அரசியல் அரசியல்வாதி 9

------------------ தொடர்கதை : இரா .சந்தோஷ் குமார் ./*/

முன்கதை சுருக்கம் :

ராஜ்குமார்....... 16 வயது பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவன். வயதுக்கு மீறிய சிந்தனையாளன். பயமறியா குணம் கொண்டவன் என்பதால் தான் கல்லூரி சேர பரிந்துரை கடிதம் வழங்க பணம் கேட்ட எம்.எல்.ஏ வை எதிர்த்து பின்பு தன் தந்தையை இழுந்தான்.. அரசியல் மாற்றம் வேண்டும் என்று எண்ணி தன் வீட்டை அடமானமாக வைத்து 25,000 ரூபாய் பணத்துடன் சென்னைக்கு வந்து தலைமை செயலகம், ஆளுங்கட்சி அலுவலகம் என தன் மனக்குமறல்களையும், சில புகார்களுடனும் அலைந்தான்.. ஆனால் அவனின் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.
சாலை கடக்கும் போது ஏற்பட்ட விபத்துக்குள்ளாகிறான். அவனை காப்பாற்றுகிறார் முன்னாள் IAS அதிகாரி அன்சாரி. அரசு மருத்துவமனையில் சிகிச்சையின் போது மருத்துவமனை ஊழியர் மாணிக்கத்துடன் நட்பாகி பின்பு மாணிக்கத்தின் வீட்டிலேயே தங்குகிறான். அங்கு அரசியல் மாற்றம் வேண்டும் என்று தன் விருப்பத்தை அன்சாரி, அவரது மகள் செய்தியாளர் ஜாஸ்மீன், மாணிக்கம் ஆகியோரிடம் சொல்லி ஒர் திட்டத்தை முன் வைக்கிறான். அதற்கு அவர்களின் உதவியையும் பெற்றான்..
பின்பு
முகநூல் மூலமாக ” மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் “ என்ற பக்கத்தை உருவாக்கி மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தப்படுகிறது. இந்த முகநூல் பக்கம் இந்த நால்வர் குழவால் நடத்தப்படுகிறது என்பதை யாரும் அறியாமல் இருக்க ஜாஸ்மீனின் தோழி ஒருத்தி கனடாவில் இருந்து இந்த பக்கத்தை ஆரம்பித்து கொடுத்தாள்
இந்த பக்கத்திற்கு அநேகம் பேர் வரவேற்பு தெரிவிக்க, சிலரின் எதிர்கேள்விக்கும் ஆதங்கமாக பதில் அளிக்கப்படுகிறது.. மேலும் முகநூல் மூலமாகவே அரசியல் மாற்றம் குறித்த விழிப்புணர்ச்சி கிராமப்புறத்திலும் பரப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது... மேலும் இந்த அரசியல் மாற்றம் 30 நாட்களில் கொண்டு வர வேண்டும் என்றும் கால வரைறை நிர்ணியக்கப்படுகிறது இந்த நால்வர் குழுவால் .. முதல் 5 நாட்கள் முடிந்தன

இனி................

திட்டத்தின் 6 வது நாள்.........

மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் (MTNM) பக்கத்தை 1,50,876 பேர் விரும்பி(like) இருந்தார்கள்.
அரசியல் மாற்றத்திற்கான தேவையை பெரும்பாலன நபர்கள் உணர்ந்தே இருந்தனர் என்பது அவர்களின் கருத்தின் மூலம் அறிய முடிகிறது. சிலர் இந்த பக்கத்தை கேலி செய்தும் , எதிர் மறையாகவும் கருத்திட்டுள்ளனர். அவற்றில்
சில எதிர் கருத்துக்களுக்கு ராஜ்குமார் பதல் அளிக்க ஆர்வமாக இருந்தான்.

