ராக்கம்மா கையத்தட்டு

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ராசாத்தி பந்தல் நட்டு ராவெல்லாம் தாளந்தட்டு
ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
எனக் கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்குச் சஜக்குஜக்கு ஜாகுஜக்கு ஜ (2)

(அடி ரக்கம்மா)

தேரிழுக்கும் நாளும் தெப்பம் விடும் நாளும் மச்சான் இங்கே அது ஏன் கூறு
அட ஊருசனம் யாவும் ஒத்தமையாச் சேரும் வம்பும் தும்பும் இல்ல நீ பாரு
மத்தளச் சத்தம் எட்டு ஊருதான் எட்டணும் தம்பி அடி ஜோராக
வக்கிர வாணம் அந்த வானையே தெக்கணும் தம்பி விடு நேராக
அட தம்பட்டம் தாரதான் தட்டிப்பாடு

(ஜாங்குஜக்குச்)

வாசலுக்கு வாசல் வன்ண வண்ணமாக இங்கே அங்கே ஓடி வௌளக்கேத்து
அட தட்டிருட்டுப் போச்சு பட்ட பகலாச்சு எங்கும் இன்பம் என்று நீ கூறு?
நல்லவர்க்கெல்லாம் எதிர்காலமே நம்பிக்கை வைத்தால் வந்து சேராதா
உள்ளங்களெல்லாம் ஒன்று கூடினால் உள்ளங்கையில்தான் வெற்றி வாராதா
அட என்றைக்கும் என்றைக்கும் நல்ல நாள்தான்

அடி முத்தம்மா முத்தம் சிந்து பனி முத்துப்போல் நித்தம் வந்து
பூமால வெச்சிப்புட்டு புது பாட்டெல்லாம் வெளுத்துக்கட்டு

(குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே)

ராக்கம்மா கையத்தட்டு புது ராகத்தில் மெட்டுக்கட்டு
ரோக்கோழி மேளங்கொட்டு இந்த ராசாவின் நெஞ்சத்தொட்டு
அட ஒன்னப்போல இங்கு நானுந்தாண்டி ஒண்ணு சேர இது நேரந்தாண்டி

(ஜாங்குஜக்குச்)


கவிஞர் : கவிஞர் வாலி(2-May-14, 2:01 pm)
பார்வை : 0


மேலே