தமிழ் அகராதி

அகம்பு - உள்.
அகம்மியம் - அணுகக் கூடாதது : அறியக் கூடாதது : கோடி : கோடாகோடி : பத்திலட்சங்கோடி.
அகராதி - சொற்களை அகரமுதலாக வரிசைப்படுத்திப் பொருள் விளக்கும் நூல்.
அகராதிக்கிரகம் - அகரம் முதலாக வரும் முறை.
அகரம் - முதல் எழுத்து : பாதரசம் : ஊர் : அக்கிரகாரம் : பார்ப்பனச்சேரி :
இறையின்மை : கையின்மை : செயலின்மை : வீடு.


அகரு - அகில்.
அகருதம் - வீற்றிருக்கை.
அகர்க்கணனம் - கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை.
அகர்ணம் - செவிடு : பாம்பு.
அகலக்கவி - வித்தாரக்கவி : வித்தாரக்கவியைப் பாடும் புலவன்.


அகலம் - விரிவு : மார்பு : விருத்தியுரை : தரிசுநிலம் : ஆகாயம் : பெருமை : நீளம் : வேப்பலகு : யானைத்திப்பிலி.
அகலம்புகுதல் - மார்பிடத்தே முயங்கல்.
அகலர் - தீண்டாதவர் : கடவுள்.
அகலாங்கண் - அகன்ற ஊரிடம்.
அகலறை - பாசறை : மலைப்பக்கம்


நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 11:49 am)
பார்வை : 241

சிறந்த கட்டுரைகள்

மேலே