இப்படி எத்தனையோ

இப்படி எத்தனையயோ

இருள் போர்வையை போர்த்திக் உறங்கிக் கொண்டிருந்த வானம்,சூரியன் எழுப்ப சோம்பல் முறித்த வாறே புன்னகையுடன் எழத் தொடங்கியது…..!பூவுக்கு கை கால் முளைத்தது போல அழகாய் வயல் வெளி ஒரம் உலா வந்துக்கொண்டிருந்தான் ராகுலன்.நல்ல அழகு ,நல்ல அறிவு, வயதுக்கு மீறிய வளர்ச்சி உடன் ஒய்யாரமாய் ஒடி திரிந்தான்.படிப்பில் படுசுட்டியான ராகுலன் எட்டாம் வகுப்பில் அந்த பகுதியின் முதல் மாணவன் பரிசை வென்று மேல்படிப்பிற்கு பக்கத்து ஊருக்கு செல்ல ஆயத்தமானான்.!விடுமுறை நாட்களில் அந்த வயதுக்கே உரிய துடுக்குடனும் ,ஆர்வத்துடனும் நண்பர்களின் பேச்சு அவரவர் மீசை முளைப்பதில் மேலோங்கி இருந்தது.

என்னடா..உங்க ஆத்தா மூட்ட மூட்டயா உனக்கு மஞ்சள் பூசி விட்டுசா?மீச முடியவே காணோம். நண்பர்களின் கேலி அவனை யோசிக்க வைத்தது,யாருக்கும் தெரியாமல் தன் மூக்கின் கீழ்பகுதியை தொட்டுப்பார்த்து ஏமார்ந்து போனான்.!இப்படி ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிய…..பெண்களை வியந்தும்,ஆண்களை வெறித்தும் பார்க்க ஆரம்பித்தான் .பெணுக்குத் தான் எத்தனை எத்தனை அணிகலன்,வண்ணப்பூச்சு,,அழகின் சொர்க்கமே பெண் தான் என்று எல்லோரிடமும் சொல்லித்திரிந்தான்,பெண் யென்றால் என்ன?அவளிடம் அப்படி என்னதான் இருக்கிறது?அவளுக்கு மட்டும் ஏண் அவ்வளவு……என தெரிந்துக்கொள்ளத்துடிக்கும் விடலை பருவம் அவனுக்கு ,சரியாகிவிடும் என மனதை தேற்றிக்க்கொண்டனர் வீட்டார்.

ஒருநாள்,,,
தீடிரென அவனுக்குள் ஒரு ரசாயண மாற்றம்…!ஏதோ ஒருவித மின்னல் அவனுக்குள் பாய்ந்தது….!அவனுள் நடக்கும் வேதியியல்மாற்றம் அவனைச் செதுக்கிக்கொண்டிருந்தது…..முதல்
முறை பார்ப்பதுபோல் ,இதுவரை பார்க்காததுபோல் கண்ணாடியில் விழுந்த தன் பிம்பத்தை ரசித்து ரசித்துப்பார்த்தான்,அவனின் ஐம்புலனுக்குள்ளும் அதிசயம் நிகழத் தொடங்கியது.!ஏதோ சக்தி கிடைத்த முனிவன் போல் உள்ளுக்குள் ஒருகுரல் அவனை சூடேற்றியது.,பட்டென்று கதவை தாழிட்டான்,!எல்லோரும் என்ன ஆச்சோ?எதாச்சோ?யென பதறிக்கொண்டு ஒடி வந்தனர்.ஒரு அரைமணி நேரம் கழித்து அனைவரின் கண்களிலும் அப்படி ஒரு ஆச்சரியம்.!அனைவரும் குழுவாக பேசும் ஆரவாரம் அந்த இடத்தை மேலும் ஒலிக்கு உடன்படுத்தியது…என்ன?என்ன?யென அலரிஅடித்துக்கொண்டு வந்த ராகுலன் பெற்றோர்,அவனைப் பார்த்த அந்த நொடி கற்சிற்பமாகி நின்றனர்.போயி…….!உங்க அண்ணன பாரு!என ஏதோ ஒரு கிழவி சொல்ல எங்க அண்ணனுக்கு என்ன?என பதில் கொடுத்த செல்வியின் கண்கள்,அவனை கண்ட நொடி…..தன் இடத்தில் இருந்து நீரை சொரிந்தது,..!

