அரசியல் அரசியல்வாதி 6

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/


இதுவரை....

ஏழை மாணவன் ராஜ்குமார், தன் படிப்பு உதவிக்காக பணம் கேட்ட அந்த ஊர் எம்.எல்.ஏ காசிநாதனை எதிர்க்க, அந்த மோதலின் உச்சத்தில் அவனின் தந்தை மராடைப்பால் காலமானார். பின்பு கடனாக பெற்ற பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளும் கட்சி அலுவலகம் என அரசியல் மேலுள்ள வெறுப்புணர்ச்சியையும் தன் உரிமையும் கேட்க ஆவேசமாக அலைந்தான். சாலை கடக்கும் போது கட்சி வாகனம் ஒன்று அவன் மீது மோதியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து .. மருத்துமனை ஊழியர் மாணிக்கம் வீட்டில் தங்குகிறான் , அங்கு அவனை காப்பாற்றிய IAS முன்னால் அதிகாரி அப்துல் அன்சாரி அவரின் மகள் ஜாஸ்மீனுடன். அரசியல் மாற்றம் பற்றி விவாதிக்கிறான். அப்போது தன்னால் அரசியலை மறுமலர்ச்சியை எளிதாக ஏற்படுத்த முடியும் என்று சொல்ல அவனை ஆச்சிரியத்துடன் பார்க்கின்றனர் அந்த மூவரும்...

இனி..........

-----------------------------------------------------



“ரொம்ப சிம்பிள் மேட்டரா....... ? என்னடா சொல்ற? இப்போ இருக்குற அரசியலை மாற்ற, புனிதப்படுத்த உன்னால என்ன பண்ண முடியும்? நாங்க என்ன செய்யணும் ?” ஆச்சரியத்துடன் கேள்விகளை அடுக்கிறாள் அப்துல் அன்சாரியின் மகள் ஜாஸ்மீன்.

“அக்கா! என் பேக்- அந்த அலமாரில இருக்கு, கொஞ்சம் எடுத்து கொடுங்க”
எடுத்துக்கொடுத்தாள், அதனை வாங்கி அதுனுள் இருந்த ஒர் பையை எடுக்கிறான். அதை அன்சாரியிடம் கொடுத்து
“ சார்.. இதுல 25,000 இருந்துச்சு, அதுல 1000 ரூபாய் செலவு செஞ்சிட்டேன். மீதி 24,000 இந்த பையல இருக்கு, இந்த பணம் போதும், இந்த அரசியலை மாற்ற.....”

“எப்படிப்பா ? இந்த பணத்தை வைத்து எப்படி அரசியல் மறுமலர்ச்சி பண்ண முடியும்” ஆர்வமாக கேட்கிறார் அன்சாரி

“சார்! இந்த பணத்துல ஒர் லேப்டாப், இண்டர்நெட் க்கு ஒரு டேட்டா கார்ட்.. வாங்கி கொடுங்க.. அப்புறம் சொல்றேன் எப்படின்னு”

சரி.. இந்த பணத்தை நீயே வச்சிக்கோப்பா....... நான் வாங்கி தரேன்.. இல்லன்னா ஜாஸ்மீன் லேப்டாப் யூஸ் பண்ணிக்கோ, இந்த பணம் உனக்கு, உன் படிப்புக்கு பயன்படும் டா கண்ணா”

இல்ல சார்.. நீங்க எனக்கு எவ்வளவோ உதவி பண்றீங்க, மெடிக்கல் செலவு, டிரஸ், சாப்பாடுன்னு ஏகப்பட்ட செலவு பண்றீங்க... அதற்கே நான் நன்றி கடன்பட்டிருக்கேன்.”
“ஹே! ஒவரா பேசாதே........ பின்னாடி படிச்சி பெரிய ஆளாகி என்னை காப்பாத்த மாட்டீயா என்ன ..? நீ என் பையன் போல”

“கண்டிப்பா சார்........ ”கண்களில் நீர் வழிய....... “நீங்க என் அப்பாதான்... .............................................”

சில நிமிடம் அங்கே மெளனிக்கிறது கனத்த மனங்களுடன்...

தன்னை தேற்றிக்கொண்டு “ என்னோட அப்பா ரத்தம் சிந்தி சம்பாதிச்ச என் வீட்டை அடமானமாக வைத்து இந்த பணத்தை வாங்கி வந்திருக்கேன் சார்......... சாரி சாரி.........அன்சாரி அப்பா.. இது என் நீண்ட நாள் ஆதங்கத்தை மாற்றட்டும்.... மாற்ற முடியும்.. என்னால் முடியும்.. ப்ளீஸ் வாங்கிக்கங்க.. வாங்கி கொடுங்க நான் கேட்டதை வாங்கி கொடுங்க” அவனின் பிடிவாதத்தை யாரலும் மறுக்க முடியவில்லை.

