பருகுங்கள் கற்றாழை சாறு

சோற்றுக் கற்றாழையின் நற்குணங்கள்.;;

கற்றாழையில் உள்ள ஜெல் வழவழப்பாக இருக்கும் காயங்கள்,வீக்கம் ,.நாள்பட்ட புண்கள். அரிப்பு மற்றும் தோல் சம்பத்தப்பட்ட வியாதிகளைக் கட்டுப் படுத்தி குணமளிக்க வல்லது.

கற்றாழையில் ஆலோக்டின்,ஆலோயின்,ஆலொஎமொடின்ம்ரெசின்கல்,தேநின்கள்,பாளி சக்ரைடுகள் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன.

வெளிப் புற பயன்கள் ;
கற்றாழையில் உள்ள ஜெல்லை முகத்திலும் உடலிலும் பயன் படுத்தலாம் ..மங்கு,தேமல்,பரு மறு மறையவும் சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது .

உட்புற பயன்கள்;
கற்றாழையின் சாற்றை உட்கொண்டால் 25 வகையான வியாதிகளை குணப் படுத்துகின்றது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கின்றது..பெண்களுக்கு வெள்ளை படுத்தல்,மாதவிடாய் ,கருப் பை கோளாறுகளையும் தீர்க்கின்றது . மற்றும் சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் ,மூலம்,வாயுத் தொல்லை,உடல், மற்றும் மூட்டு வலி,அல்சர்முதலியவையும் நீக்கி காக்க வல்லது.

நலம் பெறுவோம்! நோயின்றி வாழ்வோம் !

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (7-Sep-13, 6:29 am)
பார்வை : 1780

சிறந்த கட்டுரைகள்

மேலே