 6:01 pm
ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றிய ஒரு செய்தி துணுக்கை பார்த்தேன் ஐயா, உள்ளம் குமுறுகிறது. நம் மக்களை மொத்தமாய் அழிக்க செய்கிற திட்டமா இது என்று சந்தேகிக்க தோன்றுகிறது. நம் ஈழத்து மக்களுக்கு நேர்ந்த கொடுமை சொந்த மண்ணில் நிகழுமா என்ற கேள்வி என் மனதில். எதுவாக இருப்பினும் நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 5:35 pm

உன்னை காதலிப்பது மட்டுமே வெட்டி வேலையாய்
செய்து கொண்டு இருந்தவனுக்கு
நீ இப்பொழுது புது வேலை ஒன்று வாங்கி தந்து இருக்கிறாய்...
உன் அழகின் சிபாரிசு மூலம்
ஆம்
உனைப்பற்றி 'கவிதை' எழுதும் வேலை

மேலும்

நன்றி..நண்பரே..MOHAMED SARFAN 21-Feb-2017 5:39 pm
ஆயுள் முடியும் வரை கவிதைகள் காதலால் வாழ்க்கையில் பயணிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Feb-2017 1:21 pm

மாட்டின் மூக்கணங்கயிறு விவசாயின் தூக்குக்கயிறாகின்றதோ...
ஒவ்வொறு விவசாயின் சாவு நாட்டை நாசமாக்கும் புற்று நோவு..

மேலும்

உண்மை தான் 21-Feb-2017 1:25 pm

உறங்கும் பொழுதுகளில்  கனவாய் வந்து  'கொல்'கிறாய்
உறங்கா  பொழுதுகளில் நினைவாய் வந்து ' கொல்' கிறாய்
ஓ !
நான் உன்மேல் காதல்கொண்டேன் என்பதற்காகவா .....

மேலும்

அருமை 21-Feb-2017 1:30 pm

உன் மூச்சு காற்று பட்டதையெல்லாம் முன்னூறு முறை தொட்டுப்பார்ப்பேன்..!
உன் விரல் பட்டதைஎல்லாம் வினாடிக்கு ஒரு முறை தொட்டுப்பார்ப்பேன்
நீ முத்தமிட்டு தந்த (சாக்லேட்)...
நான் என்ன செய்வேன் என்பதை
உன்னால்  யூகிக்கவே முடியாது....

மேலும்

கற்பனை செய்வாள் உம்மை காலித்தவள் 21-Feb-2017 1:28 pm

உன் முகப்பருக்கள் அனைத்திற்க்கும்
'முத்து' என பெயரிட்டு கொள்ளவா...

உன்னோடு ஒட்டிக்கொண்டும்
உறவாடி கொண்டும் இருக்கட்டுமே...

நான் சொன்ன 'முத்து'  நவரத்தினங்களின் முத்து

மேலும்

பெண்ணழகு இதமானது 21-Feb-2017 1:23 pm
மேலே