தமிழ் அகராதி

அகத்தோர் - உள்ளிருப்போர் : ஊரார் : மனமொத்த நண்பர்.
அகநகர் - கோட்டைக்குள்ளடங்கிய நகரப்பகுதி : அந்தப்புரம்.
அகநகை - இகழ்ச்சி நகை.
அகநாடக உரு - அகக்கூத்தின் வண்ணம் : அவை கந்தமுதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டாகும்.
அகநாடு - மருதம்.


அகநாழிகை - கருப்பக்கிருகம்.
அகநிலை - ஊர் : கடவுள் : உள்நிலை : மனநிலை ஒரு பண் : உட்பட்ட நிலை.
அகநிலைக் குறிஞ்சி, அகநிலைச் செவ்வழி - சாதிப் பெரும்பண்வகை.
அகநிலைப் பசாகம் - சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது.
அகப்படுதல் - உட்படுதல் : பிடிக்கப்படுதல் : சிக்கிக் கொள்ளுதல்.


அகப்படை - அந்தரங்கப் பரிகரம்.
அகப்பட்டி - சுருங்கிய பட்டி : சிறு தீமை புரிபவன்.
அகப்பணி - மனத்தொழில் : வீட்டு வேலை.
அகப்பத்தியம் - மனோவிரதம் : இணை விழைச்சிலாமை.
அகப்பரம் - திண்ணை : வேதிகை.


அகப்பரிவாரம் - வீட்டு வேலைகாரர்கள்.
அகப்பா - அகழி : மதிலுள் மேடை : மதில் : அரண் : அகத்திணைப் பாட்டு.
அகப்பாடு - உண்ணிகழ்ச்சி : அகப்படுதல் : நெருங்கியிருக்கை.
அகப்பாட்டாண்மையன் - மனமொத்த நண்பன் : மிக நெருங்கியவன் : பிடிபடுந் தொலைவில் உள்ளவன்.
அகப்பாட்டு - அகநானூறு.

நன்றி ;நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:39 am)
பார்வை : 198

சிறந்த கட்டுரைகள்

மேலே