திருக்குறளை தேசிய நூலா ஆக்கிடாதீங்க..!

திருக்குறளை தேசிய நூலா ஆக்கிடாதீங்க..!

மதமுண்ணு ஒவ்வொண்ணிருக்கு
அதுக்கு..
நூலுண்ணு ஒவ்வொண்ணிருக்கு

நாடுண்ணு ஒண்ணிருக்கு
அதுக்கு..
நூலுண்ணு ஒண்ணிருக்கா...?


மதத்துல வாழுறவன் ஒண்ணா வாழ
மதத்துல நூலிருக்கு

நாட்டுல வாழுறவன் ஒண்ணா வாழ
நாட்டுல நூலிருக்கா..?


பேதம் மறந்து ஒண்ணா வாழ
ஏட்டுல வள்ளுவன் பாட்டிருக்கு

எடுத்துச் சொல்லத்தான்
நாட்டுக்கு மனமிருக்கா..?


தேசிய மிருகமுண்ணு ஒண்ணிருக்கு
மிருகத்த காக்க தேசம் எண்ணியதால..!

தேசியப் பூவுண்ணு ஒண்ணிருக்கு
பூவினம் காக்க தேசம் எண்ணியதால..!

தேசிய நூலுண்ணு ஒண்ணு இல்ல
தேசமக்கள காக்க தேசம் எண்ணாததால..!

தேசியத்தின் கையெடுத்து
சோதிடம் பார்க்கும் மந்திரியரே..!

நம் தேசம் ஒரு வல்லரசுன்னு
ஏழு தேசமும் சொல்லணும்னு
முழுசா ஆசைக் கொள்ளாட்டி...!

உம் இளைய தலைமுறைகள
கெடுத்து கெடுத்து வாழ வைப்பதுதான்
தொலை நோக்கு இலட்சியம் என்றால்...!

எல்லா துறைகளிலும்
வெற்றிப் பதக்கங்களை
வாங்கி விடக்கூடாது என்பதுதான்
உம் விருப்பம் என்றால்...!

ஊழலால் தனிவளம் பெருக்குவதற்கே
பதவிகளும் பணிகளும் என்றால்..!

நாட்டின் கலாச்சாரம் மேல் மண்மூடி
நாட்டை சீரழிப்பதற்கே உம் முயற்சி என்றால்...!

தேசத்த நாசமா மாத்தத்தான்
உங்களோட ஆட்சி என்றால்...!

தேசம் மேல சத்தியமா
திருக்குறளை தேசிய நூலா ஆக்கிடாதீங்க..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (29-Jun-13, 10:29 am)
பார்வை : 123

மேலே