அரசியல் அரசியல்வாதி

மின்னல்களின் வாளில் சிதைக்கப்பட்ட மேகங்கள் ரணம் தாங்காமல் தன் கண்ணீரை பூமி தாயின் மடியில் வடித்துக்கொண்டிருந்தது , அதில் சில துளிகள் அந்த கூரை வீட்டு ஒட்டைக்குள் கார்ல் மார்க்ஸின் புத்தகத்தில் பட்டுத்தெளித்தது..

புத்தகத்தை எடுத்து ஒரமாக வைத்துக்கொண்டே.................

“அடடா ! மழையே கொஞ்சம் ஒதுங்கி போயி பெய்யக்கூடாதா, என்னை சீண்டாம இருக்கமாட்டா இல்ல” என மழையுடன் பேசிக்கொண்டே தார் பாய்களை தேட ஆரம்பித்தான் ராஜ்குமார்.

ராஜ்குமார் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும் மதிப்பெண்களை விட அவனின் வசதி வாய்ப்பு குறைவாக இருப்பதினால் மேற்படிப்பு படிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கும் 16 வயது இளைஞன்.

“செம பசி வேற.. அம்மா இருந்தா ஏதாவது செஞ்சி கொடுப்பா....... ம்ம்ம் கொடுத்த வச்சவா மேல போயிட்டா.
இந்த அப்பா வெளியே போயிட்டு சாயங்காலம் வரேன் சொன்னார்.. 6 மணி ஆகுது இன்னும் காணோம்.. ராமசாமி மெஸ் ல புரோட்டா வாங்கி வரேன்னு சொன்னரே........ ”என நினைத்துக்கொண்டே பசியோடு போராடி கொண்டிருந்தான்

BC வகுப்பு பிரிவில் அவனை ஏதாவது நல்ல கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்க வைக்க ராஜ்குமாரின் தந்தை அந்த ஊர் சட்ட மன்ற உறுப்பினரின் உதவியை கேட்க சென்றிருந்தார்.. அங்கு ..
“ஏன்ப்பா.. அழகேசா உம் பையனை படிக்க வைக்கணும்ன்னா அரசு கல்லூரி இருக்கே அங்க போயி சேர்க்க கூடாதா.. பெரிய காலேஜ்க்கு எல்லாம் ஏன்னய்யா ஆசைப்படுற... ?” எம்.எல்.ஏ காசிநாதன்

“இல்லய்யா... இங்கிலிசு பேசுற காலேஜ் படிச்சா எம்மவனோட அறிவு ஜாஸ்தி ஆகும்ன்னு ....... ”

“என்னய்யா நீ ! இங்கிலீசு காலேஜ்ன்னா செலவு ஆகும்....... தெரியாதா... ”

“அய்யா அவிங்கதான் சொன்ன்ய்ங்கலே... எம்.எல்.ஏ கடுதாசி கொடுத்தா போதும் எம்புள்ளய சேர்த்துக்கிறேன்னு.. ”

“அட பாருடா........ யோவ் அது என் காலேஜ் இல்லய்யா....... எம் மச்சனோடுது.........
சரி 30,000 கொடு.... கவர்மெண்டு கோட்டாவுல சேர்க்க சொல்ரேன்... ”

“அய்யா அம்புட்டு பணத்துக்கு......... ” அழகேசனின் முகபாவனையில் புரிந்துக்கொண்ட காசிநாதன்

“என்னய்யா நீ பணம் இல்லமா என்ன எதுக்கு பார்க்க வந்த.. நம்ம ஊரு பயன்னு உன்கிட்ட பேசினா.. நீ ஒசில சிபாரிசு கேக்குற.. பணம் இல்லைன்னா .. போ போயி நீயும் உம் மவனும் பிச்ச எடுத்து கொடு... இல்லன்னா ..”

“அய்யா....... ஏழப்பட்ட ஜென்மம் ஐயா .. அப்புடி பேசாதீங்க... மானத்தோடு வாழ்றோம்.”

“அப்போ மானத்தோடு இரு... இங்க வாராத........ எழுந்திருச்சு போப்பா.. சென்னைக்கு போக நேரமாச்சு.......

