சரசுவதி அந்தாதி - கடவுள் வாழ்த்து

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.


கவிஞர் : கம்பர் (11-Apr-11, 11:02 am)
பார்வை : 280


பிரபல கவிஞர்கள்

மேலே