இறுதியாய் ஒரு சந்திப்பு,,, ( சிறுகதை )

இறுதியாய் ஒரு சந்திப்பு,,, ( சிறுகதை )

காலை மணி 8;30 ஐ நெருங்கி கொண்டிருந்தது
நேரம் செல்ல செல்ல பதட்டமும் கவலையுமாக சோர்ந்து
எதையோ எதிர் பார்த்தவன் போல காத்துக்கொண்டிருந்தான்
அழகர் அந்த பேருந்து நிறுத்தத்தில்

அவனை கடந்து சென்றுகொண்டிருந்த ஒவ்வொரு
வாகனங்களையும் பார்த்து பார்த்து அவன் எதிர்பார்ப்பு
என்னும் அதிகமாகிகொண்டிருந்தது

அவனை சுற்றி இருந்த சூழ்நிலைகள்,
வாகனங்களின் இரைச்சல் சப்தங்கள் ,
காலை நேரம் என்பதால் பேருந்துக்காக காத்திருக்கும்
அலுவலகங்களுக்கு, பள்ளிகளுக்கு செல்லும்
பெரியவர்கள் , குழந்தைகளின் சப்தம்
அவனை இன்னும் அதிகமாக
குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது

அவன் எதிர் பார்த்துக்கொண்டிருந்த அந்த பேருந்து
தொலைவிலே வந்துகொண்டிருந்தது
பேருந்து நிறுத்த இருக்கயில் இருந்து எழுந்து
அந்த பேருந்து நிற்கும் இடம் நோக்கி நகர்ந்தான்
அவனுடைய இதயம் இன்னும்
வேகமாக துடித்து கொண்டிருந்தது ,
அவனது( சுவாசம்) காற்றின் வேகத்தைவிட வேகமாக
மேலும் கீழுமாக இறங்கிகொண்டிருந்தது

அந்த பேருந்து அவன் எதிர் பார்த்த படியே
அவன் அருகே வந்து நின்றது
பேருந்தில் இருந்து ஒவ்வொருவராக
கீழே இறங்கிகொண்டிருந்தனர்
பேருந்தின் வெழியே நின்றபடி
பேருந்தின் ஜன்னல் வழியாக
எட்டி எட்டி பார்த்துக்கொண்டே பயணிகள்
இறங்கும் படிக்கட்டின் அருகே வரவும்

கையில் புத்தகங்களுடன் படிக்கட்டில் இருந்து
இரங்கி கொண்டிருந்தாள் நந்தினி

நந்தினி பேருந்தில் இருந்து இறங்கியதும்
நந்தினி ,நந்தினி , என்றவாறே
நந்தினியை கூபிடுகொண்டே நந்தினி அருகே
அழகர் வேகமாக சென்றான்
நந்தினியும் கூபிடுவது யார் என்ற படி திரும்பினாள்

அழகரை பார்த்ததும் கோபத்தோடு
முகத்தை திருப்பிக்கொண்டு
வேகமாக நடக்க தொடங்கினாள்
அழகர் மறுபடியும் நந்தினி, நந்தினி
என்ற வாறே நந்தினியை பின் தொடர்ந்து
நந்தினி முன் சென்றதும் நந்தினி நின்றாள்
என்முகத்தில முழிக்காதே
உன்ன எனக்கு பிடிக்கல என்ன தயவு செய்து விட்டு விடு
என்று அழகரை பார்த்து கோபமாக சொன்னதும்
அழகர் தயவு செய்து சொல்லிடுபோ ஏன் என்ன பிடிக்லைன்னு

நீதானே என்ன விரும்புரதா சொன்ன
என்பின்னே சுற்றி சுற்றி வந்து
காதலை வளத்துவிட்ட இப்போ ஏன்
என்ன பிடிக்கலைன்னு சொல்ற பதில் சொல்

பிடிக்காததற்கு காரணம் சொல்ல வேண்டியதில்ல
அப்போ பிடிச்சிருந்து இப்போ பிடிக்கல
தயவு செய்து என்ன தொந்தரவு செய்யாத
எனக்கு கல்லூரிக்கு நேரமாச்சி

