நண்பன் யார் ? எதிரி யார் ?

ஒருவனின் சிறந்த நண்பன் யார்? ஒருவனின் மோசமான எதிரி யார்?

யாருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் தீமையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் மோசமான எதிரியாம். 'நாங்கள் எங்களை மிகவும் கவனித்துக்கொள்கிறோம்' என்று கூறினால் கூட, அவையே (அக்குணங்களே) அவர்களின் மோசமான எதிரிகளாம். ஏன்? ஏனென்றால் ஒருவன் தன் எதிரிக்குச் செய்யும் தீமைகளை இக்குணங்கள் தனக்கே செய்துவிடும்.

எவருடைய எண்ணங்கள், சொற்கள், செயல்கள் நன்மை நிறைந்தவைகளாகத் தூய்மையானவையாக இருக்கின்றனவோ அவையே ஒருவனின் சிறந்த நண்பர்கள். 'நாங்கள் எங்களைப் பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை!' என்று கூறினால்கூட அவையே (அக்குணங்களே) அவர்களுடைய உண்மையான நண்பர்கள். ஏன்? ஏனென்றால் ஒருவன் தனது நண்பன் தனக்குச் செய்வதைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான். ..........

பேராசை, காழ்ப்புணர்ச்சி, மாயம் என்னும் ஏமாற்றம் ஆகியவை திறனற்றவை. பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்ற உணர்வுடைய ஒருவன் உடலால், சொல்லால், செயலால் செய்வதெல்லாம் திறனற்றவையே. மனம் கட்டுப்படுத்தப்படாமல், பேராசை, காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம் இவற்றால் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் ஒருவன் மற்றவர்க்குச் செய்யும் செயல்கள் - நீதியற்ற முறையில் ஒருவருக்குத் தண்டனை கொடுப்பது, சிறையிலிடுவது, அபராதம் விதிப்பது, நாடுகடத்துவது, தன்னிடம் பலமிருப்பதால் 'வல்லான் வகுத்ததே சட்டம்' என்று மற்றவர்க்குத் தீங்கு விளைவிப்பது - அவை அனத்தும் கூடத் திறனற்ற செயல்களே.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (15-Jan-13, 12:15 pm)
பார்வை : 426

சிறந்த கட்டுரைகள்

மேலே