அரசியல் அரசியல்வாதி 2

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

அரசியல்...அரசியல்வாதி
பாகம் - 2


இதுவரை......

ராஜ்குமார் பனிரெண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வறுமையின் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத காரணத்தினால் அவனின் தந்தை எம்.எல்.ஏவிடம் உதவி கேட்கிறார். எம்.எல்.ஏ உதவிக்கு பணம் கேட்டதால் சினம் கொண்டு தன் தந்தையுடன் எம்.எல்.ஏ அலுவலகத்திற்கு செல்கிறான் ராஜ்குமார்.......


இனி.......

----------------------------------
எம்.எல்.ஏ அலுவலகம்.......

எம்.எல்.ஏ காசிநாதன் தன் கட்சி ஆட்களிடம் எதையோ விவாதித்துகொண்டிருக்கிறான்.........

ஐயா...உங்களை பார்க்க ஒர் சிறுவனும் அவனின் அப்பாவும் வந்திருக்காங்க.. வரசொல்லுட்டுமா” காசிநாதனின் உதவியாளர்

“உக்காரச்சொல்லு நான் வரேன்”

1 மணி நேரத்திற்கு பிறகு....

என்னய்யா அழகேசா.. சாயங்காலந்தானே வந்த இப்போ என்ன ? சென்னைக்கு கிளம்புறேன்ன்னு சொல்லியும் எதுக்கு வந்த...?

அய்யா .. எம் பையன் உங்கிட்ட எதோ கேக்கணும்மாம்.....

என்ன தம்பி .. என் கிட்ட கேக்க என்ன இருக்கு... உன் படிப்பு பத்தினா விசயத்த உன் அப்பன்கிட்ட சொல்லிட்டேன்ல... என்னய்யா... ஏன்டாஅழகேசா...........

“மரியாதை பேசுங்க காசிநாதன் ஐயா....... என் அப்பா உங்கள விட மூத்தவர்..” பயமறியா இளங்கன்றாக ராஜ்குமார்.

“தம்பி! யாருகிட்ட பேசுறன்னு தெரிஞ்சுதான் பேசறீயா... சின்ன பயன்னு விட்டுறேன்... இனி ஒழங்கா பேச கத்துக்கோ” தன் இயல்பான குணத்தை அடக்கிகொண்டு சாதுவான முகத்தில் காசிநாதன்.

ஐயா! நான் கத்துக்கறேன், ஆனா நீங்களும் கத்துக்க வேண்டியது இருக்கு. மக்கள் சேவைக்கு உண்டான பாடத்தில நீங்க கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

“அழகேசா......என்ன என்னை அவமானப்படுத்த உன் பையன பேச வச்சி வேடிக்கை பார்க்குறீயா...” ஆவேச தொணியில் காசிநாதன் பேச குறுக்கிட்ட ராஜ்குமார்..

“சார்.......அவர்கிட்ட உங்க கோவத்த காட்டாதீங்க என்கிட்ட காட்டுங்க... உங்களுக்கு பணம் எதற்கு... என் போன்ற ஏழை பசங்களுக்கு படிக்க வசதி ஏற்படுத்தி தர வேண்டிய பொறுப்புல இருக்க வேண்டிய நீங்க .........
பணம் கேட்பது தப்பு........ இது ஒரு ஊழல்....”

எனக்கு அந்த காலேஜ்ல சீட்டு வேணும்.... அங்க படிச்சா நான் நல்லா வருவேன்... லெட்டர் தாங்க....... ”

“டேய்........ க........ என்னயே மிரட்ட நீ யாருடா........பொடிப்பயல” அசிங்க வார்த்தைகள்.. காசிநாதனின் இயல்பை காட்டிகொண்டிருக்கிறது....... தொடர்ந்து காசிநாதன்

“அழகேசா... என்னடா... அடி ஆள் கூப்பிட்டு வந்து மிரட்டுறீயா. புள்ளயா இவன்,,, தறுதல நாய் ,, எனக்கு அட்வைஸ் பண்றான்”

“அய்யா...........!! எம் புள்ளய தறுதலன்னு சொல்லாதீங்க “
அழகேசன் தன் மகனை தறுதல என்று சொன்னதால் கோபத்தின் உச்சத்திற்கு செல்கிறார்........ வாக்குவாதம் முற்றுகிறது................
காசிநாதனின் எடுபுடிகள் அழகேசனை தாக்கும் தர்ணம்....

