பொங்கலோ பொங்கல்

காலங்கள் காத்திருக்க
கழனியில் விளையட்டும் கதிர்கள்
பொங்கலோ பொங்கல் என்று !

காத்திருக்கும் நெற்பயிர்கள்
தலை சாய்ந்து வணங்கட்டும்
பொங்கலோ பொங்கல் என்று !

நம் கைகள் நமக்கே என்றும்
நம் கைகள் தானாகவே வணங்கட்டும்
பொங்கலோ பொங்கல் என்று !

கதிருகள் பதரில்லே என்று சொல்லும்
கதிருகள் நெல் மணி முத்துக்களே
பொங்கலோ பொங்கல் என்று !

மஞ்சள் விளைந்ததே
மஞ்சள் வெயில் வெட்கத்திலே
பொங்கலோ பொங்கல் என்று !

புதுப் பானை ஆனதே
களிமண்ணை உடுத்தி
புத்தாடை ஆனதே மகிழ்ச்சியில்
பொங்கலோ பொங்கல் என்று !

நாளும் வந்ததே அந்த நாளும் வந்ததே
பச்சரிசி வெல்லத்தோடு இனிப்பாய்
பொங்கலோ பொங்கல் என்று !

கரும்பு பயிரெல்லாம் இனிக்கவே
கரும்பான மனசு போலவே
பொங்கலோ பொங்கல் என்று !

பொங்கிய பொங்கலும்
பங்கியே பகுத்துண்ணும் போதிலே
பொங்கலோ பொங்கல் என்று !

கோமாதாக்கள் மையிட்ட கொம்பிற்கும்
கோவில் தெய்வமென நெற்றியில் செஞ்சாந்திட்டு
கோடானு கோடி வாழ்த்துக்கள் பெற
பொங்கலோ பொங்கல் என்று !

வாயார வாழ்த்துவோம் கதிரவன் முன்னே
வாயார வாழ்த்தட்டும் அம்மா ! என்றே
பொங்கலோ பொங்கல் என்று !

எழுதியவர் : செயா ரெத்தினம் (11-Jan-13, 4:10 am)
பார்வை : 165

மேலே