நோபல் பரிசு பெற்ற உரையில் மோ யென் ...?!

நோபல் பரிசு பெற்ற உரையில் மோ யென் ...?!

ஒருமுறை நானும் என் அம்மாவும் அறுவடைக்குப் பிறகு நிலத்தில் சிந்தியிருக்கும் கோதுமை மணிகளைப் பொறுக்க வயலுக்குச் சென்றிருந்தோம். எனக்கு மிகவும் மனதுக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக அந்நிகழ்வையே நினைவு கூர்கிறேன்.

அவற்றைப் பொறுக்கிக் கொண்டு அம்மாவை விட்டு நகர்கையில் காவலாளியிடம் மாட்டிக் கொண்டோம். வேகமாக ஓட முற்பட்ட என் அம்மாவை பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருந்த அந்த காவலாளி மிக மோசமாக அடித்து விட்டான். அம்மா வலி தாங்க முடியாமல் கீழே சுருண்டு விழுந்தாள். அந்த காவலாளி பறிமுதல் செய்த கோதுமை மணிகளோடு சீட்டியடித்தபடியே அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றான்.

அவள் தரையில் எழுந்து உட்கார்ந்த போது அவளது உதடு கிழிந்து ரத்தம் ஒழுகக் கண்டேன். அவளது முகத்தில் தோன்றிய நம்பிக்கையின்மையின் சாயலை என்னால் இப்போதும் கூட மறக்க முடியவில்லை. சில வருடங்களுக்குப் பிறகு நரைத்த முடியுடன் கிழத்தோற்றம் கொண்ட அந்தக் காவலாளியை சந்தைப்பகுதியில் பார்க்க நேர்ந்தது. அவனை பழிவாங்கும் எண்ணத்துடன் தாக்க முற்பட்ட என்னை அம்மா தடுத்து நிறுத்தினாள்.

மகனே ‘ அன்று என்னை அடித்த அந்த நபரும்
இந்த மனிதனும் ஒரே நபரல்ல’ என்றாள் அவள்.
-------மோ யென்

(சீன இலக்கிய நோபல் பரிசாளரின் நோபல் பரிசு உரையில்)
புது எழுத்து 21ம் இதழில் வந்துள்ள முழு தமிழாக்கத்திலிருந்து…………

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (15-Jan-13, 12:20 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 128

சிறந்த கட்டுரைகள்

மேலே