அலைகள் ஓய்வதில்லை!

வாழ்க்கை என்பது
ஓர் மண் சட்டி போல்!
"சட்டி சுட்டால்
கை விட்டுவிட வேண்டியது தான்"
என்றான் ஓர் குயவன்.

வாழ்க்கை என்பது
ஓர் குடத்தைப்போன்றது
அன்பு,பாசம்,நேசம்
இவைகளால் நிரம்பி வழிவது என்றாள்
சும்மாடை சுற்றியபடி பெண் ஒருத்தி!

நிச்சமாய் அது ஓர்
திருவோடு - உனக்கு
நிச்சயிக்கபட்டவைகளே
வந்து விழும் என்றான்
கிழிந்த காவி துணிக்குள் இருந்தபடியே
கிழவன் ஒருவன்!

நீ என்ன சொல்லுகிறாய்? என்றேன்!

அடுத்த வீட்டு பெண்னைப் பற்றி
பேச வேண்டிய வயதில்
"ஆல்ஃப்பா செஞ்சுரியை" எனக்கு
அறிமுகம் செய்தவனல்லவா நீ!!

என் வரையில் வாழ்க்கை என்பது
குடமோ, திருவோடோ அல்ல!
அது வெறும் பச்சை களிமண்!!
வேண்டியபடி வார்த்துகொள்ளலாம்
உங்கள் தத்துவ விசாரங்களை!!!

அது இந்த கடல் அலைபோன்றது
யுகம் யுகமாய் அதே
பழைய தண்ணீர் - ஆனால்
புது புது அலைகள்!

கரைகளில் எழுதப்பட்டிருக்கும்
உங்கள் தத்துவ விசாரங்களைப் பற்றி
அதற்கு அக்கறையில்லை - அலைகள்
ஒருபோதும் ஓய்வதேயில்லை என்றாய்!

கரைகளில் 'அழுத்தமாய்'
தடம் பதித்தபடி!!


கவிஞர் : வாணிதாசன்(6-Aug-12, 4:11 pm)
பார்வை : 0


மேலே