வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் !

எத்தனையோ விண்மீன்கள்
சாலை ஓரம் உறங்குது நம் நாட்டிலே !
கலையிழந்து, ஒளி இழந்து ;

எண்ணற்ற புத்தங்கங்கள்
விற்காமல் போனதே நம் நாட்டிலே !
அட்டையிழந்து , பக்கம் கிழிந்து ;

ஏராளமான பறவைகள்
பறக்காமல் போனதே நம் நாட்டிலே
சிறகொடிந்து காலொடிந்து ;

எத்தனையோ மான்கள்
துள்ளாமல் போனதே நம் நாட்டிலே!
வலுவிழந்து உறுதியிழந்து ;

எண்ணற்ற கதிர்கள்
முதிராமல் வாடுதே நம் நாட்டிலே !
நீரிழந்து நிலமிழந்து ;

விதை போட்ட இடம் வறுமை என்பதால்
விதை விளையாமல் போனதே நம் நாட்டிலே !

ம்ம்

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் !

மன்னன் ஆண்ட காலம் அது !
மன்னர் போல் மக்கள் வாழ்ந்த காலம் அது !

என வரலாறு என்னிடத்தில் உரைத்ததே !

இடையில் வந்த வெள்ளையானால்
இங்கு பல சமுகம் அடிமை பட்டு போனதே !

வெற்றிக்கு பின்னும் அச்சமுகம் ஓரம்
ஒதுக்கப்பட்டு நின்றதே !
நாட்டிலே !
நம் நாட்டிலே !

பிறப்பினில் கூட பெண்ணை ஒதுக்கி வைத்தது
நம் சமுகம் ;
வறுமையினால் கூட பெண்ணை கள்ளி வைத்தது
நம் சமுகம் ;
என்னவென தெரியவில்லை !
வறுமையினால் என்னவோ ?

வயிற்றிற்கு கூட எலிக்கறி ஒத்து போனதோ !
நாவிற்கு கூட மாங்கொட்டை மறுத்து போனதோ !

என பல செய்திகள் என் செவியில் விழுந்ததே !
என் செய்வேன் நம் பாரதம் இப்படி வாழ்ந்ததோ !

ஐயகோ !

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் !

எழுதியவர் : D.yogendran (22-Jan-13, 10:06 pm)
சேர்த்தது : Yogi Tamil
பார்வை : 319

மேலே