அரசியல் அரசியல்வாதி 3

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

இதுவரை...............
ராஜ்குமார் வறுமை காரணமாக படிப்பு உதவி கேட்க , அதற்கு எம்.எல்.ஏ பணம் கேட்டதால், சினம் கொண்டு பேசி எம்.எல்.ஏ வுடன் மோதிக்கொண்டான். அந்த மோதலின் உச்சத்தில் அவனின் தந்தை மாரடைப்பால் காலமானார். கடனாக பெற்ற பணத்துடன் சென்னைக்கு அரசியல் படிக்கறேன் என்று செல்கிறான்.

-----
இனி..................

------------------------------------------------------------


சென்னை தலைமை செயலகம் ..........

கையில் பல கடிதங்கள் கொண்ட கோப்புக்களுடன் , தலைமைய செயலக அலுவரை சந்திக்க வேண்டும் என்று அங்குள்ள காவலாளியிடம் மன்றாடுகிறான் ராஜ்குமார்.

“தம்பி என்ன விஷயமா வந்திருக்க , என்ன விண்ணப்பம்ன்னு சொல்லு அப்போதுதான் உன்னை உள்ளே அனுமதிக்க முடியும்” காவலாளி

“நான் தலைமை அலுவரை பார்க்க வேண்டும், பின்பு முதலமைச்சரை பார்க்க வேண்டும். அவர்களிடம் தான் விஷயத்தை சொல்ல முடியும் சார். எனக்கு அனுமதி வேண்டும்.இல்லன்னா...”

“இல்லன்னா , தீக்குளிக்க போறீயா” கிண்டல் தொனியில் காவலாளி


“நான் முட்டாள் அல்ல... தீக்குளிக்க.. எனக்குள்ள இருக்கிற தீயை காட்ட வந்திருக்கிறேன். எனக்கு அனுமதி கிடைக்குமா கிடைகாதா?? கிடைக்காதுன்னா ஏன்னு சொல்லுங்க.. நான் ஒரு இந்திய குடிமகன். எனக்கு எந்த அலுவரையும் பார்க்க உரிமை உண்டு.” என்ற ராஜ்குமாரை காவலாளி ஆச்சிரியத்துடன் பார்க்கிறார். “இந்த வயசுல இவ்வளவு விவரமா பேசறேன்னே.. ஏதோ விவகாரம் பண்ணப்போறான்.” என்று மனதுக்குள் நினைத்தவாறே..
“தம்பி காரணமில்லாம நீ எந்த அலுவரையும் பார்க்க முடியாது அவங்க வேலையை தொந்தரவு செய்ய உனக்கு உரிமை இல்லை. முதல்ல என்ன விண்ணப்பம்ன்னு சொல்லு .. காரணம் சரியா இருந்தா மேல் அதிகாரிகிட்ட சொல்லி உனக்கு அனுமதி வாங்கி தரேன்.”

ஒரு தாளில் விண்ணப்பம் என்று அனுமதி கோரி எழுதி அந்த காவலாளியிடம் தருகிறான் ராஜ்குமார்.

விண்ணப்பத்தை படித்து பார்த்த காவலாளி மேலும் ஆச்சிரியத்துடன் ராஜ்குமாரை பார்க்கிறார், பின்பு மேல் அதிகாரியிடம் ஆலோசனை செய்துவிட்டு ராஜ்குமாரிடம்...

“கண்ணா... வெயிட் பண்ணு... உன் விண்ணப்பத்தை பரிசீலனை பண்றேன்னு சொல்லி இருக்காங்க.உன்னை கூப்பிடும் போது நீ போய் தலைமை அலுவரை பார்க்கலாம்.. என்ற காவலாளி.... “சாப்பிட்டீயா தம்பி... சாப்பாடு வாங்கி தரசொல்லவா?” கனிவுடன் கேட்கிறார்...

“இல்ல அண்ணா.. எல்லாரையும் பார்த்திட்டு சாப்பிடுறேன்... இங்க எம்.எல்.ஏ ஹாஸ்ட்டல் எங்க இருக்கு அண்ணா.. ” ராஜ்குமாருக்கும் அந்த காவலாளி மேல் ஏதோ ஒர் அன்பு ஒட்டிக்கொண்டிருந்தது.

“ம்ம்ம் தம்பி நீ ரொம்ப அவசரப்படுற... பார்த்து நிதானம்ப்பா”

“நிதானம் நிதானம் நிதானமாக இருந்துதானே அண்ணா இப்படி நாம இருக்கோம்.” அவனின் பேச்சில் அவனின் பக்குவத்தையும், அவனுள் பல நாள் ஆதங்கம் உள்ளது என்பதையும் அந்த காவலாளி உணர்கிறார்


சிறிது நேரத்திற்கு பிறகு........ “டேய் கண்ணா......... யாருக்கும் கிடைக்காத அனுமதி உனக்கு கிடைச்சி இருக்கு. உன்னை உள்ள வரச்சொல்லுறாங்க..கண்ணா.. அங்க போயி ஆவேசமா பேசாதேப்பா... புடிச்சு உள்ள போட்டிருவாங்க.”
----------
தலைமை செயலக மக்கள் பிரிவு அலுவலக அதிகாரியின் அறை...........