அடுத்த நாள்.......... லேப்டாப் கூடவே செல்போனுடன் ஜாஸ்மீன் அவனுக்கு கொடுத்துவிட்டு.........
“ தம்பி.. நீ கேட்ட லேப்டாப், நெட்கார்ட்.. அப்புறம் என் சார்பா இந்த செல்போன்.... உனக்கு தேவைப்படும் ஓகேவா”
“ தேங்க்ஸ் அக்கா..”
“அடி வாங்குவ தேங்க்ஸ்மாம் தேங்க்ஸ்... நீயே வச்சிக்கோ உன் தேங்க்சை”
“ஒ ஓகே சாரி அக்கா”
“என்னடா மாயம் பண்ணுற.... எங்கிருந்தோ வந்த, அடிப்பட்ட, எங்க கூட பாசமா இருக்க....... அரசியல் மாற்றம் வேணும்ன்னு சொல்லி .. எங்களையும் தூண்டி விடுற.........உன்கிட்ட என்னமோ இருக்குடா தம்பி.... சரி சரி.. அது இருக்கட்டும்.... எல்லாம் வாங்கி கொடுத்தாச்சு... இப்போ சொல்லு.. என்ன பண்ணப்போற... நான் உனக்கு என்ன பண்ணனும்?” ராஜ்குமாரிடம் அடுத்த அதிரடி பதிலுக்கு காத்திருந்தாள் ஜாஸ்மீன்.

“ அக்கா.. உங்களுக்கு எவ்வளவு நண்பர்கள் இருப்பாங்க”
“ம்ம்ம் மொத்தமா.......கிளோஸ் பிரண்ட்ஸ், காலேஜ் பிரண்ட்ஸ்.. மீடியா வழியா நிறையா பிரெண்ட்ஸ்ன்னு 100 பேரு இருப்பாங்க”
“சரி அக்கா.. அந்த 100 பேருக்கு எவ்வளவு பிரெண்ட்ஸ்? நானே சொல்றேன் உங்களுக்கு தெரியமா கண்டிப்பா ஆளுக்கு 50 பேர் இருப்பாங்க ..ஆக 100 X50 -500.. அப்படியே எல்லாருடைய நண்பர்கள் வட்டத்தையும் சேர்த்திட்டு போனா கண்டிப்பா 1 லட்சம் பேர் இருப்பாங்க இல்லையா... அந்த 1 லட்சம் பேர் தமிழ் நாட்டுல இருக்குற அனைத்து குடும்பங்கள் லிஸ்ட்ல இருந்து குறைந்தபட்சம் சில குடும்பத்துல யாராவது உறுப்பினரா இருப்பாங்க இல்லையா. இது உங்ககிட்ட இருந்து வந்த லிஸ்ட் மட்டும்தான். இதுப்போல மத்தவங்க நண்பர்கள் வட்டத்தை எடுத்துகிட்டா இந்தியா-ல இருக்கும் குறைந்தப்பட்ச மக்கள் தொகை வந்திடும்.” மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை அசல்ட்டாக கணிக்கிட்டு சொல்லும் ராஜ்குமாரை ஜாஸ்மீன் மிரண்டு கொண்டுத்தான் பார்த்தாள்.
”இவன் பெரிய திட்டத்த வச்சிருக்கான் போல..” என மனதுக்குள் பிரம்மித்து இருந்தவளை...

“என்ன அக்கா........... சைலண்ட் ஆகிட்டீங்க.. இன்னும் நான் முடிக்கல....பட் நான் சொல்றதை வேற யார்கிட்டயும் சொல்லக்கூடாது.. சரியா........” என கட்டளையிட்ட ராஜ்குமார் தொடர்கிறான்.

“ கிட்டதட்ட இது சினிமா பாணிதான்.. ஆனால் அமைதி புரட்சி........ நான் தான் .. இந்த வேலை பண்றேன்னு அரசியல்வாதிங்களுக்கு தெரியக்கூடாது.”

“என்னடா.... ஏதோ இங்கிலீஷ் படத்துல வர்ற மாதிரி பிளான் போடுற.... இல் லீகலா எதாவது பண்றீயா.. ?
அப்படீனா நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்”

“ஐயோ அக்கா........! சட்டத்திற்கு புறம்பா இல்ல... ஆனா கொஞ்சம் மறைமுகமா.... போரின் போது புதருக்குள்ள மறைஞ்சு இருந்து தாக்குதல் பண்ணுவதை விட இது மிகவும் சாதாரண விஷயம் என்று சொல்லிக்கொண்டே..”

புதிய லேப்டாப் ல் இணைய வசதியை ஏற்படுத்திக்கொண்டு........ எதை எதையோ தேடுகிறான்.......

“அக்கா......இங்க பாருங்க ........இதுதான் நான் பண்ணப்போற மாற்றத்திற்கான அடிப்படை ஆரம்பம்.......”

அதனை பார்த்த ஜாஸ்மீன் முகம் மலர்கிறது....... “ இதுக்குதான் இவ்வளவு பில்டப் பண்ணி கேட்டீயா.. நானே ரொம்ப பயந்துட்டேன்... படுவா... நீ கிரிமினல் டா........”

