விதி பற்றி நபிகள் நாயகம்ஸல் அவர்கள் கூறிய விளக்கம்

விதி என்றால் என்ன என்ற கேள்விக்கு நபிகள் நாயகம் (ஸல்) ஒரு அற்புதமான விளக்கத்தை கொடுத்தார்கள்

கேள்வி கேட்டவர் சிறுவர் அலீ, அவர் மிகவும் அறிவில் கூர்மையானவர். இவர்தான் நபிகளாரின் அருமை மகளார் அன்னை பாத்திமா( ரலி) நாயகத்தை மணந்தவர். அது மட்டுமல்ல இஸ்லாத்தில் நான்காவது கலீபாவும் இவரே...

சிறுவர் அலீ அவர்களுக்கு பதில் சொல்லும் வகையில், "ஒரு காலைத் தூக்கி நில்லுங்கள்" என்று நபிகள் நாயகம் சொல்ல, அவரும் தூக்கி நிற்கிறார்.

"இப்போது மறு காலையும் தூக்குங்கள்" என்றார்கள். சற்று நேரம் யோசித்து விட்டு, தூக்கிய காலை இறக்க முயல, "அந்த காலை கீழே இறக்காமல்" என்று நபிகளார் கூற, என்ன செய்வதென்று தெரியாமல் அலீ விழிக்கிறார்.

அதுதான் விதி என்று நாயகம் விளக்குகிறார்கள். அதாவது நமக்கு சுதந்திரம் இருக்கிற அதே வேளையில் அது சில விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக புரிய வைத்து விட்டார்கள்.

எழுதியவர் : muhammadghouse (19-Oct-13, 2:26 am)
பார்வை : 321

மேலே