கரங்கள் இணைப்பமே!

ஏனிந்த வேதனை
ஏனிந்த பாரபட்சம்
ஏனோ உலகில்
உயர்வு தாழ்வுகள்
தானே உலகதில்
தரித்ததுவோ வேற்றுமைகள்
யாரோ எமக்குள்
கூறுகள் அமைத்தவர்
நாளை நமக்கென
ஆக்கிடும் நோக்கதில்
பாதையை வகுத்திடும்
பயணத்திலும் இடையூறுகள்…
நமை மீட்டிட
நாமே எண்ணுகையில்
தேறி நீரறியீரோ என
தேயத்து இழப்புக்கள்
ஆயத்தில் காட்டுவார்
மீட்பர் யாரோ எனக் கருதியதில்
தேட்டம் இழந்த
வாட்டம் போதுமென
கிடப்பமே சிவனேயென..
சுற்றம் அழிந்ததன்
காரணம் யாரறிவர்
தேறியறி யாதிருப்பமோ?
மாற்றம் வேண்டிய
மானிடர் கரங்களில்
வலிமை உண்டெனும்
தெளிவதில் தேர்வமோ எனியேனும்?
தேறில்
புது வரலாறும்
நாமே படைப்போம்
எனும் முயல்வில்
கரங்கள் இணைப்பமே!


  • எழுதியவர் : அழ. பகீரதன்
  • நாள் : 17-Jan-13, 9:04 pm
  • சேர்த்தது : அழ.பகீரதன்
  • பார்வை : 104
Close (X)

0 (0)
  

மேலே