தங்கத் தோணியிலே

தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ
வண்ணப் பாவை கன்னித் தேனை
கன்னம் என்னும்கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ

தஙத் தோணியிலே தவழும் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ
மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ


கவிஞர் : கவிஞர் வாலி(3-Dec-11, 4:48 pm)
பார்வை : 100


பிரபல கவிஞர்கள்

மேலே