குருவை மிஞ்சிய சிஷ்யன்

குருவை மிஞ்சிய சிஷ்யன்

இராமானுஜர் என்ற சிறுவன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு குரு வந்தார். சிறுவனின் புத்திசாலித்தனத்தைப் பார்த்து அவனுக்கு ஒம் நமோ
நாராயாயணாய நமஹ என்ற மந்திரத்தை சொல்லிக்கொடுத்தார். அப்படி சொல்லிக்
கொடுக்கும்போது ஒரு நிபந்தனை விதித்தார். இதை யாருக்கும் சொல்லிக்
கொடுக்கக்கூட்டாது. அப்படி சொல்லிக் கொடுத்தால் மந்திரம் பலிக்காமல் போய் விடும் என்றார்.

ஆனால் ராமானுஜனோ மந்திரம் பலிதம் அடையும் நிலையில் வந்தவுடன் ஊர் கோவில் கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு எல்லோரையும் அழைத்து மந்திரத்தை உபதேசித்தார்.

இதைப் பார்த்த குருவுக்கு கோபம் வந்தது. இராமானுஜனிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டபோது உங்கள் கட்டளையை மீறியதற்காக நான் ஒருவன் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை.. இத்தனை பேர் சொர்கத்திற்கு போவார்கள் இல்லையா? என்று ராமானுஜன் கூறினார்.

இவர் குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆகி உலகப் புகழ் பெற்றார். இதையே இன்னொரு விதத்தில் பார்த்தால் சுவாமி விவேகானந்தர், ஆதி சங்கரர் ஆகியோரும் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக விளங்கினவர்கள்தாம்.

எழுதியவர் : படித்தது (21-Sep-13, 2:40 pm)
பார்வை : 331

மேலே