டேய் பொறுக்கி .........எம்.எல்.ஏ ...................
துணிச்சலான சத்தம்.. அந்த அலுவலக வளாகமே மிரண்டுப்போனது ராஜ்குமாரின் அந்த வார்த்தைகள்.

அரசாங்க சம்பளத்துல பிச்சை பொழப்பு நடத்துற நீ........... உனக்கு எல்லாம்.... வேஷ்டி, சட்டை, பதவி.. அடத்தூ
நீ பிச்சை எடுக்க எதுக்கு இந்த பதவி.. ஒரு பெருந்தன்மை இல்ல, மனசாட்சி இல்ல, மனிதாபிமானம், அடக்கம் எதுவுமே இல்லாம நீ எப்படி இப்படி எம்.எல்.ஏ ஆனீங்க... ”வயதுக்கு மீறிய பேச்சு........ அங்குள்ளவர்களின் மத்தியில் காசிநாதனை தலை குணிய வைத்தது..

சின்ன பொடியன்னு சொல்றீல.......இந்த சின்னப்பொடியன் தான்........ இனி உனக்கு எமன்...
உன் லெட்டர்ரும் வேணாம்.. மயி...ம் வேணாம்.
உன்னை விட நான் ஜாஸ்தி படிச்சிருக்கேன்... உன்னை எதிர்க்க இந்த தகுதி போதும்.. ...” ஏதோ சினிமா பார்த்து இந்த பையன் ஹீரோப்போல பேசுறான்னு என்றுதான்... காசிநாதன் உட்பட அனைவரும் நினைத்திருந்த வேளையில்........

அழகேசன் தன் நெஞ்சைப்பிடித்து மகனின் காலில் வீழ்கிறார்..
“கண்ணா........ கோவப்ப்டாதப்பா....... நம்ம தலயெழுத்து....... உன்ன அவிங்க சும்மா விட மாட்டாங்க....... போகலாம் வா.. ”

“அய்யோ அப்பா.........! என்னப்பா ஆச்சு....”

“ராசா நீ படிக்கணும் டா... அவர எதிர்க்குற சக்தி உன்கிட்ட இல்லடா ........ ஆத்திரப்படாத அவரசப்படாதடா கண்ணா”

”அப்பா... அப்பா,,,,,,,,,,, ராஜ்குமாரின் கதறல் ஒலி வானத்தில் எதிரொலித்து நட்சத்திரங்கள் மறைய தொடங்குகின்றன.... அதில் மின்னிட்ட நட்சத்திரம் ஒன்று இப்போது தன் வெளிச்சத்தை இழக்கிறது...

மீண்டும் மின்னல் தன் வாள்களால் மேகத்தை வெட்டுகிறது..
மழையாக வருகிறது ராஜ்குமாரின் கண்களில்..கண்ணீர்.
அழகேசனின் உடல் எரியும் மயானத்தில் அனாதையாக ராஜ்குமார்.!!

“தம்பி.. எழுந்திருப்பா........ வீட்டுக்கு போகலாம்...” ஊர் பெரியவர் ஒருவர் அவனை தாங்கலாக தூக்குகிறார்.

”இல்ல மாமா......... நான் வீட்டுக்கு போகல.... எனக்கு 25,000 பணம் வாங்கி தாங்க, அடமானமாக என் வீட்டு நிலத்தை எழுதி தரேன்.. அடுத்த 4 மணி நேரத்துல எனக்கு பணம் வேணும். உதவி பண்ணுங்க மாமா”

சரி நானே தரேன்.. ஆனா எதுக்கு.. அதுவச்சு என்ன பண்ணப்போற...

“சென்னைக்கு போயி, படிக்க மாமா”

“ம்ம் என்ன படிக்கப்போற தம்பி”

அரசியல்................................!!!


---------------------(தொடரும்) ..............................................

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (22-Oct-13, 5:08 pm)
பார்வை : 262

மேலே