கையில் வளையல்…,தலையில் பூ!முகத்தில் திலகம்!உதட்டில் சாயம்!நகத்தில் பளபளப்பு !காலில் சலங்கை!மாரப்பு மறைப்பில் புடவை…!என நளினமாய்..,ஏதோ மிகப்பெரிய விடயத்தை சாதித்த சாதனையாளன் அடைந்த திருப்தியுடன் நடந்து வந்தான்.!ஆம்!அவன் ,,,,,,,,,,,,,,,,,,அவளானான்!

என்னடா!ராமையா?ஆம்பள பிள்ளய பெத்திருக்கனு பாத்தா…..அலிப்பயல பெத்து வச்சுருக்க…!இதுக்குத்தான் இவ்வளவு அலும்பல் காட்டுனயா?இந்த பொழப்புக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்!என கேலி வார்த்தையுடனும்,கேவலப்பார்வை உடனும் ,அந்த இடத்தை விட்டு அந்த கும்பல் அகன்றது.!இடி இடித்தது போன்ற ஒரு சப்தம்.வந்த இடம் ராகுலன் கன்னம்!அவன ,விடுங்க!அடிக்காதீங்க,,,!என்ன ராசா!இதெல்லாம்,ஆம்புள பிள்ள போகக்கூடாதுப்பா!போயீ!அவுரு!தாய் கெஞ்சலானாள்!மாட்டேன் என்பதை செய்கையில் காட்டியவாரே,தன் அழகை கண்ணாடியில் பார்த்து பார்த்து பூரித்துப்போனான்!அவனின் செய்கைகள் உச்சக்கட்டம் அடைந்தன!வீட்டிலும்,வெளியிலும் இருந்து வரும் மறைமுக வார்த்தைகள் அவனை தினமும் தின்றுக்கொண்டிருந்தன,ஒருநாள்!வீட்டிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.!அழுகையும்,ஏமாற்றமும் அவனை சூழ,,,தூங்கியெழும் போது அம்மாவை தேடி அழும் குழந்தைப்போல் வாழ்க்கையைத் தேடி அலைய ஆரம்பித்தான்!பேருந்தில் உட்காரும் போதே,,அருகில் இருந்தவர் அடுத்த இருக்கைக்கு நகர ஆரம்பித்தார்.!சமுதாயத்தின் கேவலப் பார்வை அவனுக்குள் கேள்விக்குறியாய் இறங்கியது.!

தீடிரென ஒரு குடிமகன் கையைப் பிடித்து இழுத்தான்!அதிலிருந்து விடுபட போரட்டமே நடத்தினான்,ஆனாலும் பலன் இல்லை.என்னடீ!பத்தினி வேசம் போடுற?பாம்பே பக்கம் போயிட்டு வந்துட்டையா?வரையா?ஒரு நைட்டுக்கு 300ரூபாய் தரேன்!யென அவன் அசிங்கமாய் பேச,வெறிக்கொண்ட வேங்கையைப் போல அவனை தாக்கி தப்பி ஓடினான்,!காலை வரை ஓயாது நடந்த அவனின் கால்கள் கொஞ்சம் ஒய்வு தரச்சொல்லி மூளைக்கு மனுக்கொடுத்தது!ஒரு வீட்டின் வாயிலில் அமர்ந்தான்.ஏய்!என்ன!இங்க எல்லாம் உக்கார கூடாது!போ!போ!,,துரத்தினாள் அங்கு வந்த பெண்மணி!அப்போது “அவ்வை அனாதை இல்லம்”பற்றி ஒரு நல்லவர் கூற,அதன் முகப்பு வாசலில் தன் விடியலுக்கான முகாந்திரம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் உள் நுழைந்தான்!

