அரசியல் அரசியல்வாதி 8

------------------- கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

முன் கதை சுருக்கம் :

ஏழை மாணவன் ராஜ்குமார், தன் படிப்பு உதவிக்காக பணம் கேட்ட அந்த ஊர் எம்.எல்.ஏ காசிநாதனை எதிர்க்க, அந்த மோதலின் உச்சத்தில் அவனின் தந்தை மராடைப்பால் காலமானார். பின்பு கடனாக பெற்ற பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளும் கட்சி அலுவலகம் என அரசியல் மேலுள்ள வெறுப்புணர்ச்சியையும் தன் உரிமையும் கேட்க ஆவேசமாக அலைந்தான். சாலை கடக்கும் போது கட்சி வாகனம் ஒன்று அவன் மீது மோதியதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடித்து .. மருத்துமனை ஊழியர் மாணிக்கம் வீட்டில் தங்குகிறான் , அங்கு அவனை காப்பாற்றிய IAS முன்னால் அதிகாரி அப்துல் அன்சாரி அவரின் மகள் ஜாஸ்மீனுடன். அரசியல் மாற்றம் பற்றி விவாதிக்கிறான். பின்பு நால்வரும் திட்டத்தை அடுத்த நாள் ஆரம்பிக்கலாம் என்று கலைந்து செல்கிறார்கள்.. அரசியலில் புதிய விடியலை உருவாக்கும் தன்னம்பிக்கையில்...........

இனி.........


விடியல் துவங்கியது............!

மாணிக்கம் வீடு.,

“ஏன்ப்பா.. ராஜ்..இராத்திரி முழுக்க நீ தூங்கமா என்னமோ எழுதிட்டே இருந்தா.. பாரு மணி இப்போ 7 ஆகுது,, கொஞ்ச நேரம் தூங்குப்பா.. அன்சாரி சார் 10 மணிக்கு வருவார், அப்போ எழுப்பி விடுறேன்”

“இல்லைன்னா எனக்கும் தூக்கம் வரல.. பொதுமக்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கணும்ன்னு யோசித்து யோசித்து எழுதிப்பார்த்தேன். என்னால தூங்கவும் முடியாது அண்ணா...”

“ சரிடா கண்ணா,, நல்லா தூங்கினாதானே நீ இன்னும் தெளிவா யோசிக்க முடியும்... சரி பிடிவாதக்காரன் நீ கேட்கமாட்டா “

சற்று நேரத்திற்கு பிறகு...........

அன்சாரி, அவரது மகள் ஜாஸ்மீன் ஆகிய இருவரும் வந்தனர். வந்ததும் அனைவரும் காலை உணவு சாப்பிட்டுக்கொண்டே அரசியல் மாற்றத்திற்கான திட்டத்தை கலந்துரையாடினர்..

திட்டம் இறுதி வடிவத்திற்கு வந்தது.

-----------------------------------------------------------------------------------------------------
திட்டத்தின் முதல் நாள் :

ஜாஸ்மீன் லேப்டாப்-ல் இணையத்தின் இணைப்பை ஏற்படுத்தினாள். கனடாவில் உள்ள தனது தோழிக்கு ஒர் மின் அஞ்சலை அனுப்பினாள் . அதில்
பேஸ்புக் (FaceBook) ல் கணக்கு ஒன்றை “தேசம் ” பெயரில் ஆரம்பிக்குமாறும் அதன் மூலம் தனி பக்கத்தை ஒன்று உருவாக்கி “ மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் (MTNM)” என்ற பெயர் அதற்கு பெயர் வைக்கமாறும் கேட்டுக்கொண்டாள்.
இந்த பேஸ்புக் பக்கத்தின் கொள்கை என்று சில வாசகங்கள் பதிவு செய்யவும் ஆலோசனை வழங்கினாள்.

சற்று நேரத்தில் ஜாஸ்மீன் கேட்டுக்கொண்டபடி, MTNM பக்கம் கனடாவில் உள்ள தோழியால் உருவாக்கப்பட்டது.
-- இரவில் வாங்கிய சுதந்திரம் இன்னும் இருளிலிருந்து விடுதலையாகவில்லை. இரவோடு இரவாக சுதந்திரமான அரசியலை கைப்பற்றிய சில சுயநலக்கும்பல்கள் அரசியல்வாதி என்ற போர்வையில் நம்மை ஆண்டுக்கொண்டிருக்கின்றன. இந்த கும்பலின் அட்டுழியம் என்ன ? நீங்கள் ஏமாந்தது என்ன ? உங்களின் அறியாமை என்ன ? உங்களின் மக்கள் பிரதிநிதி நேர்மையானவரா ? விடைக்காண வாருங்கள். விடைகள் உங்களிடமிருந்தே தரப்படும்.
அரசியல் மாற்றம் ஒன்றே இதற்கான விடையாக அமையும் என்பதே இந்த பக்கத்தின் நோக்கம். இணைந்திடுங்கள். கலந்துரையாடுங்கள். நம்மை மாற்றிக்கொண்டு அரசியல் மாற்றம் காண்போம்------ LIKE PAGE

