தேநீர் வந்த கதை

எங்க ஊருக்கு தேநீர் வந்த கதை தெரியுமா உங்களுக்கு?
எங்க ஊர் என்ன அநேகமா எல்லார் ஊருக்கும் இப்படி தான் அது வந்துருக்கும்னு நெனக்கிறேன்.

நான் என்ன சொல்லவறேன்னா,கிட்டத்தட்ட 1940களின் ஆரம்ப காலகட்டம் எங்க ஊருக்கு அப்ப தான் தேநீர்னு ஒன்னு அறிமுகம் ஆகுது.

எப்படினு கேளுங்க?

நானெல்லாம் பெறக்கவே இல்ல அப்ப.அப்புறம் எப்டி தெரியும்னு கேளுங்க,எல்லாம் கண்டதும் கேட்டதும் தாங்க.


ஆங்கிலேயர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா? அவங்களுக்கு பிடிச்ச அந்த டீய நம்ம எல்லாரையும் குடிக்க வச்சாங்க.எப்படினா வீட்டுக்கு ஒரு குவளைல தேநீர் தருவாங்களாம் அதுவும் இலவசமா.இப்டி ஒரு நாள் ரெண்டுநாள் இல்ல ஒரு மாசமா குடுத்தாங்களாம்.எங்க வீட்டு ல அத குடிக்க தினமும் ஒரு அடிதடி சண்டையே நடக்குமாம்,ஏனென்றால் அது அவ்ளோ சுவையா இருக்குமாங்க."நான் அப்ப குடிச்ச தேநீர் மாதிரி என் வாழ்கைல அடுத்து எப்பவுமே அவ்ளோ ருசியா குடிச்சதே இல்ல" அப்டின்னு எங்க பாட்டி சொல்லிகேற்றுகேங்க.நமக்கு தான் வெளிநாட்டுகாரன் என்ன அறிமுகப்படுதுனாலும் ரொம்ப பிடிக்குமே.அப்ப இருந்து குடிக்க ஆரம்பிச்சவன் தான் இன்னும் குடிக்கிறோம் குடிக்கிறோம் குடிச்சிட்டே இருக்கோம்.சொல்லபோனா இங்கிலாந்த்ல கூட இத்தனை டீ கடை இருக்காது,அப்ப பாத்துகோங்க நம்ம அந்நிய பொருளுக்கும் அந்நிய பழக்க வழக்கங்களுக்கும் எவ்ளோ அடிமை ஆயிட்டோம்னு.
விழித்திடு தமிழா!
அந்நிய பழக்கங்களையும் கற்றுக்கொள்,ஆனால் சொந்த பண்பாட்டையும் கலாசாரத்தையும் மறந்துவிடாமல்.

எழுதியவர் : துரைவாணன் (3-Dec-13, 9:52 pm)
சேர்த்தது : துரைவாணன்
பார்வை : 569

மேலே