உங்க பேரு என்ன?கேள்விக்கு யென்ன பதில் தரலாம் என யோசித்து தனக்குள் சொல்லிக்கொண்டான்.!ராதா!ராதா!என்ன பதில் சொல்லல!மறுமுனையில் இருந்து மீண்டும் கேள்வி வர,ராதா!என்றான் அழுத்தமாய்!ஒ!நல்ல பேரு!இருங்க,அம்மா வருவாங்க! எனச்சொல்லி அந்த பெண் நகர்ந்தாள்!
ஒரு ஐம்பது வயது மதிக்க தக்க அழகான,அந்த அம்பாளின் சொரூபமாய் ஒரு அம்மையார் வந்தார்.எழுந்தான்.யாரும்மா நீ?எந்த ஊரு?அதைக்கேட்ட நொடி மகிழ்ந்து போனான்!ராதா!நிலக்கோட்டை.ஒ!வயசு.-18.!ஓடி வந்துட்டையா?இல்ல விரட்டிவிட்டாங்களா?விரட்டிடாங்க!!சாப்பிட்டு 2நாள் ஆச்சு!தழும்பிய குரலில் தளர்ந்து பேசினான்,கோகிலா!இவள கூட்டிட்டுபோ!முதல சாப்பிடு!நல்லா தூங்கு!அப்பறம் பேசலாம்!என விடைப்பெற்றுக் கொண்டு போனார் அந்த அம்மையார்.!பல நாள் உணவை பார்க்காத பிச்சைக்காரனுக்கு ராஜ உணவு கிடைத்தால் எப்படி உணர்வானோ?அப்படி உணர்ந்தான் அவன்.
மறுநாள்!
ராதா!உன்பேரு நல்லா இருக்கே!என்ன படுச்சிருக்க!
+2.இப்பத்தான் முடிச்சுருக்கேன்,
என்ன மார்க் வரும்?
தெரியல
சும்மா சொல்லு
ஒரு 1100க்கு மேல வரும்.
அவ்ளோ நல்லா படிப்பையா?ம்
இவ்வளோ நல்லா பிள்ளயா இருக்க
அப்பறம் ஏன் அழுது கிட்டே இருக்க ?
என்ன நனைச்சு ?
என் நிலமைய நினச்சு !
இப்போ உனக்கு என்ன குறை ?
நல்லா படிக்குற ?
அழகா இருக்க !
அப்பறம் ?
இதுமட்டும் போதுமா மேடம் ?
என்ன அம்மான்னு நீ கூப்பிடலாம் !............
,என்று சொல்லும் போதே,,சாரதா அம்மையாரின் கண்களில் கருணை மின்னியது!

