தமிழ் கவிஞர்கள்
>>
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
>>
எங்கள் காலம் மாறுமோ?
எங்கள் காலம் மாறுமோ?
தக்க துணை யாருமில்லை
ஓய்வில்லாக் கவலையாலே
ஒரு வழியும் தோன்றவில்லை
இலை இல்லை மலரும் இல்லை
கனி இல்லை காயும் இல்லை
தாயில்லா உருவம்போலே
வாழ்வும் ஆனதே (இலையில்லை)
விதியே உன்வேலையோ
இதுதானுன் ஆசையோ
கதியில்லா ஏழை எங்கள்
காலம் மாறுமோ? (விதியே)
நிலவில்லா வானம்போலே
நீரில்லா ஆறுபோலே
சிலையில்லா கோயில்போலே
வீடும் ஆனதே (நிலவில்லை)
ஒரு நாளில் ஓயுமோ
இருநாளில் தீருமோ
பலநாளும் துன்பமானால்
உள்ளம் தாங்குமோ?
கரையேறும் பாதை காணோம்
கண்ணீரில் ஓடமானோம்
முடிவில்லா வேதனை ஒன்றே
கண்ட லாபமோ? (இலையில்லை)