இவர்களிடம் கேட்டுப்பார் .....?

ஒரு வருடத்தின் முக்கியத்துவத்தை .
ஒருவருட போட்டிப்பரீட்சையில் தோல்வியுற்ற
மாணவனிடம் கேட்டுப்பார் ....

ஒரு மாதத்தின் முக்கியத்துவத்தை ...
ஒரு குறைப்பிரசவம் செய்த தாயிடம் கேட்டுப்பார் .

ஒரு வாரத்தின் முக்கியத்துவத்தை ...
ஒரு வாரப்பத்திரிகை நடார்த்தும் பத்திரிக்கை ஆசிரியரிடம் கேட்டுப்பார் ....

ஒரு நாளின் முக்கியத்துவத்தை ...
போர்முனையில் இருந்து ஒரு நாள் ஒய்வு எடுக்கும்
போர்வீரனிடம் கேட்டுப்பார் ..

ஒரு மணித்தியாலத்தின் முக்கியத்துவத்தை ..
ஒரூ மணிநேரம் தன் காதலியுடன் கதைக்க விரும்பும் காதலனிடம் கேட்டுப்பார் ..

ஒரு நிமிடத்தின் முக்கியத்துவத்தை ..
அவசர கடுகதி பேருந்து ஒன்றை தவறவிட்ட
பயணியிடம் கேட்டுப்பார் ..

ஒரு செக்கனின் முக்கியத்துவத்தை
ஓட்டப்போட்டி ஒன்றில் ஒரு செக்கனால் ..
தங்கப்பதக்கத்தை இழந்தவனிடம் கேட்டுப்பார் ...

எழுதியவர் : கவிஞர் இனியவன் (14-Jan-13, 11:40 am)
பார்வை : 88

மேலே