கடவுள் உன்னை கஷ்டப்பட வைக்க கூடாதுன்னு தான் இங்க அனுப்பி இருக்கார்,இத உன் சொந்த வீடா நனச்சுக்க,இனிமேல் இது தான் உன் சொந்தம்.இங்க உனக்கு நிறையா வேல இருக்கு!இனிமேல் இங்க இருக்குற குழந்தைங்களுக்கு நீ தான் ஆசிரியர்.சரியா?யென சாராதாஅம்மா சொல்ல கைக்கூப்பி நன்றி சொன்னான்.!சரி வா!வெளியில போயிட்டு வரலாம் யென அந்த அம்மா அழைக்க,,,,,,!இல்ல நான் வரல.வந்தா எல்லோரும் என்ன கேலி செய்வாங்க.இந்த மாதிரி பிறக்க நானா காரணம்.நான் வரல.அழுதுக்கொண்டே போனான்.நாட்கள் வாரங்களை கடத்தின.
இரவு-11மணி.ராகுலன் என்கிற ராதா.அந்த அம்மையாரின் கதவை தட்டினான்.யாரு! உள்ளிருந்து குரல்.நான் தான் ராதா!,வா!என்னம்மா?இந்த நேரத்தில.எதாவது வேனுமா?சாரதா அம்மா கேட்க,நீங்க தப்பா எடுத்துக்காட்டி கொஞ்ச நேரம் உங்க மடியில படுத்துக்கவா?கெஞ்சினான்.வா..!வாம்மா!என்று தன் கரம் கொடுத்தவள் மடி கொடுத்தாள்.ராதாவின் கண்ணீர் அவரின் மடியை நோக்கி பயணித்தது.முடியை கோதி,உச்சி முகர்ந்தார்.என்னப்பா?ரிசல்ட,நினச்சு பயப்படறயா?ம்………….!நீ கவலப்படாத!போய் படு!விடியும் பொழுது உனக்கான அடையாளத்தை கட்டாயம் தரும்!என்று சொல்லி அனுப்பிவைத்தார்….!தன் அம்மாவின் நினைவு அலைகளில் தத்தளித்தவாறே உறங்கிவிட்டான் ராதா!.

சூரியன் தன் கதிர்களைக்கொண்டு சுடத்தொடங்கியது,ஓ!கடவுளே!நல்ல மார்க் வரனும்.வந்தா ஆத்தா குலசாமிக்கு படையல் போடுரேன்னு சொல்லுச்சு,ஆமா!சாமி,என்ன சாமி,என்ன வீட்டவிட்டு விரட்டிவிட்ட சாமி.!விரத்திஉடன் கூட்டுப்பிராத்தனையில் உட்காந்
தான்.ராதா….!ராதா!அவனை உசுப்பியது ஒரு குரல்.உன்ன அம்மா கூப்பிடுறாங்க!கண்களை திறந்தான்.!காலம் அவனுக்கு பரிசு தரப்போகிறதோ,இல்லை வாழ்வைப் ப்போல எமாற்றம் தரப்போகிறதோ!குழம்பிக்கொண்டே அறை கதவை தட்டினான்.திறந்த பாடில்லை.தள்ளினான்….!பூ மழைக்கொட்டியது!பிரமித்துப்போனான்!அறைக்குள் அனைவரும் கைத்தட்டி அவனை வரவேற்றனர்.பெருமை கலந்த பார்வைஉடன் அம்மையாரை பார்த்தான்.இந்தா!ஒரு காகிதத்தை நீட்டினார்.அதைப் பார்த்தவுடன் ஐய்யா………….!எனக்கத்தினான்.அனைவரையும் கட்டிப்பிடித்து குதூகலித்தான்,குழந்தைகள் ஓடி வந்தனர்.அனைவருக்கும் இனிப்பை வழங்கியவாறே ,,மகிழ்வின் விளிம்பின் சிரித்துக்கொண்டெ சொன்னார்!எல்லோரும் கைத்தட்டுங்கள்,ன்நம்ப,ராதா அக்கா,,,,,,,,,,,!1179மார்க் எடுத்து இருக்காங்க.!ஏய்!ஏய்ய்!குழந்தைகள் ஆரவாரமிட்டனர்.பல வருடங்களுக்கு அந்த அலுவலகத்தில் சிரிப்பும் ,கும்மாளமுமாய் நகர்ந்தது அந்த நாள்.அவன் நினைப்பு மட்டும் அவன் அம்மாவிடம் இதை எப்படிச்சொல்வது என்றிறுந்தது..ஒரு பெண்ணிடம் அலைப்பேசி வாங்கி தன் ஆனந்தத்தை பகிர்ந்துக்கொள்ளத் துடித்த அவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.இவன் குரலைக்கேட்டு,பேயரையும் கேட்ட தந்தை இணைப்பை துண்டித்தார்,எந்த மூஞ்சிய வைச்சு இங்க பேசுற,உனக்கும்,இந்த குடும்பத்துக்கும் ஒன்னும் இல்ல.ஊருல தல காட்ட முடியல போன,வை.!அதட்டி,அலட்சியப்படுத்தினான் அண்ணன்..வேறயென்ன செய்ய முடியும் அழுவதை தவிர ராதாவால்……!

