குறும்புகள் ஆயிரம் 21

பைய்யன் ; அப்பா உங்ககிட்ட'' கொஞ்ச''..ம்ம் பேசணும்
அப்பா;என்ன ?
பைய்யன் ;ப்ச்...ப்ச் ..ப்ச்
அப்பா;எதுக்குடா ?முத்தம் இதுக்கு தான் ''கொஞ்ச'' பேசனும்னியா?
பையன்; கட்டணும்...ம்ம்
அப்பா;என்ன
பைய்யன்;உங்கள ...ஆ (கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க)
அப்பா;எதுக்குடா என்ன கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்குற?
பைய்யன்;எனக்கு செலவுக்கு பணம் கொடுங்க
அப்பா; எக்ஸாம் பீஸ் கட்டணும்ன இப்போ செலவுக்கு பணம் கேக்குற...
பைய்யன்;ரெண்டுக்கும் சேர்த்துதான் உன்ன கட்டிபிடிச்சு முத்தம் கொடுதுட்டேனே பா அப்புறம் என்ன கொடுங்க ப்ளீஸ் ..!
அப்பா; சரி சரி இந்தா வாங்கிக்க ஒழுங்கா பள்ளிக்கூடம் போகணும் என்ன?நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் சரியா?
பைய்யன்;எப்டிப்பா உங்கள மாதிரியா?
அப்பா; டேய்! நான்தான் கூலி வேலைக்குப் போய் கஷ்டப் பட்டு உன்ன படிக்க வைக்கிறேன் நீ ஏன் அந்த வேலை பாக்கணும் ...நீ எதிர்காலத்துல நல்லா வரணும்பா ...
பைய்யன் ;; இதெல்லாம் இப்போ எதுக்குப்ப சொல்றீங்க...நா இப்போதானே LKG முடிச்சுட்டு ஒன்னாம் வகுப்பு படிக்கிறேன் நீ சொல்றது எதுவும் புரியலப்பா...?நா சாக்லேட் வாங்கிட்டு பள்ளிக்கூடம் போறேன் சரியா..!
அப்பா; ???!!!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (4-Sep-13, 8:43 am)
பார்வை : 385

சிறந்த நகைச்சுவைகள்

மேலே