முக்கொடியும் மூவேந்தர்களும்...

என் இளம் பிராயத்திலிருந்தே சரித்திரக் கதைகள் என்னை மயக்கி தன் வசம் ஈர்த்திருகின்றன...அதிலும் சோழர் கதைகள் என்றால் அதிலொரு தனி அலாதிதான் எனக்கு...இதற்கு காரணம் நான் சோழர் வழியில் வந்தவள் எனும் நம்பிக்கை ஆணி வேறாக என் மனதில் ஊன்றியது தான்...இதனை நிரூபிப்பது போல...என்னுடைய சில செய்கைகளும் இருந்ததுண்டு..பெரிய கோவிலின் சுவர்களைத் தடவி இதுதான் இராஜராஜன் கை பட்ட இடம் ...இதுதான் இராஜராஜன் நடந்த இடம்... என்று மெய்மறந்து போய் ஆயிரம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்னால் சென்று நானே கற்பனை ஓடத்தில் மிதப்பது உண்டு...அதிலிருக்கும் சுகம் வேறெதிலும் இருந்ததில்லை...பெற முடியாததை பெற்று விட்டதை போல் ஒரு சுகம்...அந்த சுகம் கைநொடி கூட நீடிப்பதில்லை என்றாலும் அது கிடைக்கப்பெறாத சுகம் தான் ..ஆம்..ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னல் செல்வதென்றால் சுலபமான காரியமா??அந்த சுகத்தை எனக்கு சரித்திரக் கதைகளும்...பெரிய கோவில் போன்ற புராதன இடங்களும் எனக்கு அளித்தன...அக்கால சோழர்களின் புத்தி கூர்மையையும் ..கரிகாலன் கல்லணையை கட்டி, பெரும் சமுத்திரத்தை போன்ற காவிரி நதியை கட்டிற்குள் கொண்டு வந்து...வெள்ளத்தில் மக்கள் சீரழியாமலும் ...கோடை காலத்தில் நீர் வளம் குன்றாமலும் இருக்க செய்தது.. பசியை போக்கிக் கொள்வதற்காக மட்டுமே உழைத்து கொண்டிருந்த மக்களை வேளாண்மையில் ஈடுபடுத்தியது.. புகார் நகரத்தை பெரும் காவிரி பூம்பட்டினமாகி...நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க மடியாத அளவிற்கு வாணிபத்தை மேலோங்க செய்து..அதன் மூலம் வருவாயை உயர்த்தி..இந்தியவை(இமயம் வரைக்கும் கைப்பற்றி தன வெண்கொற்றகுடையின் கீழ் ஆட்சி பிரிந்தான் கரிகால சோழன் ) .....இராஜ ராஜ சோழன் நன்செய் புன்செய் நிலங்களை பிரித்து வேளாண்மையை மேம்படுத்தியது...இவ்வாறாக எங்கள் மூதாதையர் பற்றி பெருமிதமும் பெறுமதிப்பும் கொண்டிருந்த நான்...ஒருநாள்...அவர்கள் நடத்திய போர்களை பற்றி படிக்க நேர்ந்தது...ஐயகோ இப்படிப்பட்ட வழித்தோன்றலில் தான் நாம் பிறந்தோமா என்று எண்ணி மனது பதைபதைத்தது... இந்த காலம் அன்று போல் இல்லை...கலி காலம் ஆகிவிட்டது என்று கூறுவோரை பார்த்து ஏளன சிரிப்பு சிரிக்க வைத்தது...இக்காலத்தில் நடக்கும் அக்கிரமங்களை விட பன்மடங்கு கொடுமைகள் அப்பொழுதும் நடந்திருகின்றன...இக்காலத்தை விட சுகமாய் அக்காலத்திலும் மக்கள் வாழ்ந்திருகிறார்கள்... இரண்டாம் நூற்றாண்டிற்கும் இருபதாம் நூற்றாண்டிற்கும் பெரும் வித்யாசம் ஒன்றும் இருபதாக தோன்றவில்லை... சாமானிய மனிதனை அரசியல் அதிகாரம் அடக்குமுறைப்படுதுவதும்...