” அன்சாரி அப்பா... இங்க பாருங்க நாகூர்ல இருந்து யமுனான்னு ஒருத்தங்க கேட்ட கேள்வி. ***நீங்க ஆளும் கட்சியை மட்டும் எதிர்க்கற மாதிரி இருக்கு, அரசியல் மாற்றம் தேவைதான் .. அந்த அரசியல் மாற்றத்தினால் மீனவர் பிர்ச்சினை மற்றும் ஸ்ரீலங்கா -வில் தனி ஈழம் ஆகிவற்றின் தீர்வு தெளிவாக கூற முடியுமா? இந்த குழுவில் இருக்கும் யாரேனும் பதில் அளிக்க வேண்டும்*** இந்த யமுனா கேட்ட கேள்விப்போலத்தான் பல கேள்விகள் வந்திருக்கு. இதுக்கு நாம என்ன பதில் தரலாம்ன்னு யோசித்து வைச்சிருக்கேன். சொல்லுட்டுமா ? “

அன்சாரியிடம் சொன்னான்.. அதில் சில மாற்றங்களை சொல்லி பதிவு செய்ய சொன்னார். அதன்படி பதிவு செய்ய முற்பட்ட போது.. ஜாஸ்மீன் “ ராஜ், இதுல நாம எந்த கட்சியும் சாராத குழு அப்படீன்னு அழுத்தமா சொல்லணும். மேலும் இத குழுவில் இருக்கும் ஒர் உறுப்பினரா சொல்லணும். ஏன்னா.. இது பொதுவான குழுவாகத்தான் நம்பிட்டு இருக்காங்க. நாம் நம்ம கருத்தை திணிக்கிற மாதிரி இருக்கக்கூடாது.. ஆனா திணிக்கனும்.. புரியுதா ராஜ் “

“ம்ம் சரி அக்கா.......” ராஜ் அந்த குழுவை விரும்பும் ஒர் உறுப்பினராக வேறு கணக்கில் இருந்து பதிவு செய்தான்.

அது .........

==இந்த பக்கத்தில் பல நல்ல கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. மேலும் சில சந்தேகங்கள் மற்றும் எதிர் கருத்துக்கள் வந்திருக்கின்றன. இவ்வாறன கருத்துக்கள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
இதை நான் உங்களில் ஒருவனாக முன்வைக்கும் கருத்து.

இந்த பக்கம் எந்த கட்சிக்கும் ஆதரவாக இருப்பது போல தெரியவில்லை... அப்படி இருந்திருந்தால் சில கட்சியின் குறிப்பிட்ட கொள்கைகளை தானே முன் வைத்திருக்கும் . அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடும் தவறாக இருந்தால் அந்த தொகுதி சார்ந்தவர்களே கேள்விகளை எழுப்பி விடைக்காணத்தான் அழைப்பு விடுத்திருக்கிறது.

ஆளும் கட்சி மட்டுமல்ல.. அனைத்து கட்சிகளும் ஈழப்பிரச்சினையை தன் வாக்கு வங்கி சேவையாக தான் பயன்படுத்துகின்றன. உண்ணாவிரதம் நாடகம் முதல் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் நாடகம் வரை குறிப்பிட்ட கட்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் நாடகம் தான் நடத்தி இருந்தன. குரலை உயர்த்தி பேசியவர்கள், இறுதிப்போரில் தமிழ் இனத்தை அழிக்க ஆயுத உதவி செய்த மத்திய ஆளும் கட்சிக்கு எதிராக போராடவில்லை.. போராட்டம் என்று இவர்கள் செய்தது, சாலை மறியல், தீக்குளித்தவர்களுக்கு ஆதரவான அறிக்கை, தமிழ் இனத்துரோகி என ஒருவருக்கொருவர் தாக்கி பேசியது என்று மட்டும்தான்.

ஆக அரசியல் ரீதியான தீர்வுதான் ஈழப்பிரச்சினைக்கு முடிவாகவும் சுபமாகவும் அமையும். அது இப்போதுள்ள இந்த அரசியல் ஜால்ராக்கள், அரசியல் கேடிகளால் முடியாது.

ராஜபக்சே வீட்டு நாய்களுக்கு இருக்கும் மனிதாபிமான உணர்வு கூட இங்கு தமிழ் மக்களாகிய நமக்கு இல்லை. அரசியல்வாதிகளால் இறுதிக்கட்ட போரை தடுக்க முடியவில்லை என்று குறை கூறும் தமிழனாகிய நாம் அன்று என்ன செய்தோம்...... என்ன கிழிதோம் .. ?? அவரவர் வீட்டில் தொலைக்காட்சிகளில் இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலைகளை விளம்பரங்களுக்கு நடுவே கண்டு போலி கண்ணீர் வடித்தோம். அவ்வளவே,..... நம்மால் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் தர முடியவில்லை........ காரணம்.. அடுத்தவன் வீட்டில் தானே தீ எரிகிறது என்ற சுயநலம், மனிதம் அற்ற குணம் தானே.... ???
இதைத்தான் இந்த பக்கம் வலியுறுத்துகிறது... “ நாம் மாறுவோம்... பின்பு அரசியல் மாறும் “

