+நல்ல தங்காள் கதை தெரியுமா?+

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி படிக்காத மாப்பிள்ளைக்கு ஒரு சின்ன கிராமத்துல ஒரு பொண்ணப் பாத்தாங்க!
1000 பொய்ல 999 பொய் என்னானு தெரியாது, ஆன அவங்க சொன்ன ஒரு முக்கியமான பொய் மாப்ள நல்லா படிச்சிருக்கார்னு.
பொண்ணு வீடல உடனே கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க.
கல்யாணமும் மிகச்சிறப்பா நடந்தது.
கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு மாப்பிள்ளை பொண்ணு வீட்டுக்கு வந்தார், வரவேற்புனா வரவேற்பு அப்படி ஒரு வரவேற்பு. எல்லாரும் விழுந்து விழுந்து கவனிச்சாங்க. ஏன்னா படிச்ச மாப்பிள்ளையாச்சே! மாப்பிள்ளைக்கு சந்தோஷம் தாங்க முடியல. விருந்தெல்லாம் முடிஞ்சு மாப்பிள்ளை சும்மா ஒக்காந்திட்டு இருந்தார். அய்யய்யோ படிச்ச மாப்ள சும்மா உட்காந்து இருக்கலாமா? உடனே அவரு மாமியார் அந்த ஊரு வாத்தியாரு வீட்ல போயி ஒரு புத்தகம் வாங்கீட்டு வராங்க. அவங்க அவசரத்துக்கு வாத்தியாரு தன் முன்னாடி கெடந்த ஒரு புத்தகத்த எடுத்து கொடுத்து அனுப்பறாரு. அது "நல்லதங்காள் கதை". கதை முழுவதும் சும்மா சோகம் பிழிச்செடுக்கும். கதை முடிவுல தன் ஏழு குழந்தைகளையும் ஒரு கிணத்துல போட்டுட்டு நல்லதங்காளும் குதுச்சுருவாங்க.
மாமியாரும் மாப்பிள்ளைக்கிட்ட கொடுத்துட்டாங்க. அவரும் வாங்கீட்டாரு. அவருக்குத்தான் படிக்க தெரியாதே, வாங்குனவர், பக்கம் பக்கமா புரட்டறாரு. அவரு கண்ணல இருந்து கண்ணீர் கண்ணீரா ஊத்துது. பாத்தவங்க எல்லாம் பயந்தே போயிட்டாங்க! உடனே மாமியார் ஓடிப்போய் வாத்தியாரை கூட்டீட்டு வந்தாங்க. பதட்டமா ஓடிவந்த அவரும், நல்லதங்காள் புத்தகத்தை பாத்துட்டு எல்லாத்துக்கும் அந்த கதையை விளக்கமா சொல்லிட்டு புத்தகத்தையும் வாங்கிட்டு போயிடுறார். மாமியார் போயி மாப்பிள்ளகிட்ட இந்த மாதிரி ஒரு புத்தகத்தை குடுத்ததுக்கு மன்னுச்சசுருங்க மாப்பிள்ளேனு கெஞ்சி கேட்டுக்கிறாங்க.
புத்தகத்தை கையில வாங்கனோன நம்ம மாப்பிள்ளை மனசுக்குள்ள ஓடுனது என்னன்னா................................................................................................................................................ நம்மல என்னமா கவனிக்குறாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்).படிச்ச மாப்ள, படிச்ச மாப்ளனு என்னமா தாங்கு தாங்குனு தாங்குறாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்). நாமலோ படிச்சவன்னு சொல்லி கல்யாணமும் பண்ணீட்டோம்(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்).இப்ப இந்த புத்தகத்த வேற குடுத்து படிக்க சொல்றாங்க(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்). இந்த நேரத்தில நமக்கு மட்டும் படிக்கத்தெரியாதுனு அவங்களுக்கு தெருஞ்சுருச்சுனா போட்டு புரட்டி எடுத்துறுவாங்களே!(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்)
இந்த பிஞ்சு ஒடம்பு அந்த அடியெல்லாம் தாங்குமானு(ரெண்டு பக்கம் புரட்டுகிறார்) நெனைக்க நெனைக்க அவருக்கு வந்த கண்ணீராலே அந்த புத்தகமே நெனைஞ்சி போச்சு! ................................................................................................................................................
மீதிக்கதை தான் உங்களுக்கு தெரியுமே.

எழுதியவர் : சொல்லக் கேட்டது! (19-Sep-13, 6:23 am)
பார்வை : 3862

மேலே