ஓடி வந்தான் அந்த அம்மையாரிடம் ,நடந்ததை சொன்னான்.
நீ!சாதிக்க பிறந்த பிறவி!யாருக்காகவும்.எதுக்காகவும் நீ அழக்கூடாது!நான் என்ன பண்ணினேன் அம்மா!ஆணும் இல்லாம,பெண்ணும் இல்லாம,போக நானா காரணம்?பேசாம,இந்த பொழப்புக்கு செத்திடலாம்…..அவன் விரத்தியில் வார்த்தைகளை கொட்டி விட்டான்.
சாகறது என்ன அவ்வளவு பெரிய விசயமா?வாழ்றதுதான் பெரிசு,வாழ்ந்துக்காட்டுறதுதான் பெரிசு….!இந்த அவமானம்,அசிங்கமெல்லாம் உன்ன மேன்மைப்படுத்த போடப்படும் உரம்,!
நான் முடிவு பன்னிட்டேன்,!நாளைக்கு பாம்பே போறோம்.எதுக்காகம்மா?சொல்றேன்.தெரிஞ்சுக்க தான,போற.

ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.!போ!ஒருவர் வந்துஅழைத்துப்போனார்,அரைமணி நேரப் போராட்டத்திற்கு பிறகு!அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிந்தது!கண் விழித்தாள்!
ஆம்!முழுமையாய் அவளாகி போயிருந்தாள்.!இப்போ சந்தோசமா?இனிமே நீ தைரியமாய் உலா வரலாம்.நீ முழுமையாய் பெண் ஆகிவிட்டாய்.!சொல்லிக்கொண்டிருந்த அந்த அம்மையாரின் விழிகள் கீழே பார்த்தது,சாஷ்டாங்கமாய் காலடியில் விழுந்துக்கிடந்தாள் ராதா!எங்க குடும்பம்,,ஊரே என்னை விரட்டிச்சு!நீங்க……..!வார்த்தை வெளியில்வராமலும்,உள்ளே இருக்க முடியாமலும் நடுவில் நின்றது.

