எங்கள தேவதையா ஆக்கி..!

கொட்டி கிளிச்சிடுச்சே
கட்டி வச்ச கோட்ட
அமிலம் கிளிச்சிடுச்சே
கட்டி வச்ச கோட்டய

வட்டிக்கு வாங்கியா அழகானேன்...!
சந்தனத் தொட்டியில குளிச்சா நிறமானேன்
பட்டினியா கிடந்துதானே பொண்ணானேன்
பத்தினியா வாழத்தானே
பல ஊரும்போய்
பல சாமிகிட்ட வேண்டியிருக்கேன்

வெட்ட வெளியில வருகையில
விடல பசங்க கண்ணுக்கு என்னானேன்..?
வீட்ட பூட்டி கிடக்கையில
வீட்ட சுத்தி சுத்தி வருதுக

பள்ளி,கல்லூரி போகையில-பின்னால
துள்ளி துள்ளி வருகுதுங்க

உடலு உறுப்பு உள்ளங்கள
விரலு கூட விடாம சொல்லி காட்டி
உள்ளம் ஓண்ண வெள்ளமா
கரைச்சு விட்டு - எங்க
மனசத்தான் கெடுத்துப் போகுதே..!


எங்கள் கைகள்
மருதாணி வச்சா சிவக்கும்
எங்கள் கண்கள்
நாக்கு இல்லாம பேசுறவங்க
சொல்லாலே சிவக்குதே..!

வழியா போகையில
துணை போல வந்து
துளைக்கிறாங்க நெஞ்ச
காதலிக்கச் சொல்லி
கரும்பலகையும் கட்டளை இடுதே..!
கரும்புகையும் கட்டளை இடுதே..!
வெள்ளாடும் கட்டளை இடுதே..!
முள்ளாடும் கட்டளை இடுதே..!
கட்டளைகள எங்க
கட்டுப்பாடுகள தொட்டு விடாம
தடுக்குற விரக்தியில

விடலைங்க கோபப்பட
கோபத்த கொட்டித் தீர்க்க
அமிலமும்...
கொட்ட இடம்
எங்கள் முகமும்தானா..!

அமிலம் வீசி அழிக்க
நாங்களென்ன பூச்சிகளா..!
அவங்க செய்வதென்ன
காதல் விவசாயமா..?

எங்கள தேவதையா ஆக்கி
காக்க வந்த தேவதைங்க
கை விரிச்சிடுச்சே..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (23-Mar-13, 12:23 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 80

மேலே