என் அம்மா, அப்பா சம்மதத்தோடு
உன்ன முறைப்படி உன் வீட்டில் பெண்கேட்டு
எனக்கு நீ, உனக்கு நான் என்று நிச்சயித்து
உனக்கு பூ வைத்து நீதான் என் மனைவி என்று
வாழ்த்தி விட்டு வந்த என் அம்மா, அப்பாவிடம் எப்படி சொல்வேன் நந்தினி,
உனக்கு என்னை பிடிக்கவில்லை என்று

எப்படி இப்படி மாறினாய் சொல் நந்தினி
உன்னை என் மனைவியாகவே நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என்னை பிடிக்காமல் போனதுக்கு ஒரே ஒரு காரணம் சொல் நந்தினி
என்று அழதொடன்கினான் அழகர்,

அதே நேரம் நந்தினியின் கைபேசி அலறியது
கைபேசியை எடுத்தாள் எதிர்முனையில் இருந்து ஒரு ஆண்குரல்
சொல்லுடா( பாலா ) ம் நா உன்ன பார்க்கத்தான் வந்துடு இருக்கேன்
வரும் வழில ஒரு பைத்தியக்காரன் வந்து டார்ச்சர் பண்ணிட்டு
இருக்கான்டா ம் ப்ரட்ச்சனைலாம் ஒன்னும் இல்ல
நா சீக்கிரம் வந்துடுறேன் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு
என்று சொல்லிவிட்டு கைபேசி
அழைப்பை துண்டித்ததும்,

நந்தினியின் கழுத்தில் இருந்து மளமளவென்று
ரத்தம் பீறிட்டு நந்தினி அணிந்திருந்த
சுடிதார் முழுவதும் தெறித்தது நந்தினி அதே இடத்தில
சுருண்டு விழுந்து அழகரை பார்த்தாள் அவளாள் பேச முடியாமல்
ஏண்டா இப்டி பண்ணுனா என்று
துடித்து கொண்டிருந்தாள்,

அழகர் தான் கொண்டு வந்த
கத்தியில் ரத்த கறை படிந்திருந்ததை பார்த்து
கதறி அழுதான் என்ன மன்னிச்சிரு நந்தினி
நீ என்ன ஏமாற்றினத கூட நா தாங்கிக்குவேன்
ஆனால் உயிருக்கும் உயிராக நா உன்மேல வைத்த
காதலை உன்னால் எப்படி ஏமாற்ற முடிந்தது,

(காதல்)
பொண்ணுங்க படிச்சி வீசிட்டு போற
காகிதம் இல்ல அது அணுக்கும்,பெண்ணுக்கும்
உருவாகிற ஒரு உண்மையான பந்தம்
இதயத்தில் வைத்து பாது காக்க படவேண்டிய தேசத்து வரைபடம்,

உயிரோடு இருக்கும் போதுதான் என் அன்பு உனக்கு
புரியல நம் மரணத்துக்கு பிறகாவது என் அன்பு உனக்கு புரியட்டும்
நீ இல்லாத இந்த உலகம் எனக்கும் வேண்டாம்
நானும் உன் கூடவே வந்துடுறேன் I LOVE U நந்தினி,

என்று சொல்லிக்கொண்டே தன் கழுத்தையும் அறுத்து கொண்டு
நந்தினியின் அருகேயே விழுந்தான்
நந்தினியின் கண்கள், அழகருக்காக
அந்த இறுதி சந்திப்பில் கலங்கியது
என்ன மன்னிச்சிருடா என்ற வாறே
அழகரின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டே
உயிர் விட்டாள் நந்தினி,

அழகருக்கும்
நந்தினி தன்காதலை புரிந்து கொண்டாள்
என்ற நம்பிக்கையோடு உயிர் பிரிந்தது,

ஞா, நந்திசெல்வா,,,

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்,

எழுதியவர் : ஞா, நந்திசெல்வா,,, (13-Feb-13, 2:19 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 289

மேலே