அதிகாரி ராஜ்குமாரிடம்

“உன் பேரு ராஜ்குமார் ..உன் அப்பா செத்துட்டார். எல்லாம் சரி.
அரசியல் அமைப்பு சட்டப்படி காசிநாதன் எம்.எல்.ஏ. செயல்படலன்னு சொல்லறீயே....அப்படி என்ன உனக்கு சட்டம் தெரியும் தம்பி ?”

“ஐயா..! உங்கிட்ட ஒரு கேள்வி... டக்குன்னு பதில் சொல்லுங்க”

“என்னப்பா உதவி கேட்க வந்தன்னு அனுமதி தந்தா....... என்னையே கேள்வி கேக்குற.. ம்ம்ம் . சரி கேளு.”

“டி. பி. கைதான் என்பவர் யார் ?”

“என்னப்பா இது கேள்வி... மொட்டையா கேட்டா எதுக்கு சம்மந்தப்பட்டவர்ன்னு தெரியாம....... ”

குறுக்கிட்ட .ராஜ்குமார்........“இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றிய 7 பேருல்ல ஒருத்தர். திரு. டி.பி.கைலான். சம்மந்தப்பட்ட இடத்துல இருக்கிற உங்களுக்கே அவரபத்தி தீடிர் ஞாபகத்துக்கு வரல,,, இப்படித்தான் ஐயா எல்லாரும் அந்த எம்.எல்.ஏ உட்பட எல்லாரும் எல்லாத்தையும் மறந்துடறாங்க.. ”

“தம்பி ... படிக்கிற பையன் நீ எல்லாத்தையும் மனப்பாடம் பண்ணி இருப்ப...சரி சரி உனக்கு இப்போ என்ன வேணும். அத சொல்லிட்டு போ... கன்சல்ட் பண்றோம்.”

“காசிநாதன் எம்.எல்.ஏ வை பதவி நீக்கணும். அதுக்கு சட்ட சபை அலுவலக செயலாளர்க்கு விண்ணப்பம் அனுப்பி இருக்கேன். காசிநாதன்னால எனக்கு பாதிப்பு வந்தா இந்த அரசு என்னை காப்பத்தணும். அதுக்கு இந்தாங்க இந்த விண்ணப்பம். இதோட நகலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்திற்கு கொடுக்கப்போறேன்..”

“மேலும் முதல் அமைச்சர் மேலயும் ஒர் குற்றச்சாட்டு இருக்கு....... அவரை நேர்ல பார்த்து நான் விளக்கம் கேட்கணும்.” திடுக்கிட்டார் அதிகாரி...... தம்பி என்ன நீ....... ஓவாரா...”

“உங்க அனுமதி வேணும்.எப்போ தருவீங்க.”.

அவனை முறைத்துப்பார்த்த அதிகாரி... காவலாளியை அழைக்கிறார்...

”இந்த பையன்கிட்ட இருக்கற பேப்பர்ஸ் எல்லாத்தயும் பிடுங்கி இவனா அனுப்பிடுங்க.பைத்தியகாரன்னை உள்ளே விட்டது தப்பா போச்சு. யார் என்னான்னு விசாரிக்கமா எதுக்கு அப்ளிகேஷன் வாங்குறீங்க ?”

வெளியேற்றப்பட்டான் ராஜ்குமார்...

காவலாளி... “உன்கிட்ட சொல்லித்தான் அனுப்பிச்சேன்.......எனக்கே வேட்டு வைக்குற பார்த்தீயா.
உன்னை பார்த்தா பாவமா இருக்கு...நீ எதுக்கும் ஜாக்கிரதையா இருப்பா. இந்த 100 ரூபா .. ஊருக்கு போயிடு”

“ இல்ல அண்ணா........ என்கிட்ட பணம் இருக்கு, நான் இங்கேயே தங்கப்போறேன்.”

“எனக்கு ஒர் உதவி அண்ணா... ராஜ்பவனுக்கு எப்படி போகணும்”

“கண்ணா.. அங்கேயும் இப்படித்தான் நடக்கும்.. போவது வேஸ்ட்.. இந்தா இது என் நம்பர்... வச்சிக்கோ உதவி தேவைப்படும் போது கூப்பிடு...”

“சரின்னா ரொம்ப நன்றி....... நான் போறேன் அண்ணா...”

“எங்கப்பா ?”

“ஆளும் கட்சி அலுவலகத்திற்கு........
எந்த பஸ்ல ஏறணும் அண்ணா ? ”

-------

ஆளும் கட்சி அலுவலகத்தில்.......... ராஜ்குமார்.

வான மேகங்கள் தன்னை கட்டுபடுத்த முடியாமல் இடி ஓசையில் முழங்க ஆரம்பிக்கிறது.........


--------------(தொடரும்).....................

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (23-Oct-13, 12:49 am)
பார்வை : 235

மேலே