ஆட்சி இங்கு நடக்குதா..?

எங்க கூட்ட கலைச்சு
எத்தனை நாளாச்சு..?

எங்க வீட்ட இடிச்சி
எத்தனை வருசமாச்சு..?

ஓடி வந்து ஓய்வெடுக்க
கூடி வந்து சனங்க
எனக்குள்ள இடம் பிடிக்க

வசதியா இருந்த
எங்க கூட்ட கலைச்சு
எத்தனை நாளாச்சு..?

எங்க வீட்ட இடிச்சி
எத்தனை வருசமாச்சு..?

காக்கைக்கும்..காட்டு குருவிக்கும்
ஒதுங்க இடம் உண்டு
எங்களுக்கு இடம் உண்டா..?

பள்ளத்த மேடா மாத்தித்தான்
கொள்ளை அழகாக்க்கும் திட்டமாம்..!

திட்டம் புதிய திட்டம்
எதிர்காலத்துக்குப் பயனில்ல

கட்டம் இக்கட்டம்
இத்திட்டம் போதவில்ல

நிலையம் பேருந்து நிலையம்
அலைச்சல் குமைச்சல் மாறவில்ல

எத்தனை வருச சனி இதுவோ..?
எண்ணக்கி மாறும் தலை விதியோ..?

மாவட்டத்தின் ...இரண்டாம் தலை நகரம்
யார் கேட்டும் மாறல
இது... நரகம்

விண்கலப் பயணம்
தினம் கிரகம்

விடியலே இல்லாமல்
எத்தனை வருடம்...?


அரசுன்னு ஒண்ணு இருக்குதா..!?
பொது மக்களுக்குத்தான்
அது உழைக்குதா..?

ஆட்சி இங்கு நடக்குதா..?
பேச்சு மூச்சில்லாம போனதா..?


ஆண்டவர்கள்...வாக்காளர்களுக்கு
வரம் கொடுக்கிறார்கள்
எவரையும் நிராகரிக்கலாம் என்று..!

எங்க வீட்டைப் போல..!

எழுதியவர் : செ.பா.சிவராசன் (18-Oct-13, 4:37 pm)
சேர்த்தது : செ.பா.சிவராசன்
பார்வை : 64

மேலே