கொஞ்ச நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அந்த அறைக்குள் நுழைந்தனர்,கையில் பூங்கொத்துடன்!
யாரு!யாரு!நீங்க!கேள்விகள் தொடுத்தாள்.ஏய்!ஏய்!ரிலாக்ஸ்!ரெஸ்ட் எடு!சாரதா அம்மா இல்லையா?கேள்வியை முடிப்பதற்குள் அந்த அம்மையார் அறைக்குள் நுழைந்தார்.ஒட்டுமொத்தமாய் அவரைச்சூழ
என்னடா!கண்ணுங்களா?நல்லா இருக்கீங்களா?
விமலா வேல எப்படி போகுது?சந்தியா ஸ்கூல் நல்ல ரிசல்ட் தருது போல.தேவிமா,இந்த வருஷம் டாப் வேல்டுல உன் பெயரும் வரனும்.ஒகே!என விசாரித்துக்கொண்டிருந்த சாரதாவை ஒருவித மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதா!ஆச்சரியப் பார்வை பார்த்துக்கொண்டிருந்த ராதாவை நோக்கியும்,நோக்காமலும் பேசிக்கொண்டிருந்த தருணம் அவளுக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கியது.அப்போது
ஏய்!ராதாகுட்டி!என்ன பாக்குற?இவங்க எல்லாம் உன் அக்காக்கள்.
அக்காக்களா?புரியல!
இவங்களும் உன்ன போல தான்.
என்ன?இவங்கயெல்லாம் திருநங்கைகளா?
சத்தியம் பண்ணி சொன்னாலும் நம்பமுடியாது,பெண்களே மயங்கும் பேரழிகள்!!என்னம்மா!நம்பமுடியல!சும்மா தானே சொல்றீங்க!
இல்லப்பா!இது நிஜம்.இவர்களும் உன்னைப் போல அடைக்கலம் தேடி நம் இல்லத்திற்கு வந்தவர்கள் தான்.இப்போது பல ஆயிரம் பேர்களுக்கு இவர்கள்தான் அடைக்கலம்.!வழித்தவறி போகாமல்,பசிக்காக சதையை விற்றுப் பிழைக்காமல்!சாதிச்ச இளம் பெண்கள்,!நீயும் இவர்களை போல சாதிச்சு பெரிய ஆளா வரனும்!அதுக்குதான் இவர்களை இங்கு வரச்சொன்னேன்.
இவங்க ஒவ்வொருத்தர்க்குள்ளையும் ஒவ்வொரு கதை இருக்கு!பலமுறை பலரால் விரட்டி அடிக்கப்பட்டு விழுந்தவர்கள்.ஆனால் அப்படியே இருக்காமல் எழுந்து,இப்போது யாருமே தள்ளி விட முடியாத உயரத்தில் உச்சியில் உட்காந்திருக்கும் இந்த ஒவ்வொருவரையும் உலகம் உற்றுநோக்கிகொண்டிருக்கிறது!இவர்களின் கையெழுத்திற்காக ,புகைப்படத்திற்காக ,இவர்களுடன் ஒரு வார்த்தைப் பேச மணிக்கணக்காய் காத்திருக்கிறது.

தேவி!கூட்டிட்டுப்போ!
எங்கம்மா?
துப்பாக்கி சுடுற,பயிற்சிக்கொடுக்க!!
துப்பாக்கி சுடுற!பயிற்சியா?ம்!நீ தான் நல்லா குறிப்பாப்பையே?உங்களுக்கு எப்படித் தெரியும்?நீ!கவட்டை வச்சு குறிப்பார்த்து மாங்காவை விழ வைத்து எல்லோருக்கும் தந்தாயே!அத நான் பாத்துட்டு இருந்தேன்.!அப்படியா?நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
இன்னும் 4மாதத்தில் “காமன்வெல்த்” போட்டியில நீ கலந்துக்க போற!
நானா?காமன் வெல்த் போட்டியிலயா? அது பெரிய விசயம்!என்னால…..?
அவள் முடிக்கும் முன்னே,
தேவி தொடர்ந்தாள்!
முடியும்!நிச்சயம் முடியும்!பயிற்சியும் ,முயற்சியும்,தன்னம்பிக்கையும்,ஜெயிச்சே ஆகனும்ன்ற வெறியும் இருந்தா,நிச்சயம் முடியும்!
உன்னால முடியும்!
அவளின் தன்னம்பிக்கை வார்த்தை ராதாவுக்குள் ஒரு புத்துண்ர்ச்சியை தந்தது,!
திருமணமாகி புகுந்தவீடு செல்லும் புதுப்பெண் போல சாரதாஅம்மாவிடம் விடைப்பெற்றுக்கொண்டு தேவியுடன் போனாள் ராதா!