“ ஆமா அக்கா...... கிரிமினல்ஸ் ஒழிக்க கிரிமினலா தான் யோசிக்கணும்.. இத நான் காலேஜ் முடிச்சு, வேலைக்கு போனப்பிறகு பண்ணலாம்ன்னு இருந்தேன்.. என் கடமையை சீக்கிரம் முடிக்கணும்ன்னு விதி இருக்குபோல” மிகவும் உறுதியாக பேசுகிறான், ஒர் பெரிய மறுமலர்ச்சியை சுலபமாக மாற்ற துடிக்கும் விடலை பையன் ராஜ்குமார்.

அப்போது அங்கு வந்த அப்துல் அன்சாரி....... மற்றும் மாணிக்கம் இருவருக்கும் ஜாஸ்மீன்.. ராஜ்குமாரின் திட்டத்தை பற்றி பெருமையாக எடுத்து சொல்கிறாள்.

அன்சாரி....... “ டேய் பிர்லியண்ட் ஐடியா டா............. சரி ஆனா உனக்கு.. இடது கைதான் இன்னும் முழுமையா குணமாகல.. எப்படி லேப்டாப் பயன்படுத்தப்போறப்பா..”

“ ஆமா அன்சாரி அப்பா.....வலிக்கத்தான் செய்யுது... வலியோடு செய்யும்போதுதான் வெறியோட சாதிக்க முடியும். ஆனா நான் ஆரம்பிக்கிற இந்த திட்டம் மக்கள்கிட்ட விழிப்புணர்ச்சி ஏற்படுத்தத்தான் முடியும். அவர்களை செயல்பட வைக்க உங்களால், உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே முடியும்.”

“என்னப்பா.. இப்படி எல்லாம் பண்ணிட்டு கடைசில நீ அரசியல்வாதியா மாறப்போறீயா என்ன?” மாணிக்கம்

”இல்ல அண்ணா......... அரசியல்வாதி என்பது கட்சி ஆரம்பிக்கிறதும். கரைவேட்டி கட்டி அலைவதும், தலைவன் என்ற பதவி மட்டும் இல்லயே.... மக்களுக்கு தேவையான உரிமையை அரசு மற்றும் ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்று தருவது....ஒர் அரசை இயற்ற தேவையான உறுதுணையை தருவது..அரசியல் .அப்படி தருபவன் தான் அரசியல்வாதி.. இது ஒரு கலை, சேவை. எங்கிருந்தும்.. எந்த நிலையில இருந்தும் நம் சேவையை செய்யலாம் அண்ணா. உங்களை சொல்லி தப்பு இல்ல அண்ணா.. நாம இப்போ இருக்குற அரசியல் பித்துக்குளிங்க மத்தியில இருக்கோம்.. அதான் அவங்க எண்ணம் நம்ம மேல நமக்கு தெரியமா திணிக்கப்பட்டிருக்கிறது.” என்று சொன்ன ராஜ்குமாரை ஓடி வந்து கட்டிப்பிடித்தார் அப்துல் அன்சாரி.

“கண்ணா.. நீ சாதாரண ஆள் இல்லடா........பிறவியிலேயே அரசியல் புத்தியோட பிறந்திருக்க.. நான் கூட அரசியல் பற்றி படித்துதான் ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணினேன். ஆனா உன்னை மாதிரி எளிமையா சொல்ல தெரியலடா... இந்த வயசில இருக்கிற பக்குவம் ரொம்பவும் அபாரமானதுடா......... என்னம்மா சிந்திக்கிற நீ.......ம்ம்ம்.”

“நன்றி அப்பா !! எல்லாம் சே.குவாரா, கார்ல் மார்க்ஸ், பாரதி, விவேகானந்தர் போன்றவர்களை சின்ன வயசில இருந்து படிச்சி படிச்சி அவங்க சிந்தனைக்குள்ளே சிறைப்பிடிக்கப்பட்டேன் ... அன்சாரி அப்ப...!”

“எல்லாம் சரிடா......... பிளான் எப்படி மூவ் பண்ணப்போற.. எப்படி ஆரம்பிக்கப்போற....” ஜாஸ்மீன் ராஜ்குமாரின் பேச்சிற்கு தடைப்போட்டததுபோல பேசினாள்

“ அக்கா இன்னிக்கு நைட் நான் ஆரம்பகட்ட வேலையை பார்த்து ரெடிப்பண்றேன். நாளைக்கு காலையில நீங்க வாங்க... உங்களுக்குதானே தெரியும் மக்களை கவர என்ன மாதிரி முயற்சி பண்ணனும்ன்னு.......”

“ சரி சரி நான் வரேண்டா............. மாணிக்கம் அண்ணா... டி.வி.. போடுங்க என்ன நியூஸ்ன்னு பார்க்கலாம்”

செய்தி சேனல் ஒன்றில்........... செய்தி ஓட்டமாக (Scrolling ) வந்த அந்த செய்தி.......... ராஜ்குமாரை ஆவேசப்படுத்தியது..................!!!



---------------------(தொடரும்)......................

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (25-Oct-13, 4:08 am)
பார்வை : 314

மேலே