விலை வாசி மாத்தி யோசி

கணவர் ; அம்மா !அந்த ஒரு பக்கெட்ல தண்ணீ கொண்டுவா நா குளிக்கணும்
மனைவி ; ஏங்க ஒரு பக்கெட் போதுமா?
கணவன் போதும் போதும் ....சரி சரி நீ முணுமுணுக்குறது...தெரியுது
மனைவி ; என் மனசுல இருக்குறது எப்டி?
கணவன் ; அம்மா யோசிச்சது போதும் அந்த சோப்பு எடுத்துட்டு வாம்மா !
மனைவி; இந்தாங்க ...
கணவன் ; இது இல்லம்மா ..சவுக்காரம் போதும் ..
மனைவி ; என்னாச்சு இவருக்கு
கணவன் ;என்ன அங்க முனுமுனுக்குற ..
மனைவி;இல்லையே ங்க ..நா தழுவியே
கணவன் ; குளிச்சிட்டேன் ..போய் டிபன் வை
மனைவி ; இந்தாங்க .இட்லி ..சாப்டுங்க
கணவன் ; என்னம்மா சப்பாத்தி வைம்மா..
மனைவி;இட்லி இருக்கே இத யாரு சப்டுவா?
கணவன் ;அரிசி விக்கிற விலைக்கு கோதுமை பரவாயில்ல ..இனிமே சப்பாத்தி செய் போதும்
மனைவி; சரிங்க ; சரி சாப்பாடு என்ன செய்றது ..
கணவன் ; கம்பு கூழ் செய்.. உப்பு ஊறுகாய் வை போதும் அதுதான் உடலுக்கும் நல்லது சக்கரைக்கும் நல்லது
மனைவி.அய்யோ! இந்த மனுஷனுக்கு என்னாச்சு?
கணவன்;அங்க என்ன முனுமுனுக்குற?
மனைவி; இல்லங்க காய்கறி வேண்டாமா ?உப்பு ஊறுகா கேக்குறீங்க ?
கணவன் ;விலைவாசிய பார்த்தில்ல?கடையில என்ன விலை விக்குது தெரியுமா? ...உனகெங்க புரியப் போவுது ?
மனைவி ;இது எத்தன நாளைக்குங்க
கணவன் விலை வாசி குறையுற வரைக்கும் இந்த கம்பங்கூழும் வரகரிசி சோறும்தான்...
மனைவி ; அதுக்கு நாம பேசாம கிராமத்துலயே இருகலாங்க
நகரத்த காலி பண்ணிடுவோம் ...
கணவன் ; சீக்கிரம் அதுதான் நடக்கப் போகுது ....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-Jun-13, 10:53 am)
பார்வை : 4870

மேலே