வாரங்கள் மாதங்களை கடத்தின,!
அதுவரை எதுக்காக காத்திருந்தனரோ?அந்த போட்டிக்கான நாள் வந்தது….!விண்ணப்பத்தில் பெண் பிரிவில் விண்ணப்பித்தாள்!
சோதனை நடந்தது!நீ போகலாம்!நீ போட்டிக்கு வர தகுதியில்லை!
நீ!போகலாம்! என சில கோட்டுப்போட்ட நல்லவர்கள் அவளை
விரட்டிவிட்டனர்!
என்கிட்ட என்னகுறை? காரணம் வேணும்!வேணும்!கத்தினாள்!
யாருமே செவி சாய்க்க தயாராக இல்லை!
போட்டி நடக்க சில மணி நேரம் தான் இருந்தது.!தனக்குத் தானே தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லிக்கொண்டாள்!
நேராக! அரங்கத்தில் பலரும் உள்ள போது அந்த போட்டியை நிர்வகிக்கும் குழுவிடம் திடமாக பேசினாள்.
என் பெயர்-ராதா!
இந்தியா!
நான் தகுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னரும் ;தகுதியில்லை யென தூரத்தி அடிக்கப்பட்டேன்!எனக்கு நீதி வேண்டும்!
நீ!-திருநங்கை! இதில் கலந்துக்கொள்ள உனக்கு தகுதி இல்லை!பதில் வந்தது!
ஓ!இதுதான் என் குறையோ?
இந்த மாதிரி பிறக்க நான் தான் காரணமா?
ஆதியும்,அந்தமும் இல்லா அர்த்தநாதீஸ்வரனின் சொரூபம் நான்!
என்னாலயும் சாதிக்க முடியும்.
வாய்ப்புக் கொடுங்கள்!கெஞ்சினாள்!
விடுப்பா!இந்த மாதிரி ஆட்களால பெரிசா என்ன சாதிச்சற முடியும்?அதுவும் இந்தியாவுல இருந்து………….?
என தங்களுக்குள் பேசிக்கொண்டு,
ஏளனச்சிரிப்புடன்,கேலியுடனும்,ஒரு அருவருப்பான பார்வையுடனும் அனுமதித்தனர்,அந்த மேலைநாட்டு மேதாவிகள்!

அவளுக்கான அந்த தருணம்!அந்த நொடி1பிரம்ப்பில் அவள்!
மொட்டு மலர்கிற அந்த சப்தம் கூட கேட்கும் அளவு நிசப்தம் அங்கு!
ஆயத்தமானாள்!
இறைவனை பிராத்திக்க வில்லை !சாரதா அம்மையாரை மனதில் நிறுத்தினாள்!எதா இருந்தாலும்,பதறாம,பொறுமையா !கவனமா!செய்ப்பா!அம்மா,அடிக்கடி சொல்லும் வார்த்தைகளும்,மனதில் வந்து போயின!
தேவி அக்கா நம்பிக்கையை காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணமும்,தன்னை அசிங்கப்படுத்திய ,அவமானப் படுத்திய உலகை நினைத்தும்,
ஒரு விதையிலிருந்து வெடித்து எழும் முதல் இலையாய்
பட்டென்று சுட்டாள்!
உலகமே ஆச்சிரியப்பட்டது!
ரெக்கார்டு பிரேக்! ரெக்கார்டு பிரேக்! என,
எங்கு பார்த்தாலும் வியப்பின் முழக்கம்!
அவளால் அதை நம்பவும் முடியவில்லை,நம்பாமலும் இருக்க முடியவில்லை!அழுகையும்,சிரிப்புமாய்,அவையோரை நோக்கி ஒரு நிறைந்த பார்வை பார்த்தாள்!
கையை வான் நோக்கி வெற்றிக்குறிக்காட்டினாள்!
வானம் தன் பூவாகிய தூறலை அவள் மீது தூவியது!
இந்தியாவிற்கு தங்கம்!இந்தியாவிற்கு தங்கம்! எங்கும் ஒலித்தது!