இதேப்போன்று தான் மீனவர் பிரச்சினையும்... முதலில் தமிழக மீனவர்கள் என்று சொல்வதை விட இந்திய மீனவர்கள் என்று ஊடகங்கள் சொல்லி பழகட்டும்.. பிர்ச்சினையின் வலிகள் மற்ற மாநிலங்களுக்கும் தெரியும்.
ஊடக வியாபாரிகளின் சூழ்ச்சியில் இருந்தும் நாம் மீள வேண்டும் என்றே தோன்றுகிறது.



இந்த பக்கம் உருவானது நமக்கு பல சிந்தனைகளை கொடுத்து இருக்கிறது.. ஒட்டு மொத்தமாக அனைத்து கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்.. நான் புறக்கணிக்கிறேன். ஆனால் வாக்கு அளித்து புறக்கணிக்கிறேன்..

ஆனா நீங்க ...? எல்லாரும் எவன் ஆண்டா என்ன ? எவன் செத்த என்ன? அரைக்க இலவச மிக்சியும், கிரைண்டரும், திங்க இலவச அரிசியும்... குடிக்க டாஸ்மாக் சாராயமும். மெகா சீரியல் பார்க்க இலவச டிவியும்.. இண்டர்நெட் ல கண்டத பார்க்க இலவச லேப்டாப் இருக்குல்ல.. அத வச்சிட்டு ஜாலியா இருங்க. இன்னும் இலவசம் தருவாங்க...
வரிசைல நின்னு வாங்கிக்கங்க.......... வாழ்க ஏமாளிகளே !! வளர்க மோமாளிகளே !! =============

என்று அதிகப்படியான ஆவேசத்தால் கண்டித்தே பதிவு செய்தான் ராஜ்குமார்...

“ இது கொஞ்சம் டூ மச் ராஜ்குமார் “ மாணிக்கம்
“ அடப்போங்க அண்ணா.. கேள்வி கேட்க தெரியுதுல........ அவங்களுக்கு சொரணை இருக்கான்னு பார்க்கலாம் “ ராஜ்குமார் ஆவேசமாக முரண்படுகிறான் .

” சரி சரி விடுங்கப்பா “ அன்சாரி அவனை அமைதிப்படுத்தி மேலே தொடர்கிறார்.. “ எனக்கு தெரிந்த ஆபிஸ்ர்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் இந்த பக்கத்தை பற்றி பேசி இருக்கேன்.. அவங்களும் வரவேற்றாங்க.. நல்ல விஷயம் . இன்னும் இத பப்ளிசிட்டி பண்ணனும்.. மேலும் வாரப்பத்திரிக்கை, தினசரி நாளிதழ் , டிவி மூலமா இந்த பேஸ்புக் பக்கத்தில் உள்ள கருத்துக்களை சாமானிய மக்கள்கிட்ட கொண்டு சேர வைக்கணும்ன்னு சொல்றாங்க.. பட் அவங்க கேட்கிற ஒரே கேள்வி ... இந்த பக்கம் யாரால் உருவாக்கப்பட்டது.......? .. “ என்று அன்சாரி சொல்லி முடிக்க

ஜாஸ்மீன் தொடர்கிறாள் “ அப்பா,,,,,,,, இத மீடியா மூலமா பப்ளிசிட்டி பண்ணும் போது பொலிடிக்கல் லீடர்ஸ் இந்த பேஜ் தடை செய்ய முயற்சி பண்ணுவாங்க. கவர்மெண்ட் கூட சைபர் கிரைம் மூலமா தடை செய்யலாம் இல்லையா ?

ஜாஸ்மீனின் சந்தேகம் அனைவரையும் சிந்திக்க வைத்தது,..........

அப்போது ராஜ்குமார்.................. “ அன்சாரி அப்பா.. ! நான் ஒன்று சொல்லவா ........? “ என்றான்//

என்ன சொல்லப்போகிறான்..............? ஆவலுடன் அனைவரும்.


--------------------(தொடரும் )-----------------

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (28-Oct-13, 9:22 pm)
பார்வை : 231

மேலே