ம்ம்ம் சரி சரி 25,000 கொடு போதும்.. வேற ஆள்ன்னா லட்சம் லட்சமா கேட்கலாம்... நீ ஏழைன்னு சொல்லிட்டா , மனசு கேட்கல
முடிஞ்சா பணத்தோட அடுத்த வாரம் சென்னையில எம்.எல்.ஏ ஹாஸ்ட்டல வந்து என்னைப்பாரு... உதவிப்பண்றேன். இல்ல... எப்படியோ போய் தொலை.... ”

மனதில் பெரும் பாரத்துடன் வீட்டிற்கு திரும்புகிறார். அழகேசன்.

“என்னப்பா இவ்வளவு லேட்டா வரீங்க .. பசி தாங்க முடியல........ பக்கத்துல ஆத்தாகிட்ட இட்லி வாங்கி சாப்பிட்டேன் .. 10 ரூபா ஆத்தாகிட்ட குடுத்திடுப்பா......

அப்புறம் என்னாச்சிப்பா .......... காலேஜ்க்கு நான் எப்போ போகணும். எம்.எல்.ஏ லெட்டர் எங்கப்பா? ”

“ராஜா ! அவருக்கு பணம் வேணும்மாம்....... 25,000 கொடுத்தா கடுதாசி தருவராம்... அவ்வளவு பணத்திற்கு நான் எங்க போவேன். தண்டல்காரன்கிட்ட வாங்கின 5, 000 ரூபாய்க்கே இன்னும் வட்டி கட்டி தீரல.... ”என்று புலம்பிய அழகேசனை குறுக்கிட்ட ராஜ்குமார்.

“எதுக்கு அவருக்கு அந்த பிச்சை காசாம்....... சிபாரிசு கடிதம் கொடுக்க முடியாதுன்னு சொன்னரா ?
எம்.எல்.ஏ லெட்டர் வாங்க வேணாம்ன்னு சொன்னா நீ கேட்டியா அப்பா... ! ”

“அதான் ராசா அரசாங்க காலேஜ்ல்ல போனா சின்னப்படிப்புத்தான் படிக்க முடியும்...... நீ பெரிய்ய இங்கிலீசு காலேஜ்ல்ல படிக்கணும் ராசா,, அதான் இந்தப்பன்னோட ஆச. நீ இதெல்லாம் கண்டுக்காதே...டா ராசா..
நான் யாராவது கையில கால்ல விழந்தாவது பணத்த புரட்டிப்பிடுவேன்... என்னா ”

“அப்பா .. நீ ஏன்ப்பா கண்டவன் கால் ல விழணும்...

இனி நீ என் பேச்ச கேளு அப்பா..
எம்.எல்.ஏ கிட்ட நான் எப்படி சிபாரிசு லெட்டர் வாங்கி காட்டுரேன்னுப்பாரு........ ”

“ஏண்டா நீ என்னப்பண்ணப்போற... ?? ”பதறுகிறார் அழகேசன்.

“நியாமா தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய வேலைக்கு எதுக்கு காசு.......? ”

“இது நம்ம படிப்புக்காக கேக்குற உதவிப்பா தொகுதி வேல இல்ல ராசா. நீ ஏன் டா கோவப்படுற ?

“எம்.எல்.ஏ எனக்கு கொடுப்பது சிபாரிசு இல்ல. அது கடமை.. வாக்காளனாகிய உங்களுக்கு செய்ய வேண்டிய கடமை.. எனக்கு அரசியல் சட்டம் தெரியும்ப்பா...
இன்னும் 2 வருசத்துல நானும் வாக்காளன். நானும் ஒர் ஆட்சியை நிர்ணயிக்கும் குடிமகன்.
அவருகிட்ட நான் என் உரிமையை கேக்கப்போறேன்ப்பா.. கூடவாங்க... ”


“நீ போயி என்னடா கேக்கப்போற.......”

“வாப்பா.. பயப்படாத.. ”

ஐயோ .... பிடிவாதக்காரன்.. என்ன ஆகப்போகுதோ........ ? மனதுக்குள் ஒருவித பயத்துடன் அவனுடன் செல்கிறார் அழகேசன்

எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடக்கப்போகும் விபரீத்தை அறியாமல்.....



(தொடரும்.................................. )

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (22-Oct-13, 12:06 am)
பார்வை : 476

மேலே