அரசியல் அரசியல்வாதி 11

----------------- தொடர்கதை : இரா .சந்தோஷ் குமார் /


அந்த செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட “செய்தி தொகுப்பு”

===============================================
முகநூல் எனப்படும் பேஸ்புக் -இல் கடந்த சில நாட்களாக உலவுகிறது ஒர் பரபரப்பான கோஷம் “அரசியல்வாதிகளை புறக்கணிப்பது” ஃபேஸ்புக்கில் “மாற்றம் தேவையெனில் நாம் மாறுவோம் “ என்ற தனிப்பக்கம் குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒர் சிலரால் நடத்தப்படுகிறது. அதை இதுவரை 25 லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஒர் இணையதளத்தில் பிளாக்கர் எண்ணிக்கையில் இது மிகவும் சாதனை படைத்துள்ளது. அதில் இளைஞர்களிடையே பரிமாறிக்கொள்ளும் முக்கிய செய்தி... “ தற்போதுள்ள அரசியல்வாதிகளை அனைவரையும் புறக்கணிக்க வேண்டும். ஆனால் ஓட்டுப்போட போவோம். 49 ஒ க்கே எங்கள் ஓட்டு”. இத்தகைய அரசியல் மாற்றத்திற்கான இந்த கோஷம் அனைத்து தரப்பினருக்கும் பரவிவிட்டது என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடு முழுக்க இதுதான் மக்களின் ஹாட் டாப்பிக்.

“நாளைய விடியல் “ செய்திகள் தொலைக்காட்சி சார்பாக மக்களிடம் இதுப்பற்றி கேட்டோம்.

அதற்கு மக்கள் அளித்த பேட்டி.. தமிழ்நாட்டின் எல்லா பகுதியிலும் இருந்து பதிவு செய்யப்பட்டது... அவைகளில் சில.........

”ஆமாங்க.. எல்லாரும் நம்மை ஏமாத்துறாங்க, அதுக்கு அரசியல் அமைப்பு விதிகளை யாரும் கடைப்பிடிப்பது இல்லைன்னு, இப்போ இருக்கிற அரசியல்வாதிங்க பணத்தை சம்பாதிக்கதான் அரசியல்ல இருக்காங்க.. அவங்கள புறக்கணிக்கனும்ன்னு என் பொண்ணு சொல்லுறா .. அவ சொல்வதில் அர்த்தம் இருக்கு.. அதுனால நான், என் குடும்பம், எங்க சொந்தகாரங்க எல்லாரும் “49 ஒ” முறையில அரசியல்வாதிங்க யாருக்கும் வாக்கு அளிப்பதில்லைன்னு முடிவு பண்ணிட்டோம் “ அம்பிகா - கன்னியாகுமரி

”இது எல்லாம் சரிப்பட்டு வருமா? .. அரசியல்வாதிங்க யாரும் வேண்டாம்ன்னா யாரு ஆட்சி அமைப்பது........? லூசுப் பய எவனோ சொல்றான்னு நாம கேட்கமுடியுமா “ ** சங்கரன் -மதுரை


“+2 படிக்கிற எம் மகன் எப்போ பார்த்தாலும் கம்யூட்டரே கதின்னு இருப்பான்.. அவன் என்கிட்ட அரசியல்வாதிங்கன்னா ஊழல்தானே பண்ணுவாங்க...? வேற அரசியல்வாதியை நாம் உருவாக்கணும்னு சொன்னான்.. அப்போ எனக்கு புரியல. ஆனா இப்போ ஊரு முழுக்க இதே பேச்சால்ல இருக்கு,, பார்ப்போம் , எதுவும் சொல்ல தோணல.” மல்லிகா- சங்கரன் கோவில்

“மாத்திதான் பார்ப்போமே.. என்ன தப்பு “ அபிசேக்- கோவை
“ தெரியல... யோசித்துபார்த்தா... 49 ஒ க்கு நான் ஓட்டளிச்சா தப்பு இல்லன்னு தோணுது “ - மணி. சீர்காழி

“அப்படி யாருமே இல்லன்னா,,, ராணுவ ஆட்சியா நடக்குமா.. இலவசத்த கொடுத்து கெடுத்து வச்சிடுங்க, இன்னும் எதுவும் முடிவு பண்ணல “ அலமேலு- காஞ்சிபுரம்


