+வாண்டு சிண்டுவின் சேட்டைகள்!+ (09)

சிண்டு: டே வண்டு!

நண்பன் வண்டு: என்னடா சிண்டு?

சிண்டு: நீ சர்க்கஸ் போயிருக்கியாடா?

நண்பன் வண்டு: ஏண்டா, போயிருக்கேனே!

சிண்டு: அதுல கோமாளி பாத்திருக்கியாடா?

நண்பன் வண்டு: ம் பாத்திருக்கேன்டா..

சிண்டு: அவங்க அழகாவாடா இருப்பாங்க?

நண்பன் வண்டு: ம்.. இல்லடா ஒரே காமெடியா இருப்பாங்க...

சிண்டு: சரி சரி

நண்பன் வண்டு: ஏண்டா கேட்ட?

சிண்டு: சும்மா தாண்டா கேட்டேன்.

நண்பன் வண்டு: பொய் சொல்லாதே. உண்மைய சொல்லு.

சிண்டு: சொல்லவா?

நண்பன் வண்டு: சொல்லுடா.. என்ன விளையாடற?

சிண்டு: ஒண்ணுமில்ல. நீயும் கோமாளி மாதிரி தான் இருக்க. அதான் சொல்ல வந்தேன்...!

நண்பன் வண்டு: டேய்ய்ய்ய்ய்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி ‍‍‍ ‍‍‍‍‍‍‍ (30-Sep-13, 11:31 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 182

சிறந்த நகைச்சுவைகள்

மேலே