தமிழ் அகராதி

அவா- பேராசை
அபிஷேகம்- முழுக்கு, நீராட்டு
அலோபதி-ஆங்கில மருத்துவ முறையையே, ஹானிமன்(C.F.S. Hahnemann) இப்பெயரிட்டார்.
அவனி- பூமி
அழுக்காறு - பொறாமை

அலைமருவி - ஒத்திசை, தொடரிசை
அறிவிக்கை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அரசிதழ்களில் வெளியிடுவன
அசைவூட்டம் - சலனப்படம்
அகரமுதலி -சொற்களின் பொருள், பயன்பாடு, இலக்கணம், சொல்மூலம், பலுக்கல் முதலிய குறிப்புகளைத்தரும் நூல்: அகராதி.
அகவு - கேள்,வினவு

அஃகுப்பெயர் - நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்.
அகழ்வாராய்ச்சி - புதைபொருள்ஆராய்ச்சி.
அகவை - உட்பொருள் , வயது (age)
அன்மை - அற்றுப்போதல், இல்லாமற்போதல்
அந்தணன் - சான்றோன், பிராமணன்

அமர் - இரு, உட்கார்
அம்மான் - மாமா( அம்மாவின் தம்பி, அல்லது அண்ணன்)
அபாயம் - ஆபத்து
அஞ்சல்_ கடிதம்.
அசுணம் � இசையறியும் பறவை.

நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:30 am)
பார்வை : 327

சிறந்த கட்டுரைகள்

மேலே