விமானம் விட்டு இறங்கிய உடன்,இதுதான் ராஜ மரியாதையோ?திளைத்துப்போனாள்!அவள் கண்கள் சாரதாவையும்,தேவியையும் தேடி,தேடி ஓய்ந்து போயின!அவர்களைக் கண்ட நொடி, மழைத்துளி கண்ட விவசாயி போல் அவர்களை ஆரத்தழுவினாள்!
அவளைச் சுற்றி சுவர்ப்போல் புகைப்பட கலைஞர்கள்.பத்திரிக்கையாளர்கள்……………!எந்த உலகம் அவளை வெறுத்ததோ,இப்போது அதே உலகம் அவளுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது!
ஏய்!கலக்கீட்ட,!தேவி கைகுடுக்க!எல்லாம் தங்களிடம் பருகிய ஞானப் பால் தான் குருவே!ராதா சிரித்துக்கொண்டு பதில் கொடுத்தவாறே,அனைவருடன் புறப்பட்டாள்!அவளை நோக்கி வந்த புகைப்பட ஒளி அந்த மின்னலையே தோற்கடித்தது!
முதல்வரும்,பிரதமரும் பாராட்டையையும்,பணமுடிப்பையும் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஒரு பிரமாண்ட மேடையில் அவளை பேச அழைத்தனர்!
அவள் பேசிய முதல் வார்த்தை நான் திரு நங்கை .இதை சொல்வதில் எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை.பெருமை தான்,என ஆரம்பித்து சுமார் 1மணி நேரம் பேசினாள்!ஒவ்வொரு வரிக்கும் கைத்தட்டல்கள்.அதை எல்லா தொலைக்காட்சியும் அதை நேரடி ஒளிப்பரப்பு செய்தன,அதை பார்த்த அந்த கிராமமே உறைந்து போனது!அவள் குடும்பம் வெட்கி தலை குனிந்தது,அவள் அம்மா மட்டும்,
எம்புள்ள எங்க போனாலும்,எப்படி மாறினாலும் ஜெயிப்பான்,,யெனச் சொல்லி பட்டென எழுந்து போனாள்.பெருமையுடன்,,,,,,,,,,!

நீங்க சொல்ற மாதிரி நான் ஒன்னும் பெருசா சாதிச்சடல.!எனக்கு கிடைத்த மாதிரி வழிக்காட்டுதல் கிடைத்தால் நீங்களும் சாதிக்கலாம்.என சாரதாவையையும்,தேவியையும் காட்டி மேடைக்கு வர சொன்னாள்!மைக் சாரதாவிடம் கொடுக்கப்பட்டது

!அவளும் சொன்ன முதல் வார்த்தை நான்
நானும் " திரு நங்கை "
என்று தான் !

.அனைவரின் கண்களிலும் ஆச்சரியம்.தேவிக்கு அதுநாள் வரை தெரியாத ரகசியம்!வியந்தே போனாள் அவள்.
ராதவின் பேச்சைவிட சாரதாவின் பேச்சு இன்னும் அதிகமாய் மக்களை கவர்ந்தது.இந்த வெற்றி ஒட்டுமொத்த திருநங்கைகளின் வெற்றி!எங்களாலையும் சாதிக்க முடியும்!இந்தியாவிற்கே புகழை தேடி தர முடியும்,யென சொல்லி ஆனந்த கண்ணீரோடு,ராதாவை முத்தமிட்டு இறங்கினார்.பின் பேசிய ராதா அழுத்தமாய் ஒன்றை பதிவு செய்தாள்.

பெண் மனதை பெண் அறிவாலோ இல்லையோ ?

“திருநங்கை மனதை திருநங்கை நிச்சியம் உணர்வார்””!

புல் கூட நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் பூமியைத்தாங்கும்.!
என சொல்லி முடித்து இறங்கினாள்!அவள் வாழ்வு எழுந்தது!

நாட்டிற்கும் இப்படி நல்ல வழிகாட்டுதல் கிடைத்தால் நாடே முன்னேறி விடும் அல்லவா?

எழுதியவர் : yathvika (21-Oct-13, 1:50 am)
பார்வை : 2458

மேலே