இதுப்போன்று ஆங்கிலத்திலும் ஒர் தனிப்பக்கம் உருவாக்கப்பட்டது

-------------------------

முதல் ஆளாக இந்த பக்கத்தை தன் உண்மையான பேஸ்புக் கணக்கில் இருந்துவாறு தேர்வுசெய்தாள் ஜாஸ்மீன். அடுத்து மதுரையில் இருக்கும் மாணிக்கத்தின் நண்பர்க்கு தகவல் சொல்லி இந்த பக்கத்தை பார்க்க அறிவுறுத்தினான்.
பின்பு கோவையில் இருக்கும் அன்சாரியின் பழைய நண்பர். தொடர்ந்து திருச்சி, வேலூர், காஞ்சிபுரம், சிதம்பரம், திருநெல்வேலி,சேலம் மற்றும் சில வெளிநாட்டில் வாழம் இந்தியர்கள் என வலுக்கட்டாயமாக அரசியல் ஆர்வலர்கள் மற்றும் நேர்மையான நபர்களை இந்த பக்கத்தை விரும்பவும் பார்க்கவும் செய்யப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் இந்த பக்கம் ராஜ்குமார் மற்றும் அன்சாரி குழுவால் உருவானது என்று தெரிவிக்கப்படவில்லை.

” இந்த பேஸ்புக் பக்கத்தை ஏன் கனடாவில் இருந்து உருவாக்கணும் ?” மாணிக்கத்தின் சந்தேகம்
“அண்ணா ! இது நமக்கு ஏற்படுத்திக்கொள்ளும் கவசம். இதன் விளைவுகளை பின்பு நீங்களே அறிவீர்கள்” ஜாஸ்மீன் புதிர் போட்டு பதில் சொன்னாள்.
பின்பு,
” MTNM” என்ற பேஸ்புக் பக்கத்திற்கு நுழைந்தாள்.

ஆச்சிரியம் ........ பக்கத்தை விரும்புவதாக 230 லைக்குகள் வந்திருந்தன. ஆனால் விரும்பிய பலர் கேட்ட கேள்வி..
=================
நீங்கள் யார் ?

நாங்கள் ஏமாறுகிறோம் என்று சொல்வதற்கு நீ யார் ?

எங்கள் தொகுதியில் எல்லாம் நல்லாத்தானே போகுது

உங்களால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியுமா?

ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ? எனக்கு சோறு கிடைக்கிறது.

கட்சி ஆரம்பிக்க இப்படி ஒரு வழியா ?
================

இப்படி பலப்பல பதிவுகளும் கேள்விகளும் வந்தன.

பொறுப்பை உணராதவர்களின் பொறுப்பற்ற பதிவுகள். இப்படிப்பட்ட கேள்விகள் வரவேண்டுமென்றே காத்திருந்தனர் இந்த நால்வர் குழு.

ஒட்டு மொத்தமாக பதில் தரப்படுகிறது.
-------------------------------------------------
அன்பர்களே ! இந்த பக்கம் உங்களுக்கு உருவாக்கப்பட்ட பக்கம்..
இந்த பக்கம் யாருக்கும் சொந்தம் அல்ல.
இந்த பக்கத்தினால் எந்த ஒரு அமைப்போ , தனி நபரோ ஆதாயம் அடையாது.
இது முற்றிலும் உங்களுக்கான அரசியல் தீர்வு,,
தீர்வுக்காக உங்களில் யாரோ ஒருவர் இந்த பக்கத்தின் வாயிலாக உதவுவார்கள்.


பலதரப்பட்ட மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு அடிப்படையானது எது? அரசியல், அரசியல்வாதி என்ற பெயரில் செய்யப்படும் மோசடிகள். அதன் பாதிப்பில் அரசு அதிகாரிகளும் லஞ்சம், ஊழல் என்று வாங்கிக்கொள்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியுமா? அந்த ஊழல், லஞ்சத்தின் பிண்ணனியில் அரசியல் இல்லை என்று உறுதியாக யாரவது சொல்லுங்களேன்.

