கருத்து

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன்
பகிந்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.

இன்று தமிழ் நாட்டில் நம்
அரசாங்கம்
மது கடைகளை திறந்து சிறப்பாக
செயல்ப்படுத்தி பல்லாயிரம்
கோடிகளையும் லாபம்
ஈற்றி வருகிறது.

அதனால் யாருக்கு என்ன பயன்?

நம் நாட்டின் முதுகெலும்பு என
கருதிய விவசாயம்
இன்று மிகவும் நலிவடைந்த
தொழிலாக மாறி வருகிறது.

விவசாய நிலங்கள் எல்லாம் PLOT
ஆக மாறி வருகிறது இதனால்
கூடிய விரைவில் நம்
நாடு உணவு பொருட்களுக்காக
மற்ற நாடுகளிடம் கை ஏந்தும்
நிலை வரலாம்.

அதனால் நமது அரசு ஏன்
விவசாயத்தை நடத்த கூடாது?

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன்
தரம் வாரியாக
பிரித்து அதற்கென
ஒரு துறை அமைத்து அதனை விவசாய
துறை அமைச்சகதிடம் ஒப்படைக்க
வேண்டும்.
• இதில் விவசாயம் படித்த
பட்டதாரிகளை மேற்பார்வையாளர்
களாக நியமிக்க வேண்டும்.
• விவசாய
வேலை ஆட்களை அரசு வேலை போல
நியமனம் செய்ய வேண்டும்.

இதனை ஒரு பொது துறை நிறுவனம்
போல செயல்படுத்த வேண்டும்.
• ஒவ்வொரு மாவட்டத்திலும்
விவசாய ஆராய்ச்சி மையம்
செயல் படுத்தவேண்டும். இதன்
மூலம் புதிய தொழில்
நுட்பங்களை உருவாக்கி விவசாய்திற்கு பயன்படுத்த
வேண்டும்.
• இயற்க்கை வேளாண்மையும்
செயல்படுத்த வேண்டும்.
இவை நடந்தால்?
• நம் நாடு உணவு உற்பத்தியில்
முதலிடம் பெறும்
• உணவு ஏற்றுமதி அதிகரிக்கும்
• விவசாயம் அழியாமல்
பாதுகாக்க முடியும்
• நாட்டில் பண வீக்கம் அரசின்
கட்டுபாட்டில் இருக்கும்
• வேலை இல்ல திண்டாட்டம்
ஒழியும்.
இன்னும் பல……………………………………..
ஏன் அரசாங்கம் டாஸ்மாக் நடத்தும்
போது விவசாயம் செய்ய
முடியாதா?

எழுதியவர் : அஷ்வின் (13-Dec-13, 10:57 am)
Tanglish : karuththu
பார்வை : 358

மேலே