இதுபோன்று பலதரப்பட்ட பதில்கள் வந்தன. மக்கள் சிந்திக்க துவங்கி விட்டார்கள் என்று உறுதியாக கூற முடியாது. அரசியல்வாதிகளுக்கு எதிராக ஏதாவது நக்சல் அமைப்பு இதுப்போன்ற விஷமங்களை பரப்பி இருக்கலாம் என்றும் பொதுமக்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஃபேஸ்புக் மூலமாக அரசியல் மாறுமா? அடுத்த மாத சட்டப்பேரவை தேர்தலின் “ரிசல்ட்” எப்படி இருக்கும்..? இந்த பரபரப்பாக உலவும் ”புறக்கணிப்பு “ கோஷம் வெறும் வெற்று கூச்சலாகுமா? இல்லை புரட்சி உண்டாக்குமா? பொறுத்திருந்து பார்போம்.

நாளை விடியல் செய்திக்காக சென்னையிலிருந்து ஒளிப்பதிவாளர் குமார் உடன் இன்பா.

===============================================


“ என்ன ராஜ் ? ஒரே குழப்பமான சூழ்நிலையில இருக்காங்க போல .. “ மாணிக்கம்

”இல்லை அண்ணா.. இதெல்லாம் சேனல்காரங்க கிளப்புற எதிர்மறையான திணிப்பு.. ஊடகத்துறை புத்தி இது. இந்த செய்தி தொகுப்புல பதிவு பண்ணின அனைத்தையும் நாம் பார்க்கணும். டிவிகாரங்க எடிட் பண்ணி போட்டு இருக்காங்க. நாளை விடியல் ரிப்போர்ட்டர் அன்பழகன் என் ஃபிரெண்ட் அவன் டீம்தான் இந்த மக்கள் கருத்து செய்தி தொகுப்பை எடுத்தாங்க.. அவன் கிட்ட கேட்டா எல்லாம் தெரியும்” என்ற ஜாஸ்மீன் அந்த டிவி ரிப்போர்ட்டாருக்கு போன் செய்கிறாள்..

நீண்ட நேரம் பேசிவிட்டு..................

” ராஜ்.. மக்கள்கிட்ட பேட்டி எடுத்த எல்லா விவரமும் என்கிட்ட சொன்னான். ம்ம்ம் அவன் சொன்னத பார்த்தா... நம்ம போட்ட திட்டம் வெற்றி பெறலாம்.. ஆனா.... கடைசி நேர மக்கள் மனநிலை மாறக்கூடும். சோ நாம அலார்ட்டா இருக்கணும்”

”சரி அக்கா... பார்க்கலாம்.. எனக்கு என்னவோ எல்லாம் சரியாகத்தான் போயிட்டு இருக்கு ” ராஜ்குமார்

”ஆமா ராஜ்.. இன்னும் 8 நாள் இருக்கு.. அது வரைக்கும் நாம விடாம முயற்சி பண்ணுவோம். தகவல் பரப்பிகிட்டே இருக்கணும்.. அரசியல்வாதிங்களை புறக்கணிக்கும் முடிவு மக்கள்கிட்ட ஸ்ட்ராங்கா இருக்கன்னு தோணுது.. “ அன்சாரி ஆருடம் சொல்கிறார்.

அப்போது அந்த ஆளும் கட்சியில் ராஜ்குமார் அமைச்சரின் உதவியாளரிடமிருந்து அன்னசாரிக்கு போன் அழைப்பு வருகிறது...

“ வணக்கம் , சொல்லுங்க “

-------------

“ஒஹோ .. சரி, மாத்திடலாம். “

------------

“ம்ம் கவனமா பார்க்கிறேன்.. “

--------------

” நன்றி “

ஒன் பேட் நீயுஸ்....... புதிர் போடுகிறார்.. அன்சாரி.......

என்ன ? என்ன ? அனைவரும் கேட்கின்றனர்..

