உயிரெழுத்துக்கள்

(Uyir Eluthukkal)

உயிரெழுத்துக்கள்

முதல் எழுத்தின் இரு வகைகளில் ஒன்று, உயிரெழுத்து ஆகும்.

தமிழில் அ முதல் ஔ வரை உள்ள 12 எழுத்துகளும் உயிரெழுத்துக்கள் எனப்படும்.

அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.

இந்தப் பன்னிரண்டு எழுத்துகளும் இயல்பாகவும் எளிதாகவும் ஒலிக்கக் கூடியனவாக உள்ளன.

உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும்.

உயிர் எழுத்தை ஆவி எழுத்து என்றும் குறிப்பிடுவர். ஆவி என்றால் உயிர் என்று பொருள்.

உதாரணம்

அ - அகரம்
ஆ - ஆகாரம்
இ - இகரம்
ஈ - ஈகாரம்
உ - உகரம்
ஊ - ஊகாரம்
எ - எகரம்
ஏ - ஏகாரம்
ஐ - ஐகாரம்
ஒ - ஒகரம்
ஓ - ஓகாரம்
ஔ - ஒளகாரம்


உயிர் எழுத்து வகைகள்
(Uyir Eluthu Vagaigal)


மேலே