வீடு, மனை என்று நீங்கள் வாங்கும்போது யாருக்கும் அதிகப்பட்சம் பணத்தை நீங்கள் தரவில்லையா ?
ரியல் எஸ்டேட் முதலாளிகள் அரசியல் பின்புலம் அற்றவரா ?
பிரச்சினை என்று வரும்போது நீங்கள் காவல் நிலையத்திற்கு செல்லும்போது அங்கு ஏதேனும் ”செல்வாக்கு” ஆட்களை நீங்கள் பயன்படுத்தவில்லையா அல்லது அப்படிப்பட்ட ஆட்களினால் உங்கள் தரப்பு நியாயம் வலுவிழக்கவில்லையா ?

உங்கள் ஊரில் குண்டு, குழி ரோடுகள் இல்லையா ? தண்ணீர் ஒழுங்காக வருகிறதா ? சாக்கடை அடைப்பு இல்லாமல் ஓடுகிறதா ?
இதுப்போன்ற பிரச்சினைகளுக்கு உங்கள் மக்கள் பிரதிநிதி தானாக வந்து சீர்செய்திருக்கிறரா.. ?

அரசாங்க உதவி இல்லாமல் வாழம் அதிசிய மனிதரா நீங்கள். ?
அரசியல் வேண்டாம் என்றால் உங்கள் குடும்ப அட்டை, வாக்களார் அட்டை திரும்ப ஒப்படைக்க தயாரா ?

இப்படிப்பட்ட கேள்விகளை உங்களுக்குள்ளே கேளுங்கள்.
அதற்கான விடையை இங்கே பகிருங்கள். பின்பு
இந்த பக்கம் யாரால் ஆரம்பிக்கப்பட்டது என்ற பதில் விரைவில் வரும்.

நன்றி அன்பர்களே !!

--------------------------------------------------------

“அக்கா ! இதற்கு எல்லாம் எதிர்கேள்வி கேட்கும் திறமைசாலிகள் தான் நம் மக்கள். சமுதாய தளத்தில் வாய் சொல் வீரர்கள். அதிகார அரசியல்வாதிகளை கேள்விகள் கேட்க சொல்லுங்கள்... ம்ம்ம் இந்த பூனையும் பால் குடிக்குமா? என்று முன்பும் பின்பும் கை வைத்து அடைத்துக்கொண்டு போவார்கள் “ ராஜ்குமார் நக்கல் தொனியில்

“ஆமா ராஜ் . சரி நம்ம பிளான் சரியாக போகிறது என்றே தோன்றுகிறது. இது நகர்புறத்து மக்களை மட்டுமே சென்றடையும். கிராமத்தில் எல்லாரும் பேஸ்புக் யூஸ் பண்ணமாட்டார்களே... படிக்காதவரகள் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டுமே? ..அத எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்.” ஜாஸ்மீன்

“ஜாஸ்மீன் ! உனக்கு தெரிந்த மீடியா பிரெண்ட்ஸ்ம் இந்த பேஜ் லைக் பண்ணி இருக்காங்களா ? ஆக இந்த பேஸ்புக்கினால் அவர்களை சென்றைடய வாய்ப்பு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த பேஸ்புக்கிற்கு வரும் ரெஸ்பான்ஸ்க்கு தொடர்ந்து பதில் தரணும். எப்போதும் ஆன்லைன்ல இருக்கணும். நீ இல்லாதப்ப ராஜ்குமார் மேனேஜ் பண்ணட்டும். “ அன்சாரி தன் மகளிடம் சொல்கிறார்.

“இன்னும் 5 நாளைக்கு இதுல மட்டும் கவனம் செலுத்துவோம். ஆனால் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்து விட்டதா என்பதை எப்படி அறிவது என்பதையும் பின்னர் நாம் சிந்திக்க வேண்டும் அன்சாரி சார் “ மாணிக்கம்

மீண்டும் பேஸ்புக் “MTNM “ பக்கம் அனைவரின் கவனமும் சென்றது. தற்போது 895 லைக்குகள்.

பதில் பதிவுக்கு 124 லைக்குகள், அதற்கு பல பதில் கருத்துக்கள், எதிர்கேள்வி உட்பட... அனைவருக்கும் பதில் அளித்தாள் ஜாஸ்மீன். அதில் பலவற்றிக்கு அவர்களில் சிலரே பதில் அளித்துள்ளனர். அதுவும் இவர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதன் அடிப்படையில் விவாதம் காரசாரமாக நடத்திக்கொள்கிறார்கள்.

குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் தந்திரம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

மேகங்கள் அற்ற வானத்தில் கதிரவன் தன் ஒளியை “சுரீர்” என பூமியில் படர வைத்தான்……………….

=============தொடரும்=================

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (27-Oct-13, 2:24 pm)
பார்வை : 331

மேலே