போர் துன்பங்களும்...நில ஆசைகளும் (இன்று நிலங்களுக்காக நடக்கும் பங்காளி சண்டைகளை பார்த்து ஆச்சர்யபடுவதற்கும் அசிங்கபடுவதற்கும் அர்த்தமில்லை...ஏனெனில் முக்கொடி தோன்றிய காலம் தொட்டு பங்காளிகளும்...பெண் கொடுத்து எடுதவர்களுமான மூவேந்தர்களும், புவியாசை கொண்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு... தலை கொண்ட மன்னனென பெயரெடுத்து பெருமை பட்டு கொண்டனர்... அத்தகைய வழிதொன்றளில் வந்தவர்களுக்கு நிலஆசையையும் பங்காளி சண்டையையும் சொல்லி தரவா வேண்டும் )...நம் மூதாதையரான மூவேந்தர்கள் தொட்டு நமக்கு வழி வழியாக வந்து சேர்ந்தது தான்..மூவேந்தர் காலத்து போர் நிகழ்வுகள் சில என்னை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின...இவ்வாறு மூவேந்தர்களின் மேல் சித்த பேதைமை பிடித்து அலைந்து கொண்டிருந்த எனக்கு இந்த போர் உண்மைகள் தகுந்த பாடத்தை கற்பித்து இன்றிருக்கும் சமகாலமே மேல் என்ற சீரிய நிலைக்கு கொண்டு வந்தது...அத்தகைய போர் உண்மைகளில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ளகிறேன்...ஒரு சிறிய இராக்கிய போர் பெரும் வல்லரசான அமெரிக்காவையே பண பற்றாக்குறையில் ஆழ்த்தியது என்றால்.... அன்றைய நாட்களில் நம் மன்னர்கள் பெரும் போருக்கு முன் எத்தகைய திட்டங்களை எல்லாம் வகுத்திருக்க வேண்டும்...உதாரணமாக ஒவ்வொரு வீட்டில் உள்ள முதியவர்களையும் சுமையாகக்கருதி தாழி எனப்படும் மண்ணால் ஆன பெரிய சட்டிகளில் அடைத்து உயிருடன் புதைத்திருக்கின்றனர்... போருக்கு புறப்பட்டுவதற்கு முன், மன்னர் போரில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக, கொற்கை எனப்படும் பெரும் வேள்வி அமைத்து வேண்டுதல்களும் நடைபெற்றிருகிறது.. இதில் உயிர் பலிகள் என்ற பெயரில் பல உயிர்கள் தீக்கிரையாக்க பட்டிருகின்றன.. இந்த உயிர் பலியை ஒரு கவிஞர் விவரித்து இருந்த காட்சி மனதை உருக செய்தது..உயிர் பலி கொடுக்கப்போகிறவர்கள், தோல்பரையை மாலையாக தோளில் அணிந்து கொண்டு...அதை வேகமாக அறைந்து கொண்டு...வெறி பிடித்தவர்களை போல் ஓடி வந்து தலை வேறு முண்டம் வேறுமாக வெட்டப்பட்டு...தலை துடித்து மண்ணில் விழுந்து...முண்டம் மட்டும் ஓடி வந்த வேகத்தில் அப்படியே போய் வேள்வியில் விழுவது போன்ற காட்சி...உள்ளத்தை ஒரு நிமிடம் சிதைத்து போனது...இப்பொழுதெல்லாம் அரசியல்வாதிகளின் செயல்கள் எதுவும் என்னை வியப்பிலோ வேதனையிலோ ஆழ்த்தவில்லை... இதுதான் அரசியல்... இதுதான் உறவு...என்று எதையோ புரிந்து கொண்டதை போல் ஒரு உணர்வை தந்தது...

எழுதியவர் : (13-Feb-13, 3:28 pm)
பார்வை : 1388

மேலே