பாசம்

விஜயதசமி என்பதால் பையனை புதிதாக பள்ளியில் சேர்க்க வந்த இடத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கிருந்த சேரில் அமர்ந்தேன். பக்கத்து சேர் காலியாக இருந்தும் விஷ்ணு வை தூக்கி மடியில் வைத்துக் கொண்டேன்.

'அம்மா நா இந்த சேர்ல உட்கார்றேன்' என்றவனை மடியிலிருந்து இறக்க மனமில்லாமல் 'இன்னும் நிறைய பேர் வருவாங்க தம்பி சும்மா அம்மா மடியிலேயே உட்கார்' என்றதும் என்னை அண்ணாந்து பார்த்தவன் எதுவும் சொல்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் ஜாலியாகத்தான் இருக்கான் எனக்குத்தான் என்னமோ செய்தது. தனியா எப்படி இருப்பான். அழுது வீட்டுக்கு போகனும்னு அடம் பிடித்தால் என்ன செய்வாங்க...

'அம்மா நீங்க போய் பணம் கட்டுங்க' என்றதும் விஷ்ணுவை அழைத்துச் சொன்று பாரத்தை பூர்த்தி செய்து பணம் கட்டி முடித்ததும் அங்கிருந்த மேடம் ' நீங்க கிளம்புங்கம்மா இன்னைக்கு முதல் நா னாலா 12 மணிக்கு வந்து கூப்பிட்டுக்கோங்க நாளையிலிருந்து லஞ்ச் கொடுத்து விட்டுறங்க சரியா' என்றவர் 'ஆயாம்மா' என்றழைத்ததும் வந்த ஆயாம்மாவுடன் விஷ்ணு டாடா சொல்லிட்டு போய்விட்டான்.

வீட்டிற்கு வந்ததும் எனக்குத்தான் கஷ்டாமாயிருந்தது. எப்படா 12 ஆகும் என்றிருந்து பதினொன்றரைக்கே கிளம்பி ஸ்கூலுக்குப் போய் விஷ்ணுவை கூட்டி வந்தவுடன் அவனிடம் கேட்டேன்.

'என்ன விஷ்ணு அம்மாவை விட்டுட்டு இருக்க கஷ்டமா இருந்துச்சாப்பா'

' இல்லம்மா ஆனா நா இல்லாம நீ வீட்டுல தனியா இருப்பியே ன்னுதான் கஷ்டாமாயிருந்துச்சு' என்றான்

எழுதியவர் : வீ.சக்திவேல் (12-Nov-13, 8:31 pm)
Tanglish : paasam
பார்வை : 228

மேலே