பெண்களும் விமர்சனங்களும்

பெண்கள் கண்களில் மையிட்டால் ரசிக்க பல ஆண்கள் உண்டு. பெண்கள் மையினால் தன் கருத்தை எழுதினால் ரசிக்க சில ஆண்களே உண்டு. தன் மனதில் உள்ள எண்ணங்களை சிந்தனைகளை கவிதை, கட்டுரை, சிறுகதை என்று வடிவம் கொடுத்து வெளிபடுத்துகிறோம். கருத்து சுதந்திரம் வெளிபடுத்த ஒரு ஆணுக்கு எப்படி சம உரிமை உள்ளதோ அதே போல தான் பெண்ணுக்கும் தன்னுடைய எண்ணத்தை வெளிபடுத்த சமஉரிமை உள்ளது. பெண்கள் சில விஷயங்கள் மட்டும் தான் எழுத வேண்டும், சில விஷயங்கள் எழுதக்கூடாது என்று சில பிற்போக்குவாதிகள் வரைமுறை வைத்துள்ளனர்.

ஒரு பெண் பாலியல் தொழிலாளிகள் அவலங்களை பதிந்தால், காமம், புணர்ச்சி பற்றி எழுதினால் எழுதியவரின் எழுத்தை கருத்தை ரசிக்காமல் எழுதும் பெண்களை பற்றி தனிநபர் ஒழுக்கநெறி விமர்சனம் பல பெண் எழுத்தாளர்கள் சந்தித்துள்ளனர், அத்தகைய விமர்சனங்களை தாண்டி அவர்கள் சாதித்தும் உள்ளனர். நாம் எழுத வந்துவிட்டால் விமர்சனங்கள் வருவது வாடிக்கை தான், அத்தகைய விமர்சனங்களை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு நாம் நம் நிலையில் உறுதியாக இருக்க வேண்டும். விமர்சனத்திற்கு பெண்கள் அஞ்சி தன்னுடைய கருத்தை எழுதாமல் இருப்பதும் பெண்கள் அடுப்பங்கரையில் முடுங்கி கிடப்பதும் ஒன்றே. இரண்டுக்கும் பெரிய வித்தாயசம் இல்லை.

எழுத்துலகில் ஆணாதிக்கம் அதிகம் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. ஆண்களுக்கு நிகராக எழுத்துலகில் சாதித்த பெண்கள் பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை பலர் நமக்கு உதாரணாமாக உள்ளனர். அவர்கள் பார்க்காத சந்திக்காத விமர்சனங்கள் இடையூறுகள் இல்லை. அனைத்தையும் எதிர்கொண்டு தான் வெற்றி மகுடம் அடைந்தனர். நமக்கு வரும் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் எழுத்து வாள் கொண்டு முன்னேறுவோம் தோழிகளே...

எழுதியவர் : ஆயிஷாபாரூக் (13-Jan-13, 12:28 pm)
பார்வை : 622

சிறந்த கட்டுரைகள்

மேலே