எங்களைத் தடை செய்யாதீர்..!

எங்களை..!
உங்கள் முகம் பார்த்து வீசுகையில்
கொள்ளையர்களை எச்சரிக்கைச் செய்கிறோம்
விசையோடு வீசுவதால் - எங்களால்
திசை மாற முடியவில்லை
திசைமாற்றம் எமக்கிருந்திருந்தால்
வீசும் கைகளை நாசம் செய்திருப்போம்
எங்களால் உங்களுக்குண்டான காயம் போல்
ஆறா காயம் நாங்களும் கொள்கிறோம்
உங்கள் அழகு முகங்களைப் பழுதாக்கி
உணர்வுகளைச் சருகாக்க
எங்களுக்கு மனமில்லை
தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்
தண்டனை முறைக்கு
அமிலத்திற்கு அமிலம்
நான் தாயாராயிருக்கிறேன்..!

தயவு செய்து எங்களைத் தடை செய்யாதீர்..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (23-Mar-13, 12:31 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 112

மேலே