”நம்ம ஃபேஸ்புக் ஆப்ரேட் பண்ணும் இடத்தை டிரேஸ் பண்ணிட்டு இருக்காங்களாம்... மாட்டிகிட வாய்ப்பு இருக்கலாம்ன்னு அமைச்சர் பிஏ நமக்கு தகவல் சொல்கிறார். ”

“அன்சாரி அப்பா... அதுக்கு நாம கவலை பட தேவையில்லை... இந்த MTNM பேஸ்புக் பேஸ் கனடாவில் இருந்துதான் ஆப்ரேட் பண்ணப்படுகிறது.. நானும் சரி, அக்காவும் சரி, இதுவரை அந்த பேஜ்யை இங்க, இந்தியாவில நாங்க லாக்கின் பண்ணல. டிரேஸ் பண்ணினா.. கனடாவுக்கு தான் போகும்.. அதுவும் அவ்வளவு ஈசி இல்ல. நாம எல்லாரும் ஒர் பார்வையாளராதான் இந்த பேஜிக்கு கமெண்ட்ஸ் போட்டோம்.. இப்படி ஒரு ப்ராப்ளம் வரும்ன்னு நினைச்சுதான் ஜாஸ்மீன் அக்காகிட்ட வெளிநாட்டிலிருந்து பேஸ்புக் பக்கத்தை உருவாக்க சொன்னேன் “

“ பலே கேடிடா நீ.. எப்படிடா உனக்கு இந்த அளவிற்கு மூளை வேலை செய்யுது.. ? “

“ அறிந்து கொள்ளும் ஆர்வம் தான் அப்பா . என்னால இலங்கை அரசியலும் பேச முடியும், இந்திய அரசியலையும் பேசமுடியும். உலக அரசியல் வரலாற்றையும் சொல்ல முடியும். செவ்வாய் கிரகத்தில் என்ன என்ன இருக்குன்னு சொல்ல முடியும்,, எல்லாம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன். “ ராஜ்குமார் தன் புத்திசாலி தனத்திற்கு விளக்கம் சொல்ல

ஜாஸ்மீன் “ கிரேட் டா........ உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு “

“பார்போம் அக்கா..... எதுவும் எப்பவும் மாறக்கூடும்.. ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு தேவை... “ பெரிய தத்துவத்தை அசல்ட் டாக என்று பேசும் ராஜ்குமாரை ஆர தழுவுகிறார் அன்சாரி

----------------------------------------------------------

இவர்களுது அரசியல் மாற்றம் திட்டத்தின் படி முகநூல் உட்பட அனைத்து ஊடகங்களிலும் தேர்தல் பிரச்சாரத்தை தாண்டி இந்த “புறக்கணிப்பு “ கோஷம் பரபரப்பாக பேசப்பட்டது..

மக்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் தேர்தல் நாள் வந்தது...

வாக்கு பதிவான அன்று மாலை ஊடகங்களில் வந்த செய்தி

===தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று சிலசில வன்முறைகளுடன் நடந்து முடிந்தது, தமிழகம் முழுக்க மக்கள் அதிக அளவில் வாக்களித்தனர். வரலாற்றில் இதுவரை இல்லாத வாக்குப்பதிவு இந்த தேர்தலில் பதிவாகி உள்ளது..
மொத்த வாக்குபதிவு சதவீதம் : 91 %

தேர்தலுக்கான முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தமிழக தேர்தல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..

இந்த தேர்தலில் யார் ஆட்சி அமைப்பார்கள் ? என்பதை விட அரசியல்வாதிகளை “புறக்கணிக்கும் “ கோஷம் வெற்றி பெறுமா ? அல்லது வழக்கம்போல அரசியல்வாதிகள் சாணக்கியத்தனம் வெற்றி பெறுமா ? என்பதே மிக முக்கியமாக பார்க்கப்படும். ===========

-----------------------------------------------------------

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள் நெருங்கியது.

*** வானத்தில் மேக கூட்டங்கள் இல்லை.. ஆனால் அன்று மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி சொல்கிறது.. அறிவியல் சொன்னது உண்மையாகுமா? காய்ந்த பூமியில் இருக்கும் வாடிய பயிர்கள் வானத்தை நோக்கி ஆர்வமாக, ஏக்கமாக பார்க்கின்றன.********


------------(தொடரும்)---------------------

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (2-Nov-13, 2:37 am)
பார்வை : 300

மேலே