முத்தமிழே முத்தமிழே

முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

காதல் வழிச் சாலையிலே
வேகத்தடை ஏதுமில்லை

நாணக்குடை நீ பிடித்தும்
வேர் வரைக்கும் சாரல் மழை

தாகம் வந்து பாய் விரிக்க
தாவணிப் பூ சிலிர்க்கிறதே

மோகம் வந்து உயிர் குடிக்க
கை வளையல் சிரிக்கிறதே

உந்தன் பேரைச் சொல்லித்தான்
காமன் என்னைச் சந்தித்தான்

முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான்

முத்தமிழே முத்தமிழே முத்தச் சத்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத்தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன
உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே

கனவு வந்துக் காத்திருக்கு
தூங்கிக் கொள்ள மடி இருக்கா

ஆசை இங்கு பசித்திருக்கு
இளமைக்கென்ன விருந்திருக்கா

பூவைக்கிள்ளும் பாவனையில்
சூடிக்கொள்ளத் தூண்டுகிறாய்

மச்சம் தொடும் தோரணையில்
முத்தம் தர தீண்டுகிறாய்

மின்னல் சிந்தி சிரித்தாய்
கண்ணில் என்னைக் குடித்தாய்

தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 4:21 pm)
பார்வை : 41


மேலே