எல்லாத்துக்கும் கடவுள்தான்

வானமும் உண்டு
பூமியும் உண்டு
அதை பார்த்து ரசிக்க
மனமும் உண்டு

கடலும் உண்டு
கரையும் உண்டு
அலையை ரசிக்க
ஆர்வமும் உண்டு

இரவும் உண்டு
நிலவும் உண்டு
நிசப்தம் காண
இருளும் உண்டு

ஆனால்
இவற்றை படைத்தவன்
நோக்க நேரம்தான் இல்லை

விடியும் முன்னே
அடுத்த நாளின்
கணக்கை பார்க்கிறோம்
அடுத்த நாளை சந்திக்கும்
நிச்சயமின்றி

இன்றே இருந்து
நாளையின் நடப்புகளை பேசுகிறோம்
மரணத்தை மறந்து
அடுத்தவனின் கரைகளை
பார்க்கிறோம்

செல்வத்தை சேர்த்து
செலவழிக்க மறக்கிறோம்
செலவை நினைத்தது
நிம்மதியை துறக்கிறோம்

இத்தனையும் நான்தான்
செய்கிறேன் என்று எண்ணுகிறோம்
மேலுள்ளவனை மறந்து
தம்மேல் எல்லா சுமைகளை சுமக்கிறோம்

இறைவை நினைத்து
நிம்மதியை வளர்ப்போம்
இறைவை சேரும் நாளை எண்ணி
இன்றே நல்லதை சேர்ப்போம்

எழுதியவர் : நுஸ்கி மு.இ.மு (24-Jun-13, 1:01 pm)
சேர்த்தது : nuskymim
பார்வை : 392

மேலே